நடிகர் விதார்த் திருமணம்.. திருப்பதியில் இன்று நடந்தது!

|

திருப்பதி: நடிகர் விதார்த் - காயத்ரி திருமணம் இன்று காலை திருப்பதி திருமலையில் நடந்தது.

தமிழில் கவுதம் மேனன் இயக்கிய ‘மின்னலே', ‘லாடம்' உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த விதார்த், பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

Actor Vidharth marriage held at Thiruppathi

அதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்த விதார்த், கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்தார்.

இவருக்கும், பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பவரின் மகள் காயத்ரிக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடந்தது.

இவர்களது திருமணத்திற்கு நடிகர் ராதாரவி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், இந்த திருமணத்தில் விதார்த்-காயத்ரி இருவருடைய குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 17-ந் தேதி சென்னை வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

 

Post a Comment