ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!!

|

Tags:


மலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.

அது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.

காரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.

ஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எனவே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.

இதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். "கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்", என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.
 

Post a Comment