பேயாக நடிக்க மறுத்து, மகனுக்காக ஒப்புக் கொண்ட சத்யராஜ்!

|

பெரியாரின் கொள்கைப்படி சாமி, பேய், பூதம் சமாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்த சத்யராஜ், தன் மகன் சிபிராஜுக்காக ஒரு படத்தில் பேயாகவே நடிக்கிறார்.

நாய்கள் ஜாக்கிரதை' வெற்றிக்குப் பிறகு சிபிராஜ் நடிக்கும் படம் ‘ஜாக்சன் துரை'. இப்படத்தை ‘பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார்.

Sathyaraj turns ghost in Jackson Durai

சிபிராஜுக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாசெரி தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ஜாக்சன் துரை படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 25 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தந்தை சத்யராஜ் பேயாக நடிக்கிறார்.

பேய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியபோது, முதலில் அதில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர், கதையின் முக்கியத்துவம் புரிந்து, பேயாக நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.

 

Post a Comment