5/18/2011 3:43:45 PM
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொட்டி பல்வேறு வதந்திகள். அவரது உடல்நிலை சார்ந்த வதந்திகளுக்கு அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார் லதா ரஜினிகாந்த். ராணா குறித்த வதந்திகளுக்கு?
ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் ராணா படமே ட்ராப் என்பதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதனை கடுமையாக மறுத்திருக்கிறார் படத்தை இயக்கும் ரவிக்குமார். படம் ட்ராப் என்பதை திட்டவட்டமாக மறுத்திருக்கும் ரவிக்குமார், தாய்லாந்தில் படத்துக்கான லொகேஷன் தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும், லொகேஷன் தேர்வு செய்வதற்காக விரைவில் லண்டன் செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்காக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் மறுத்துள்ளார். ராணா படப்பிடிப்பு திட்டமிட்டிருப்பதே ஜூன் மாதம்தான் எனவும் அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
Post a Comment