இன்னும் பத்தே நாளில் ரஜினிகாந்த் வீடு திரும்பி விடுவார்-தனுஷ்

|

Tags:


நடிகர் ரஜினிகாந்த் இன்னும் பத்து நாட்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவையில்லை. இதுதொடர்பாக வெளியான செய்திகள் தவறு.

நன்றாகச் சாப்பிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தியானம் செய்கிறார். மூன்று நாளிலேயே அவர் வீடு திரும்பலாம் என சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் முழுமையான ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தினர்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு அவர் மருத்துவமனையிலேயே இருக்கும் முடிவை எடுத்துள்ளனர்.

இன்னும் 10 நாளில் நடிகர் ரஜினி சென்னை திரும்பவில்லையென்றால், அவர் சுற்றுலாவில் இருக்கிறார் என்று ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ராணா படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொள்வது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் தனுஷ்.
 

Post a Comment