6/1/2011 12:47:10 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
தேவியான இசை திடீர்னு சம்பளத்தை உயர்த்தி கேட்டாரு... கேட்டாரு... இதனால சில வாய்ப்புகளை இழந்துட்டாரு. இப்படியே விட்டா மார்க்கெட் சர்ராயிடும்ன்னு பயந்த இசை, சம்பளம் அதிகம் கேட்கிறதா புரளி கிளப்புறாங்க நம்பாதீங்கன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்... விடுறாராம்...
என் படத்துல மழை நடிகை நடிக்கலேன்னு பஞ்சு வீர ஹீரோ சொன்னதை கேட்டும், உலக ஹீரோ படத்துக்கு ஸ்டோரி கேட்டாங்கன்னு வந்த தகவலாலும் நடிகை மூட் அவுட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... Ôஎன்னை படத்துக்கு புக் பண்ணிட்டு, நீக்கிட்ட மாதிரியும் கதை கேட்டு நான் நடிக்க மறுத்த மாதிரியும் சீன் கிரியேட் பண்றாங்கÕன்னு கோபமா சொல்றாராம்... சொல்றாராம்...
துபாய்ல உலகத்தோட பெரிய கட்டிடத்துல வீடு வாங்கியிருக்காரு மலையாள லால் நடிகரு. விஷயம் கேள்விப்பட்டு நம்மூர் ஹீரோக்களுக்கும் அங்கே வீடு வாங்க ஆசை வந்துருச்சாம்... வந்துருச்சாம்... லால் நடிகருக்கு போன் பண்ணி அங்கே வீடு வாங்குறது சம்பந்தமா விவரங¢கள் கேட்குறாங்களாம்... கேட்குறாங்களாம்...
Post a Comment