பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி, என் உயிர் நீதானே, கார்மேகம், அழகர் மலை என பல படங்களை இயக்கியவர் ராஜ்குமார். விஜய்யை வைத்து சுறா என்ற அதிரடிப்படத்தைக் கொடுத்தவர். காமெடியில் கலக்கக் கூடியவரான ராஜ்குமார், விஜய் படத்தில் பெரும் சறுக்கலை சந்தித்தார். இத்தனைக்கும் அப்படத்தில் வடிவேலு இருந்தும் படம் போணியாகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் முழு நீளக் காமெடிக்குத் திரும்பியுள்ளார் ராஜ்குமார். இருப்பினும் இந்த முறை அவரது ஆஸ்தான காமெடியன் வடிவேலு படத்தில் இல்லை. மாறாக கஞ்சா கருப்புவுடன் கை கோர்த்துள்ளார். இப்படத்தில் நாயகன் பரதன் புதுமுகம், நாயகி கீத்திகாவும் புதுமுகம்.
முத்துக்காளை, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தில் மும்பையைச் சேர்ந்த பூஜா என்பவர் குத்துப் பாட்டுக்கு செம கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளாராம். பொள்ளாச்சி, ஊட்டி, வால்பாறையில் வைத்துப் படத்தை சுட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் எனது வழக்கமான காமெடியைப் பார்க்கலாம் என்று கூறும் ராஜ்குமார், இது சற்று வித்தியாசமான படமாக இருக்கும், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளேன் என்கிறார்.
பார்க்கிற மாதிரி இருந்தா சரிதான்…!
Post a Comment