ஹாங்காங்கில் பிறந்து இந்தியாவில் 32 வயதைக் கடந்த காத்ரீனா.. இன்று ஹேப்பி பர்த்டே!

|

மும்பை: பாலிவுட்டின் அழகுப் புயல் காத்ரீனா கைப் இன்று தனது 32 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1983 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி ஹாங்காங்கில் பிறந்த காத்ரீனா இன்று தனது 32 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.

2003 ம் ஆண்டு பூம் என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமான காத்ரீனா ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளிலும் சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Katrina Kaif Turns 32

கிறிஸ்டியன் அம்மாவுக்கும் இசுலாமிய அப்பாவிற்கும் பிறந்தவர் காத்ரீனா, அதனால் இந்து, இசுலாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களில் உள்ள ஆலயங்களுக்கும் அவ்வப்போது சென்று வருகிறார்.

இந்தியாவில் சொந்தக் குடியுரிமை காத்ரீனாவிற்கு கிடையாது, அதனால் சொந்த வீடு இங்கு இல்லை. அமெரிக்க விசாவில் அடிக்கடி வந்து நடித்துக் கொடுக்கும் காத்ரீனாவிற்கு லண்டனில் சொந்தமாக வீடு உள்ளது.

பாலிவுட்டின் மிக அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளில் காத்ரீனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்தியாவில் விளம்பர உலகின் முடிசூடா மகாராணியாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறார் காத்ரீனா கைப்.

இந்தியாவில் இருந்து எத்தனையோ நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர், ஆனால் விளம்பர உலகைப் பொறுத்தவரை தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது காத்ரீனா தான்.

இந்த வருடம் பிராண்ட் டிரஸ்ட் நடத்திய என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக அளவில் விளம்பரங்களில் நடித்து முதலிடத்தில் காத்ரீனா இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் இவர் நடித்த விளம்பரங்களின் மூலம் சந்தையில் அந்தப் பொருட்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் அந்த நிறுவன ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலே சொன்ன காரணங்களால் விளம்பர உலகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் காத்ரீனா. பாலிவுட் நடிகர் ரன்பீரும் காத்ரீனாவும் காதலிப்பது உலகறிந்த ஒன்று, இதனால் இவர்கள் இருவரின் திருமணத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த பிறந்தநாளில் பர்பி நடிகர் அழகுப் புயலுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை, பார்க்கலாம்.

 

Post a Comment