விவேக்கின் பாலக்காட்டு மாதவன் ஜூன் 26-ம் தேதி ரிலீஸ்!

|

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் ‘நான்தான் பாலா' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பாலக்காட்டு மாதவன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இப்படத்தை சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.

Vivek's Palakkattu Madhavan from June 26th

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

குடும்ப பின்னணியில் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது. சமீபத்தில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஜூன் 26-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்' படம் நாளை வெளியாகவுள்ளது. அதற்கு அடுத்து வாரமே வடிவேலு நடித்த ‘எலி' படம் வெளியாகவுள்ளது.

 

Post a Comment