12/22/2010 10:46:15 AM
தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டியின் மகன் ஆதி. 'மிருகம்', 'ஈரம்', 'அய்யனார்' படங்களில் ஹீரோவாக நடித்தார். தமிழ் படங்களில் நடிப்பதற்காகவே சென்னையில் குடியேறியுள்ளார்.
'அரவான்' படத்துக்குதான் சிக்ஸ்பேக்கா?
'அரவான்' படத்தில் நடிப்பதற்கு முன், உடல் எடையை குறைக்கச் சொன்னார் வசந்தபாலன். அதன்படி குறைத்து, சிக்ஸ்பேக் வருமாறு பார்த்துக் கொண்டேன். தாடி, மீசை வளர்த்தேன். வசந்தபாலன் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி வெற்றிபெறும் இயக்குனர். சினிமாவில் எனக்கு நல்ல அடையாளம் ஏற்படுமேயானால், அதற்கு 'அரவான்' பலமாக இருக்கும்.
'ஆடு புலி' ரீ-டேக் அனுபவம்?
மூன்று தலைமுறையினர் இணையும் படம். குடும்ப உறவுகளின் உன்னதத்தை விவரிக்கும் கதை. பிரபு, அனுபமா மகனாக வருகிறேன். தாத்தா, பாட்டியாக ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடிக்கிறார்கள். அனுபவத்திலும், நடிப்பிலும் சீனியர்களான அவர்களுடன் நடிக்கும்போது ஏற்பட்ட நடுக்கம் காரணமாக, சில காட்சிகளில் ரீ-டேக் வாங்கினேன். அவர்கள் எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியாது.
சாமியுடனான தகராறு தீர்ந்ததா?
'மிருகம்' படத்தில் அறிமுகம் செய்தார். 'சரித்திரம்' படத்தில் இணைந்தோம். எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து சமாதானமாகி விட்டோம். ஒரே துறையில் இருக்கிறோம். சண்டையோடு இருக்க முடியுமா என்ன?
திருமணம்?
கடந்த 14-ம் தேதி 29 பிறந்துள்ளது. அதற்குள் திருமணமா? எந்த பெண்ணையும் காதலித்தது இல்லை. ஒருவேளை, இனி யாரையாவது காதலிக்கலாம்.
அப்பா வழியில், படம் இயக்குவீர்களா?
தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் 58 படங்கள் இயக்கியுள்ளார் அப்பா ரவிராஜா பினிஷெட்டி. டைரக்ட் செய்யும் ஆசை கண்டிப்பாக உண்டு. முதலில் நன்றாக நடிப்பு கற்றுக்கொண்டு, பிறகு டைரக்ஷனில் ஈடுபடுவேன்.
Post a Comment