கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த இந்தியா சர்வேச திரைப்பட விருது விழாவின்போது அனுஷ்கா சர்மாவுக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் இடையே கசமுசா ஏற்பட்டு பிரியங்கா சோப்ரா பாதியிலேயே விழாவை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
இத்தனைக்கும் இரண்டு பேரும் ரொம்ப நல்ல மாதிரியாகத்தான் பழகி வந்தனர். இருவரும் இணைந்து தில் தடக்னே தோ படத்திலும் கூட நடித்துள்ளனர். இதன் பிரமோஷன் வேலைகளிலும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் ஈஷிக் கொண்டு உற்சாகத்துடன் வளையவும் வந்தனர். ஆனால் இடையில் என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ.. கோலாலம்பூரில் வைத்து ஆளுக்கு ஒருபக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டனர்.
கோலாலம்பூரில் நடந்த ஐஐஎப்ஏ விருது விழாவில் பிரியங்கா சோப்ரா டான்ஸ் ஆடுவதாக இருந்தது. இந்த நிலையில் திடீரென அது ரத்தாகி விட்டது. இதற்கு பிரியங்காவுக்குக் காரணம் தெரியவில்லை, தெரிவிக்கப்படவும் இல்லை.
அதேசமயம், அனுஷ்கா சர்மாவின் நடனம் இடம் பெறுவதாகவும், அதுவும் தில்.. படத்தின் பாடலுக்கு அவர் ஆடவிருப்பதும் கடைசி நேரத்தில் பிரியங்காவுக்குத் தெரிய வர டென்ஷனாகி விட்டாராம் பிரியங்கா சோப்ரா.
இதனால் பாதியிலேயே விழாவை விட்டு வெளியேறி விட்டார் பிரியங்கா சோப்ரா. தன்னை ஆட விடாதது, ஆனால் அனுஷ்காவை மட்டும் ஆட விட்டதால்தான் பிரியங்கா கோபித்துக் கொண்டு போய் விட்டதாக கூறுகிறார்கள்.
அதேசமயம், நிகழ்ச்சிக்கு சரியான முறையில் ஏற்பாடுகள் செய்யாததால்தான் பிரியங்கா கோபித்துக் கொண்டதாக ஒரு தரப்பு செய்தி கிளப்பி வருகிறது.
உண்மையில் என்ன நடந்ததோ அதை பிரியங்காதான் விளக்க வேண்டும்..
ஆ ஊன்னா கோச்சுக்கிறாங்கப்பா..!
Post a Comment