பொது இடத்தில் 'குப் குப்'-சல்மானுக்கு 'ஃபைன்'

|

Tags:


பொது இடத்தில் வைத்து தம் அடித்ததற்காக நடிகர் சல்மான் கானுக்கு போலீஸார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

பொது இடங்களில் புகை பிடிக்க இந்தியாவில் தடை உள்ளது. இருப்பினும் இதை தம் அடிப்பவர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. பிரபலங்களே கூட பொது இடங்களில் தம் அடிப்பது சகஜமாகி விட்டது. முன்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து புகை பிடித்தார் ஷாருக் கான். இந்த நிலையில் சல்மான் கான் பொது இடத்தில் புகை பிடித்ததாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டியாலாவில் உள்ள ஒரு இடத்தில் பாடிகார்ட் படத்தின் இந்தி திரைப்படப் படப்பிடிப்பு நடந்தது. இதில் சல்மான் கான் பங்கேற்று நடித்தார். இதற்காக அங்கு வந்துள்ள சல்மான் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுளள்ளார். நேற்று ஹோட்டலை விட்டு வெளியே வந்த அவர் தனது உதவியாளரிடமிருந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து புகையை இழுத்து வெளியே விட்டார்.

அங்கு நின்றிருந்த போலீஸார் இது பொது இடம் இங்கு புகை பிடிக்கக் கூடாது. மீறி புகைத்துள்ளதால் 200 ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என்று கூறி பணத்தை வசூலித்து விட்டனர்.

நேற்று உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் சல்மான் கான் புகை விட்டு சிக்கி அபராதம் கட்டியது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment