இயக்குநர் மிஷ்கினின் லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ் அடுத்த படத்தை அறிவித்துள்ளது.
சவரக்கத்தி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கிறார். மிஷ்கினின் உதவி இயக்குநரான ஜிஆர் ஆதித்யா இயக்கும் இப்படம் இன்று தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று பரிணாமங்களை ஏற்றுள்ளார் மிஷ்கின்.
இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறுகையில், "நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம்.. அதுதான் இந்தப் படம்," என்றார்.
தங்க மீன்களுக்குப் பிறகு இயக்குநர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தான் முன் ஏற்றிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் மிஷ்கின் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
‘சவரக்கத்தி' படத்திற்கு பிசி ஸ்ரீராமின் உதவியாளர் விஐ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிசாசு' புகழ் அரோல் குரோலி இசையமைக்கிறார்.
Post a Comment