ஒரே நேரத்தில் தனுஷ் - சிம்புவுடன் ஜோடி போடும் ரிச்சா!!

|

Tags:


ஹன்ஸிகா மோத்வானிக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே பரபரப்புடன் பேசப்படுபவர் என்றால் அவர் ரிச்சாவாகத்தான் இருக்கும்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் இப்போதுள்ள தமிழ் சினிமா நாயகிகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறாராம் அம்மணி.

இவரது தாராளம் பார்த்துதான் உடனடியாக ஆன்ட்ரியாவுக்கு பதில் இரண்டாம் உலகத்தில் பிடித்துப் போட்டார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா.

அடுத்த சில தினங்களில், மும்பை நாயகிகளைத் தேடி அலுத்துப் போன சிம்புவிடமிருந்து போன். ஒஸ்தியில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அவர் சொல்ல, மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் ரிச்சா.

"வெற்றிப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. இதற்காக எதையும் செய்யலாம். நடிகையானதன் நோக்கமே வெற்றி பெறுவதுதானே", என்கிறார் ரிச்சா

பிழைக்கத் தெரிந்தவர்!
 

Post a Comment