பாகுபலியுடன் மோதும் மகேஷ் பாபு

|

ஹைதராபாத்: டோலிவுட்டின் இளவரசர் மகேஷ் பாபுவின் புதிய படமான ஸ்ரீமந்துடு படமானது ராஜமௌலியின் பாகுபலியுடன் போட்டியிட இருக்கிறது. நடிகர் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படம் கோடை விருந்தாக திரைக்கு வர இருந்தது. ஆனால் அதே சமயத்தில் உலக அளவில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் பாகுபலி படமும் வெளியாகலாம் என்று எழுந்த தகவல்களால் ஸ்ரீமந்துடு படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது.

பாகுபலியிடன் மோதினால் நமது படம் வசூலில் பின்தங்கி விடும் என்று தள்ளி வைக்கப்பட்ட மகேஷ் பாபுவின் படத்தை தற்போது பாகுபலி படத்துடன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் . இது தெலுங்குத் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை உறுதி செய்வதுபோல பாகுபலி படத்தின் டிரைலர் வெளியான அன்றே ஸ்ரீமந்துடு படத்தின் டிரைலரும் வெளியானது.

Baahubali Vs Srimanthudu

இது தற்செயலாக நடந்தது என்று கூறிய படக்குழு தற்போது நேரடியாகவே பாகுபலியுடன் மோதப் போகின்றனர். என்னதான் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சரித்திரப் படத்துடன் நேரடியாக மோத மகேஷ் பாபு துணிந்தது தான் பலருக்கும் ஆச்சரியம்.

தற்போதைய நிலவரப்படி தெலுங்குத் திரையுலகினர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் ஏதாவது ஒரு படத்தின் வசூல் குறைய வாய்ப்பு உள்ளது, எனவே யாராவது ஒருவர் உங்கள் படத்தை சற்றுத் தள்ளி வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் மகேஷ் பாபு இதற்கு செவி சாய்க்கவில்லை என்பதோடு தனது முடிவில் இருந்தும் பின்வாங்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Post a Comment