6/1/2011 11:51:09 AM
கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை என்று ஆண்ட்ரியா கூறினார். தற்போது அஜீத்தின் 'மங்காத்தா' படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா கூறியதாவது: தமிழில் பாடகியாக அறிமுகமானேன். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடிகை ஆக்கினார் கவுதம் மேனன். இதையடுத்து செல்வராகவன், 'ஆயிரத்தில் ஒருவன்' வாய்ப்பை கொடுத்தார். பாடலோடு நடிப்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடிய, 'ஜாரா ஜாரா' என்ற பாடல் பெரிய ஹிட் ஆனது. இருந்தாலும் தெலுங்கில் அதிக பாடல் வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். அதில் என்ன இருக்கிறது? 'அருந்ததி' போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களும் தெலுங்கில் வருகின்றன. தெலுங்கில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். கிளாமராக நடிப்பீர்களா என்கிறார்கள். ஒரு இயக்குனர் நினைத்தால் உடல் முழுவதும் உடை அணிந்திருந்தால் கூட, அதை ஆபாசமாக காண்பிக்க முடியும். கிளாமர் என்பது உடையில் இல்லை. படமாக்கும் விதத்தைப் பொறுத்தது அது. கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
Post a Comment