சென்னை: அஜித்தின் புதிய படத்தை தற்போது சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது அரதப் பழசான செய்தி, படத்தில் 16 வருடங்களுக்குப் பின் விநாயகர் பாடல் தல அஜித்தின் ஓபனிங் பாடலாக இருப்பது புதிய செய்தி.
ஆமாம் வான்மதி படத்தில் இடம்பெற்ற பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா என்ற பாடலையும், அமர்க்களம் படத்தில் வந்த பாடலையும் தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்கள் கழித்து அஜித் நடித்து வரும் புதிய படத்தில் விநாயகர் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அஜித் - ஷாலினி முதல்முறையாக இணைந்த அஜித்தின் 25 வது படமான அமர்க்களம் படத்தில் விநாயகர் பாடலாக காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்று ஆடிப்பாடிய ராகவா லாரன்ஸ் தான் நடனமாடிய முதல் பாடலுக்கே எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றார். அதே போன்று இந்தப் பாடலும் அடுத்த ஒரு ஹிட்டான விநாயகர் பாடலாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அனிருத் இசையமைப்பில் உருவாக்கி வரும் இந்தப் படத்தில் இதுவரை 2 பாடல்கள் தயாராகி விட்டன, ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் 150 பேர் ஆடிப்பாடி இருக்கும் பாடல் ஒன்று படத்தில் இடம்பெற உள்ளது.
அது இந்த விநாயகர் பாடலாக இருக்கலாம் என்றும் இந்த பாடலில் லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் இடம்பெறுகிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
எல்லோருக்கும் ஹீரோ நீதான்பா கணேசா...!
Post a Comment