சங்கத்து உறுப்பினர்களை சந்தோசப்படுத்தும் தலைவி!

|

சாமியாடி நடிகை சின்னத்திரையில் வில்லி, காமெடி என கலந்து கட்டி நடித்து வருகிறார். சின்னத்திரை சங்கத்திற்கு தலைவியான பின்னரும் சீரியல்களும், சினிமாவும் தொடர்ந்து வருவதால் சங்கத்தை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.

இதுபற்றி எதிர்கோஷ்டிகள் புகார் வாசிக்கவே, பதவியை பட்டென்று ராஜினாமா செய்தார். ஒரே நாளில் ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இப்போது சங்கத்து நிகழ்ச்சிகளில் பிஸியாக பங்கேற்கிறாராம்.

டப்பிங் சீரியல்களுக்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் இருந்த உண்ணாவிரதம் பலனளிக்கவே நட்சத்திரங்கள் பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனராம். அதோடு மட்டுமல்லாது சங்கத்தின் நிதியை அதிகரிக்க கலைநிகழ்ச்சியும் நடத்தி வெற்றி பெற்றுள்ளாராம். இதனால் சங்கத்து கணக்கில் பணம் ஓரளவு கையிருப்பு சேர்ந்துள்ளதாம். அதை வைத்து சிரமத்தில் உள்ள சின்னத்திரை சங்க உறுப்பினர்களுக்கு நற்பணிகளை செய்யப்போகிறாராம்.

படிப்பில் படுசுட்டியாக உள்ள சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பொறியியல் கல்லூரியில் இலவசமாக சீர் வாங்கி கொடுத்துள்ளாராம் தலைவி. தலைவியின் செயல்பாடுகள் சங்க உறுப்பினர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

 

Post a Comment