பாகுபலி படத்தை முதலில் ரஜினிகாந்துக்குக் காட்டவே விரும்புவதாக நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் கூறினர்.
பாகுபலி படத்தின் ட்ரைலர்தான் இன்றைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்த ட்ரைலரை இணையத்தில் நேற்று வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் பங்கேற்றனர்.
அப்போது பாகுபலியை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனுஷ்கா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.
இதே கேள்வியை பிரபாஸுடம் கேட்டபோது, அவரும் 'ரஜினிகாந்துக்குதான் இந்தப் படத்தை முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.
பாகுபலி படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரை ஆந்திரா - தெலங்கானா முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலவசமாகத் திரையிட்டுக் காட்டினர். திரையிட்ட அத்தனை அரங்குகளில் ட்ரைலரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment