6/1/2011 12:45:36 PM
ஹன்சிகா மோத்வானி கூறியது: ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’ இரண்டு படங்களும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. தற்போது ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு அமைந்த வேடங்கள் திருப்தியாகவும் நடிக்க வாய்ப்புள்ளவையாகவும் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு எந்த மொழியாக இருந்தாலும் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருந்தால் இந்நேரம் ஒரு டஜன் படங்களை தாண்டி இருக்கும். வரும் வாய்ப்புகளில் நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து ஒப்புக்கொள்கிறேன். அப்படி ஒப்புக்கொள்ளும் வேடங்கள் ரசிகர்களை கவருமா என்று யோசித்துதான் முடிவு செய்கிறேன். தெலுங்கில் தில் ராஜு தயாரிப்பில் சித்தார்த்துடன் நடிக்கும் படம், ராமுடன் நடிக்கும் 'காண்டிரீகாÕ படங்களில் எனது வேடம் சிறப்பாக அமைந்துள்ளது.
Post a Comment