அசத்தும் சந்தானம்-சிம்பு கூட்டணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. படத்திற்கு ஹீரோவாக 'சிம்பு' நடிக்கிறார். இந்த படம் காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதால், படத்தில் சந்தானம் நடிக்க உடனே கொண்டது படக்குழு. ஏற்கனவே சந்தானம்-சிம்பு கூட்டணி, 'வெற்றி கூட்டணி' என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.


 

""3''-க்கு பயப்படும் மற்ற பட தயாரிப்பாளர்கள்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கொலவெறி' என்ற பாடல் உலகத்தையே அசத்தியது. இதனையடுத்து '3' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம், பிரதமரையே விருந்துக்கு அழைக்க வைத்த பாட்டு இடம்பெறும் படம் என்தபால். அதுமட்டுமின்றி '3' படத்தின் ரிலீஸ் தேதிக்காக சில படங்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், கொலவெறி பாடலால் படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மற்ற பட தயாரிப்பாளர்கள் சிலர், '3' படத்திற்காக, தங்கள் பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கின்றனர் என்று கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.


 

கார்த்தி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதற்கு பதில் கூறினார் லட்சுமிராய். தாம் தூம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா என அடுத்தடுத்து தமிழில் நடித்துவந்த லட்சுமிராய்க்கு இப்போது சொல்லும்படி தமிழில் படம் இல்லை. மலையாளத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: நடிக்க கேட்டு வந்த எல்லா படங்களையும் முன்பு ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அந்த பாணியை மாற்றிக்கொண்டேன். வரும் எல்லா படங்களிலும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. நல்ல வேடம் என்றால் மட்டுமே தேர்வு செய்து ஒப்புக்கொள்கிறேன். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என் கேரக்டரை கேட்டபோது பிடிக்கவில்லை. அதில் நடிப்பதைவிட சும்மா இருப்பதே மேல் என்று நடிக்க மறுத்துவிட்டேன். இப்போதைக்கு கடினமான பாதையை கடந்துகொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஜீவா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. இப்போதைக்கு மலையாளத்தில் 3 படம், கன்னடத்தில் 2 படம், தெலுங்கில் ஒரு படம் என 6 படங்களில் நடித்து வருகிறேன். நான் கடவுளையும், கடின உழைப்பையும் நம்புகிறேன். எந்த வேடத்தை ஏற்றுக்கொண்டாலும் அதை ஒரு தேர்வுபோல எண்ணி நடிக்கிறேன். எது வந்தாலும தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. நல்ல படத்துக்காக காத்திருக்க தயாராகிவிட்டேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.


 

மலையாளத்தில் டபுள் மீனிங் படங்களுக்கு எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மலையாள படங்கள் என்றாலே கவர்ச்சி படங்கள் என்ற நிலை மாறி நல்ல கதை அம்சமுள்ள படங்கள் வரத் தொடங்கின. தற்போது அந்த நிலை மீண்டும் மாறிவருவதாக மலையாள படவுலகினர் கூறுகின்றனர். சமீபகாலமாக வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறது. கணவனை ஏமாற்றும் பெண்கள், காதலனை ஏமாற்றும் கதைகள், பெண்களை கவர்ச்சியாக சித்தரிக்கும் படங்கள் அடுத்தடுத்து வருகிறது. இதுபோன்ற படங்களுக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கைதட்டலும், வரவேற்பும் கிடைப்பதால் அந்த பாணியை தொடர்ந்து பயன்டுத்துகின்றனர். குடும்ப பாங்கான கதைகள் என்று கூறப்படும் படங்களில் கூட இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறுகிறது. இந்தநிலை மாற வேண்டும். ஒரு சாரார் இதுபோன்ற படங்களை விரும்பினாலும் பெரும்பாலானவர்கள் இதை வரவேற்கவில்லை. எனவே நல்ல கதை அம்சமுள்ள படங்களில் டபுள் மீனிங் வசனங்கள், ஆபாசத்தை தூண்டும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

நைஜீரியாவில் சிங்கம் 2

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது.  மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் 'பில்லா 2'. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து 'பில்லா 2' உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தென்ஆப்ரிக்கா, நைஜீரியாவில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஹரி.


 

ரஜினிக்கு கதை சொன்ன பட குழு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தலைவாசல் படத்தை இயக்கியவர் செல்வா. இவர் தற்போது 'நாங்க என்ற படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் 25 படம். சந்தானபாரதி, பாடகர் மனோ ஆகியோரின் வாரிசுகளுடன் வெவ்வேறு துறையினரின் வாரிசுகள் 10 பேர் இதில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இது பற்றி செல்வா கூறியது: பட குழுவினருடன் சென்று ரஜினியை பார்த்தேன். படத்தின் கதையை கேட்டார். முழு கதையும் சொன்னேன். அதை கேட்டபிறகு படத்தின் கரு பிடித்திருப்பதாக கூறியதுடன் கதைக்களம் 1980யை பின்னணியாக கொண்டிருப்பதால் கதை அம்சம் உள்ள கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். நிறைய புதுமுகங்கள் திரையுலகுக்கு வரவேண்டும் என்றும் ரஜினி விருப்பம் தெரிவித்தார். அதேபோல் பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ÔÔஒரே படத்தில் இவ்வளவு பேர் அதுவும் வாரிசுகள் அறிமுகமாகியுள்ளது பெரிய விஷயம்ÕÕ என்று கமல் பாராட்டினார். ரஜினி - கமல் சந்திப்புக்கு மனோ, சந்தானபாரதி ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்து பட குழுவினர் அனைவரும் ரோடு ஷோ நடத்த உள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் மார்ச் 2ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. பாலமுருகன் ஒளிப்பதிவு. பாலபாரதி இசை.


 

பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டோலிவுட்டில் ஏற்கனவே கலக்கிய காஜல் அகர்வால், தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட்டை கலக்க தயாராக உள்ளாராம். தற்போது கோலிவுட் படங்களில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். தமிழில் விஜய், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடித்து வரும் காஜல் அகர்வால், புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.



 

"கடல்" படத்தில் நான் வில்லன் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் படம் 'கடல்'. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவுதமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதனையடுத்து வில்லன் நடிகராக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார் என தகவல் வெளியாகின. ஆனால், 'தான் வில்லனாக நடிக்கவில்லை' என்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் கூறியுள்ளார். 'மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மை தான், ஆனால் வில்லனாக நடிக்க அவர் என்னை அழைக்கவில்லை' என்று அர்ஜூன் கூறியுள்ளார்.


 

"பில்லா 2" படத்தில் நயன்தாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜித்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 'பில்லா 2' படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச எண்ணியுள்ளாராம் இயக்குனர் சக்ரி.


 

தடையை மீறி நடிக்க வருகிறார் பூஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது அப்பா விதித்த தடையை மீறி மீண்டும் நடிக்க வருகிறார் பூஜா. 'நான் கடவுள்' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜா. திடீரென்று தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவருகிறார். இதுபற்றி பூஜா கூறியதாவது: கடந்த வாரம் இயக்குனர் பாலாவை சந்தித்தேன். 'எரியும் தணல்' படத்தில் நடிக்க கேட்டார்.  திரையுலகில் என் குரு பாலாதான். நான் கடவுள் படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கவில்லை. நான் கடவுள் படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தேன். இந்த வேடத்தை பார்த்த எனது தந்தை 'திரையுலகில் நீ சாதித்துவிட்டாய். இனிமேல் நடிக்க வேண்டாம்' என்று கூறிவிட்டார். அவரது வார்த்தையை மீற முடியவில்லை. ஆனால், இயக்குனர் பாலா என்னை மீண்டும் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை.


 

மனிஷா கொய்ராலா வாழ்க்கை படமாகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிலுக்கை தொடர்ந்து மனிஷா கொய்ராலா கதை படமாகிறது. இதற்கு மனிஷா அனுமதி அளிக்கமாட்டார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற படம் உருவானது. இதற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹீரோயின்களை மையமாக வைத்து கதைகள் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'ஹீரோயின்' என்ற பெயரில் படம் உருவாக்கப்படுகிறது. மனிஷா கொய்ராலா வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்று டாப் அந்தஸ்த்துக்கு சென்றார். தமிழிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது வாழ்க்கை இனிக்கவில்லை. 'என் கணவரை விவாகரத்து செய்யப்போகிறேன்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த மனிஷா திடீரென்று அதை திரும்ப பெற்றார். சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் அவர் குடித்துவிட்டு போதை அதிகமாகி தள்ளாடும் சூழலுக்கு சென்றுவிடுகிறார்.  இதனால் அவரது நடவடிக்கையை பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இயக்குனர் மதுர் பண்டர்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்குகிறார். கரீனா கபூர் ஹீரோயின். இப்படம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குனர் மறுத்திருக்கிறார். 'நடிகையின் வாழ்க்கை பற்றிய கதையைத்தான் எடுக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த நடிகையின் வாழ்க்கையையும் சித்தரிக்கவில்லை' என்றார். மனிஷாவின் கதையை படமாக்கினால் அதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று மனிஷா தரப்பில் கூறப்படுகிறது.


 

ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியாதது வருத்தமாக இருக்கிறது என்றார் சமந்தா. மணிரத்னம் இயக்கும் 'கடல்', கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படங்களில் நடிக்கும் சமந்தா கூறியதாவது: 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'மாஸ்கோவின் காவேரி' படங்களில் நடித்தேன். இதையடுத்து மணிரத்னம் படத்திலும், மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்கிறேன். தமிழில் 2 படங்களில் நடித்திருந்தாலும் என்னை ரசிகர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. என் நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்லும்போது என்னை ரசிகர்கள் சூழ்ந்துகொள்வதில்லை. ஆட்டோகிராப் கூட கேட்பதில்லை. இது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பெரிய நடிகையாக உயர்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியும் பயமும் இருந்தது. ஒப்பந்தம் ஆனது முதல் எப்போது அவரது ஷூட்டிங்கில் பங்கேற்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். தற்போது திரையுலக ஸ்டிரைக்கால் ஷூட்டிங் நடக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 3 மொழிகளில் உருவாகும் இதில் நடிப்பது சவாலாக இருந்தது. இவ்வாறு சமந்தா கூறினார்.


 

கோச்சடையான் படத்தில் நாகேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது. 'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, "கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது" என்று கூறி உள்ளார். இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நாகேஷ் நடிப்பதுபோல், அவரது காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட உள்ளன.



 

மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா. போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,''ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, ''சிறந்த தம்பதிகளாக அம்மாவும், அப்பாவும் வாழ்கின்றனர். கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது'' என்று கூறி உள்ளார்.


 

திகில் படத்தில் நடுங்கிய சதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சதா நடித்த இந்தி திகில் படம் தமிழுக்கு வருகிறது. 'சில காட்சிகளில் நிஜமாகவே நடுங்கிவிட்டேன்' என்றார் சதா. இதுபற்றி அவர் கூறியதாவது: 'ஜெயம்' படம் தொடங்கி 'அந்நியன்', 'பிரியசகி', 'வர்ணஜாலம்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். பி.வாசு இயக்கத்தில் நடித்த 'புலிவேஷம்' சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்தியில் 'கிளிக்' என்ற படத்தில் கிளாமராக நடித்திருக்கிறேன். இது தமிழில் 'கிளிக் 3' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. சங்கீத் சிவன் இயக்கி இருக்கிறார். சினேகா உல்லால், ரியா சென் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதில் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். என் வேடம் கிளாமராகவும், சவாலாகவும் அமைந்தது. திகில் படமான இதில் சில காட்சிகள் நடிக்கும்போது நிஜமாகவே நடுங்கி பயந்திருக்கிறேன்.

புது அனுபவமாக இருந்தது. தமிழ், இந்தி. தெலுங்கு 3 மொழிகளிலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த துறையில் 90 சதவீதம் திருப்தி இருக்கிறது. ஸ்டார் அந்தஸ்து என்பது என்னைப் பொறுத்தவரை எட்டாக்கனியாக இருக்கவில்லை. பெரிய இயக்குனர், பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்கவே விரும்புகிறேன்.


 

இந்திக்காக தமிழ் வாய்ப்பை இழக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்திப்பட வாய்ப்புக்காக, தமிழ் படங்களை இழக்க மாட்டேன் என்று சமந்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்தான் என்னை அறிமுகப்படுத்தியது. ஆனால் வாழ்க்கை கொடுத்தது தெலுங்கு. எனவே இரண்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. மணிரத்தினம், கவுதம் மேனன் என்று  நான் உயர்வாக மதிக்கும் இயக்குனர்கள் படத்தில் இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.இடையில் இரண்டு இந்திப்பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் கால்ஷீட் கேட்டார்கள். கொடுத்தால் ஒரு தமிழ் படத்தையும், ஒரு தெலுங்கு படத்தையும் இழக்க வேண்டியது வரும். அதனால் மறுத்து விட்டேன். இந்தி வாய்ப்பை விட தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே  ஆசை. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போன்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


 

அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆஞ்சநேயன்தான் என் கணவர். எங்கள் திருமண தேதி விரைவில் முடிவாகும்' என்றார் அனன்யா. 'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இத்திருமணம் நடக்காது என்று தகவல் வெளியானது. இதை மறுத்த அனன்யா, 'ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன்' என்றார். அவர் மீண்டும் அதை உறுதி செய்து நேற்று அளித்த பேட்டி:

எங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். ஆஞ்சநேயன்  திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதை என்னிடம் கூறி இருக்கிறார். என்னை ஏமாற்றவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்ய முடிவு செய்தோம். பத்திரிகைகளில் வந்ததுபோல் அவருக்கு குழந்தைகள் கிடையாது. சிறந்த நணபரான அவருடன் என் உறவு உறுதியாக இருக்கிறது. ஆஞ்சநேயன் பெற்றோரும், என் பெற்றோரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதி முடிவாகும். எனக்கும் இதயம் இருக்கிறது. இதில் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இதை மற்றவர்கள் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இப்போதுகூட மலையாள பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனன்யா கூறினார்.


 

ரெடியாகிறது முனி 3

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' மற்றும் முனியின் 2ம் பாகமான 'காஞ்சனா' ரிலீசாகி வெற்றிபெற்றது. இதையடுத்து 'ரிபெல்' தெலுங்கு படத்தை இயக்கி, இசையமைக்கும் அவர், ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். பிறகு 'முனி 3ம் பாகம்' உருவாக்குகிறார். இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது: ஏப்ரலில், முனி 3ம் பாகத்தின் ஷூட்டிங்கை தமிழ், தெலுங்கில் தொடங்குகிறேன். டைட்டில் முடிவாகவில்லை. இயக்கி நடிக்கும் நான், என் தம்பி வினோவை அறிமுகம் செய்கிறேன். அவரும், நானும் சேர்ந்து ஆடுகின்ற நடனக்காட்சி ஹைலைட்டாக இருக்கும்.


 

நல்ல வேடத்துக்கு காத்திருக்கிறார் ஸ்ருதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலர் குடியிருப்பு', 'ஆண்மை தவறேல்' படங்களில் நடித்தவர் ஸ்ருதி. அவர் கூறியதாவது: கன்னடப் படங்களில் நடித்தபோது, தமிழில் அழைப்பு வந்தது. எனது நடிப்பில் இரு படங்கள் ரிலீசானது. இப்போது 'அமரா'வில் நடிக்கிறேன். இதையடுத்து, தமிழில் அதிக கவனம் செலுத்த விரும்பி,  சென்னையில் குடியேறியுள்ளேன். நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். சினிமா உலகம் போட்டி நிறைந்ததுதான். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. வழக்கம்போல காதலிக்கவும் டூயட் பாடவும் அல்லாமல் கதையை நகர்த்தி செல்லும் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அப்படியொரு வேடத்துக்கு காத்திருக்கிறேன்.


 

ஸ்லம்டாக் மில்லினர் தான்வி தமிழ் ஹீரோயின் ஆனார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தான்வி லோன்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆனார். முன்னாள் பள்ளித் தோழர்கள் சிலர் இணைந்து, யூ அன்ட் மீ புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'காதல்தீவு'. இதில் 'அழகி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராம்சரண் ஹீரோவாகவும் 'ஸ்லம்டாக் மில்லினர்' குழந்தை நட்சத்திரம் தான்வி லோன்கர் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மனோஜ் கே.பாரதி வில்லனாக நடிக்கிறார். மிதுன் ஈஸ்வர் இசை. முகேஷ்ஞானி ஒளிப்பதிவு. 'இது காதல் கதை. அதோடு சுற்றுலாத் தலங்களில் நடக்கும் சில திகிலூட்டும் சம்பவங்களையும் காதலோடு இணைத்து சொல்கிறோம்" என்றார் படத்தை இயக்கும் வெற்றி வீரன். ஹீரோயினாக நடிப்பது பற்றி தான்வி கூறும்போது, "கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்தபோது வெற்றி வீரன் அறிமுகமானார். அவரது கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஹாலிவுட் படத்தில் நடித்ததால் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்கிறேன். 16 வயதில் ஹீரோயினாகியிருக்கிறேன். திறமையை வளர்த்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்" என்றார்.


 

மூக்கு ஆபரேஷன் செய்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சில வருடங்களுக்கு முன் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட தகவலை இப்போதுதான் வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். நடிகைகள் பலர் முக அழகை கெடுக்கும் வகையில் இருக்கும் மூக்கு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வது வாடிக்கை. ஆனால் அதை மறுத்து விடுவதுண்டு. ஆனால் அது பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஸ்ருதி. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. இதனால் இரவில் தூங்கும்போது அவஸ்தைபடுவேன். இதுபற்றி ஆலோசித்தபோது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மூக்கில் ஆபரேஷன் செய்தால் குரல் மாறிவிடும் என்று சிலர் பயமுறுத்தினார்கள். இதனால் முதலில் யோசித்தேன். அப்படி எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிந்தபின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். இந்தியில் 'லக்கி' என்ற படத்தில் நடிப்பதற்கு முன்பே அமெரிக்கா சென்று மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். இரவிலும் நிம்மதியாக தூங்குகிறேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

நடிகை என்றால் எல்லா வேடத்திலும் நடிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் மேக்னா ராஜ். இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சரத்குமாருடன் நான் நடித்துள்ள 'நரசிம்மன் ஐபிஎஸ்' என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் 'அச்சன்டே ஆண்மக்கள்' என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். 'அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே' என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா வேடத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து 'நந்தா நந்திதா' வெளியாக உள்ளது. இவ்வாறு மேக்னா ராஜ் கூறினார்.


 

சில்க் வேடத்தில் நடிக்க தயங்கினேன்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
வித்யாபாலன் கூறியதாவது: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு என்னை தேடி வந்தது. அப்படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயக்கம் காட்டினேன். எதிர்பார்த்ததைவிட படம் ஹிட் ஆனது. படத்தின் பெயர்தான் டர்ட்டி (அழுக்கு) என்றிருந்ததே தவிர அழுக்கான படம் கிடையாது. இதில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதாவை வாழ்க்கையில் உயர்த்துவதாக கூறி அவரை தவறான வழியில் பயன்படுத்தி சீரழித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு முடிவும் இருந்தது. அப்படத்தை பார்த்தவர்கள் அதை உணர்ந்திருப்பார்கள். சில்க் போல் வேடம் ஏற்று நடித்தேனே தவிர என் வாழ்க்கை அவரது வாழ்க்கைபோல் கிடையாது. அதிர்ஷ்டவசமாக அவரைபோல் என்னை யாரும் சீரழிக்கவில்லை. திரையுலகினர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். விரைவில் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பதுபோல் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


 

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம். இதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்.


 

ராஜமவுலியின் நான் ஈ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பி.வி.பி பிக்சர் ஹவுஸ் சார்பில் பிரசாத் வி. பொட்லூரி தயாரிக்கும் படம், 'நான் ஈ'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். நானி, சமந்தா, கன்னட நடிகர் சுதீப், சந்தானம் நடிக்கிறார்கள். மரகதமணி இசை அமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் ராஜமவுலி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் எனக்கு இது முதல் படம். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை விரும்பி பார்க்கும் அனிமேஷன் கலந்த ஆக்ஷன் படம். காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். வில்லனால் கொல்லப்படும் ஹீரோ மறுபிறவியில் ஈயாக பிறந்து காதலி உதவியுடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. சுமார் 40 கோடி செலவில் உருவாகிறது. இதில் 50 சதவிகிதம் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காகச் செலவிடப்படுகிறது. மிகச்சிறிய உயிரினமான ஈ, அதன் இயல்பும், உருவ அளவும் மாறாமல் எப்படி செயல்பட்டு பழிவாங்குகிறது என்பதை காட்டுகிறோம். அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அனிமேஷன் பணிகளை செய்து வருகிறார்கள்.


 

டைரக்டருடன் மோதல் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்குவதாக இருந்தது. இப்போது ஆர்யாவுக்குப் பதில் தெலுங்கு ஹீரோ ராம் நடிக்கிறார். சரவணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஆர்யா விலகியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது, 'லிங்குசாமியுடனும், சரவணனுடனும் நட்பு தொடர்கிறது. கதைக்கும், கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று சரவணன் நினைத்து இருக்கலாம். அதனால், அதில் நடிக்கவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில், 'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்து வருகிறேன்' என்றார்.


 

டாப்ஸி ஷூட்டிங்கில் ரகளை படப்பிடிப்பு ரத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் ரகளை ஏற்பட்டதால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ரவிதேஜா, டாப்ஸி நடிக்கும் தெலுங்கு படம், 'தருவு'. சிவகுமார் இயக்குகிறார். இதன் ஷுட்டிங் கடந்த சில நாட்களாக ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே நடந்தது. வழக்கம் போல் இன்றும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செட் போட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந் தது. அப்போது அங்கு வந்த தனித்தெலுங்கானா ஆதரவாளர்கள் கோஷம் போட்டப்படி, செட்டுக்குள் புகுந்தனர். கற்களால் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


 

ஹோம்லி, கிளாமர் சஞ்சனா சிங் ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க ஆசைப்படுவதாக சஞ்சனா சிங் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 'ரேணிகுண்டா' படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. அதற்கு பிறகு அப்படிப்பட்ட கேரக்டர்கள் கிடைக்கவில்லை. நண்பர்களுக்காக, 'மறுபடியும் ஒரு காதல்', 'மயங்கினேன் தயங்கினேன்', 'வெயிலோடு விளையாடு' படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். கணேசன் காமராஜ் இயக்கும் 'யாருக்குத் தெரியும்' படத்தில் ஹீரோயினாக, அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் இயக்கும் 'தப்புத் தாளங்கள்' படத்தில் கிளாமர் ஹீரோயின். சி.எஸ். அமுதன் இயக்கும் 'இரண்டாவது படம்' படத்திலும் நடிக்கிறேன். ஹோம்லி, கிளாமர் இரண்டிலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் உடன்பாடு இல்லை.


 

சிவாஜி, எம்.ஜி.ஆர் தலைப்புகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிவாஜி கணேசன் நடிப்பில் 1964-ல் ரிலீசான படம், 'கர்ணன்'. மறைந்த பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார். இந்தப்படத்தை நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பித்து, திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கம் வெளியிடுகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிவாஜி மகன் ராம்குமார் வெளியிட, எல்.சுரேஷ் பெற்றார். நிகழ்ச்சியை ஒய்.ஜி.மகேந்திரனுடன் தொகுத்து வழங்கிய சேரன் பேசியதாவது: நடிகர் திலகத்தின் சாயல் இல்லாமல் இங்கே யாரும் நடிக்க முடியாது. 48 வருடங்களுக்கு முன் வந்த 'கர்ணன்', பிரமாண்டங்களின் உச்சம். அன்றைக்கு சினிமாவை மட்டுமே நேசித்தவர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதால்தான், இன்றும் காலத்தைக் கடந்து நிற்கிறது. இந்த வரிசையில் 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'உத்தம புத்திரன்', 'தில்லானா மோகனாம்பாள்' படங்களையும் புதுப்பித்து, வருங்கால சந்ததியினருக்கு சிவாஜியின் சாதனைகளை சொல்ல வேண்டும். சிவாஜி மகன் ராம்குமாரிடம் கோரிக்கை வைக்கிறேன். இனி சிவாஜி படங்களின் தலைப்புகளை, வேறு யாரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோல், எம்.ஜி.ஆர் பட தலைப்புகளை மீண்டும் வைக்கவும் அனுமதிக்கக் கூடாது என்பதை, சினிமா துறையினருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
 இவ்வாறு சேரன் பேசினார். விழாவில், கமலா தியேட்டர் வி.என்.சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் டி.ஏ.அருள்பதி, கலைப்புலி ஜி.சேகரன், வி.சி.குகநாதன், துஷ்யந்த் உட்பட பலர் பங்கேற்றனர். மதுவந்தி அருண் நன்றி கூறினார்.


 

இனி நடிக்க மாட்டார் உதயதாரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர், உதயதாரா. இவருக்கும், சார்ஜாவில் வசிக்கும் பைலட் ஜூபின் ஜோசப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 7ம் தேதி கோட்டயத்தில் நடைபெறுகிறது. 16-ம் தேதி கோட்டயம் அருகிலுள்ள கடுத்துருத்தி என்ற இடத்தில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று உதயதாராவிடம் கேட்டபோது, "இனி நான் நடிக்க மாட்டேன். திருமணம் முடிந்ததும் கணவருடன் சார்ஜாவில் குடியேறுகிறேன். நடித்த படங்களின் ஷூட்டிங்கை முடித்து விட்டேன்" என்றார்.


 

நடிகர் முத்துராஜா திடீர் மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மன்மதன்', 'கிழக்கு கடற்கரை சாலை', 'மருதவேலு', 'வேங்கை' உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் முத்துராஜா (34) . 'சித்திரம் பேசுதடி'யில் கானா உலகநாதனின் 'வாளமீன்' பாடல் காட்சியில், மைக் பிடிக்கும் இளைஞனாக இவர் நடித்தது பேசப்பட்டது. தன் சொந்த ஊர் கம்பத்துக்கு சென்றிருந்த முத்துராஜா, முதல் மாடியிலிருந்து சில நாட்களுக்கு முன் தவறி விழுந்தாராம். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். கம்பம் அருகிலுள்ள கே.கே பட்டியில், முத்துராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த முத்துராஜாவுக்கு கடந்த 30ம் தேதிதான் காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.


 

சண்முகராஜன் இயக்கும் போங்கோவின் தேசம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்த இருப்பதாக சண்முகராஜன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது; பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் சில கேரக்டர்களில் நடிக்கும்போது நம்மையறியாமலேயே அதிக ஈடுபாடு வந்துவிடுவது உண்டு. 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தில் அப்படியொரு கேரக்டரில் நடித்துள்ளேன். இதே போல விக்ரம் நடிக்கும், 'கரிகாலன்' படத்தில் சோழமன்னனின் சித்தப்பாவாக நடிக்கிறேன். சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகச் சொல்கிறார்கள். வில்லனாக நடித்தாலும் குணசித்திர வேடத்தைதான் எல்லாரும் விரும்புவதால் வில்லனுக்கு பஞ்சம் என்றும் சொல்லலாம். வில்லன் வேடத்தில் ஒரே பார்மெட்டுக்குள்தான் நடிக்க வேண்டியிருக்கிறது. அதை தாண்டி நடிக்க, சிறந்த கதைகள் வேண்டும். குணசித்திர வேடங்களில் நடிக்கும்போது திறமைகளை காண்பிக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம்தான் எனது உயிர். நாடகங்கள் இயக்கி நடித்து வருகிறேன். இப்போது 'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை டெல்லியில் நடத்தினோம். சமகால அரசியலை பேசும் இந்நாடகத்தை விரைவில் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறோம். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.


 

ரீமா சென்னுக்கு சொகுசு கார் : வருங்கால கணவர் பரிசளித்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரீமா சென்னுக்கு அவரது வருங்கால கணவர் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார். அதில் சென்று நடிகர், நடிகைகளுக்கு கல்யாண பத்திரிகை வைக்கிறார் ரீமா. மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்குக்கும் வரும் மார்ச் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. தன்னுடன் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ரீமா சென் தனது திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார். திருமண நிகழ்ச்சி மெஹந்தி விழா, சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் மற்றும் வரவேற்பு என 4 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது. காதலர் தினத்தன்று ரீமாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருந்தார் சிவ் கரண். விமான நிலையத்தில் ரீமா சென்று இறங்கியதும் அவரை வரவேற்க புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் காத்திருந்தது. பிங்க் நிறத்திலான பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த காரை காதலர் தின பரிசாக ரீமாவுக்கு அளித்தார்
சிவ்.


 

உயிருக்கு போராடிய ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மறுமுகம்' படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அனூப் குமார் கூறியதாவது: 'வட்டாரம்', 'சிக்கு புக்கு' படங்களில் ஆர்யாவுடனும், 'கத்திக்கப்பல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்தேன். இப்போது 'மறுமுகம்' படத்தில், மென்மையான ஹீரோவாக நடிக்கிறேன். ரன்யா ஜோடி. டேனியல் பாலாஜியும் இருக்கிறார். கொடைக்கானல் மலையில் உயரமான குன்றில் நின்று, பாடல் காட்சியில் நடித்தேன். பலத்த காற்றால் தடுமாறினேன். கீழே பார்த்தபோது, மரண பள்ளம் பயமுறுத்தியது. அந்த இடத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். இயக்குனர் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் கொடுத்த தைரியத்தில், நடித்தேன். இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.


 

சரண்யா நாக் நிர்வாண போஸ்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மழைக்காலம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சரண்யா நாக் நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது: இந்தப் படத்தின் கதைப்படி ஓவியக்கல்லூரியில் மாடலாக போஸ் கொடுக்கும் கேரக்டர். இக்காட்சியை சென்னையில் செட் போட்டு படமாக்கினார்கள். நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை. ஸ்கின் டிரெஸ் அணிந்து, முதுகு காட்டியபடி நடித்தேன். இது சில விநாடிகள் மட்டும் இடம்பெறும். இதை பெரிது படுத்திவிட்டார்கள். இதில் ஆபாசம் துளியும் இருக்காது.


 

மீண்டும் மந்த்ரா

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
தமிழில் 'ப்ரியம்' படத்தில் அறிமுகமானவர் மந்த்ரா. பிறகு 'கங்கா கவுரி', 'தேடினேன் வந்தது', 'ரெட்டை ஜடை வயசு' உட்பட பல படங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர், மீண்டும் நடிக்க வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தி உட்பட பல மொழிகளிலும் 75 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் கடைசியாக நடித்த படம் 'சுயேட்சை எம்.எல்.ஏ.'. இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழில் ஹீரோயினை தாண்டிய பெண்கள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதால் இங்கு நடிக்க முடிவு செய்துள்ளேன். நிறைய இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். பெரிய படத்துக்காக காத்திருக்கிறேன்.


 

தமிழில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறிய ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படத்தில் நடிப்பதற்காக கன்னட படத்தில் இருந்து வெளியேறினார் ஹீரோயின். பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி சுபா புட்லா. தென்னிந்திய அழகி போட்டியில் வென்றவர். கன்னட பட இயக்குனர் ரவிவர்மா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் திடீரென்று அப்படத்தில் இருந்து விலகி தமிழ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். இதுபற்றி ரவிவர்மா கூறுகையில், ''என் படத்தில் சுபா நடிக்க இருந்தது. சில நாட்களுக்கு முன்பே இது முடிவானது. ஆனால், அவர் நடிப்பதில் அவரது அப்பாவுக்கு விருப்பம் இல்லையாம். நடிக்க கூடாது என்று அவர் சொல்லிவிட்டதால் சுபா அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அம்மாவிடம் பேசியும் அனுமதி கிடைக்கவில்லை. யாரையும் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை'' என்றார். கன்னடத்தில் நடிக்காமல் விலகிய சுபா தமிழில் 'மாலை பொழுதின் மயக்கத்திலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிப்பதால்தான் கன்னட படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஏற்கனவே தமிழ் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் கன்னட படத்தில் நடிக்க முடியவில்லை. புதுமுகமாக நடிக்கலாம் என்று இருந்தேன். கால்ஷீட் பிரச்னையால்தான் நடிக்க முடியவில்லை. பட குழுவுடன் பேசிதான் இந்த முடிவை எடுத்தேன். தமிழ் பட ஷூட்டிங் விரைவில் முடிகிறது. நல்ல வாய்ப்பு வந்தால் கன்னட படங்களில் நடிப்பேன்' என்றார்.


 

சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்றதற்கு பதில் அளித்தார் வெங்கட்பிரபு. இதுபற்றி அவர் அளித்த பேட்டி: மங்காத்தா வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள். மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். சூர்யா நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் - த்ரில்லர் படம். அதே நேரம், ஹீரோக்கள் காமெடி காட்சிகளிலும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான். இவ்வாறு வெங்கட்பிரபு கூறினார்.


 

சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று பத்மப்ரியா கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் அப்பா ராணுவ அதிகாரி. அடிக்கடி இடம் மாற வேண்டி இருக்கும். இதனால் எனக்கு நண்பர்கள் குறைவு. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். சினிமாவுக்கு வரும் முன்பு மல்ட்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்தேன். கை நிறைய சம்பளம். அங்கேயே வேலை பார்த்திருந்தால், இத்தனை நேரம் நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்து திருமணமாகி செட்டில் ஆகியிருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு, வெளியுலக தொடர்பு குறைந்துவிட்டது. பெரும்பாலான நேரம் ஷூட்டிங் லொக்கேஷன்களிலும் மற்ற நேரம் ஓட்டல் அறைகளிலுமே கழிகிறது. சினிமாவை பொருத்தவரை மம்மூட்டி, மோகன்லால், திலிப், பிருத்விராஜ், ஜெயராம் போன்றவர்களுடன் நடிக்கிறேன். எல்லோருமே திருமணம் ஆனவர்கள். சினிமாவில் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை யாரும் இல்லை. பொருளாதார சுதந்திரம் மட்டுமே எல்லா சுதந்திரத்தையும், முழு மகிழ்ச்சியையும் கொடுத்துவிடாது. வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்ததும் தினசரி வேலைகளை கவனிக்க வேண்டி உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணுக்கு இரவில்தான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். எந்த ஆணும் குண்டான மனைவியை பார்ட்டிகளுக்கு அழைத்து செல்ல விரும்பவதில்லை. அதேநேரம் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ளவும் பல ஆண்கள் முன்வருவதில்லை.


 

சல்மான்கானுக்கு 8 மணி நேரத்தில் 8 கோடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சல்மான் கான் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக 8 மணி நேரத்துக்கு 8 கோடி தர ஒரு விளம்பர நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம், முதலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவருவதால், அந்த வாய்ப்பை சல்மான் கான் தட்டிச் சென்றார். சல்மானின் புகழை உண ர்ந்த அந்த நிறுவனம், அவர் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டது.



 

ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் ரெடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இதனையடுத்து, ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் முடிவாகிவிட்டதாம். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தாத்தா அமிதாப்பச்சன் வீடு திரும்பியதும் இதற்கான விழா நடக்க உள்ளது.


 

அசின்-தீபிகா மீது இயக்குனர் தாக்கு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இப்போது அவர் 3 முன்னணி நடிகைகளை கடுங்கோபத்துடன் தாக்கி பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அடுத்து ஷாருக்கான் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதுபோல் கரீனாகபூர், அசின், தீபிகா படுகோன் ஆகிய 3 நடிகைகள் பில்டப் செய்து வருகின்றனர். இது மும்பை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது. இதைபார்த்து கோபம் அடைந்த ரோஹித் கூறியதாவது:

அடிக்கடி எனது பேட்டிகளில் கரீனா எனக்கு பிடித்தமான நடிகை என்று கூறி இருக்கிறேன். அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுவரை அவரை நான் அணுகி அதுபற்றி பேசவில்லை. அதற்குள் இப்படத்தில் நடிக்கிறேன் என்றும், நடிக்கவில்லை என்றும் அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார். 5 மாதத்துக்கு முன்பு அவரை சந்தித்தேன். சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை. ஏப்ரல் மாதம்தான் ஹீரோயினை முடிவு செய்வேன். அதேபோல் அசினிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது.

அவரும் அவ்வப்போது ஒரு கருத்து தெரிவிக்கிறார். தற்போது 'போல் பச்சான்' பட ஷூட்டிங்கில இருக்கிறேன். இது முடிந்தபிறகுதான் அடுத்த பட வேலை தொடங்குவேன். யாரோ ஒருவர் போன் செய்து தீபிகாதான் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறாரேமே என்கிறார். இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். அழகான, திறமையான பிரபல நடிகை ஒருவரைத்தான் இப்படத்துக்கு தேர்வு செயதேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடிகை என்பதை முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரோஹித் கூறினார்.



 

நான் ரொம்ப பிஸி : அஞ்சலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தற்போது இருக்கும் தமிழ் கதாநாயகிகளில், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் அஞ்சலிக்கு இந்த வருடம் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது அஞ்சலி சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கரிகாலன் படத்திலும், சுந்தர் சி.படம் இயக்கும் படத்திலும், மற்றும் முருதாஸ் தயாரிக்க படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தான் நடித்து வரும் படங்களுக்கு சரியாக கால்ஷிட் கொடுத்து அனைத்து இயக்குனர்களின் பாராட்டுகளை வாங்கியுள்ளாராம் அஞ்சலி. இந்த படங்கள் முடியும் வரை, யார் கதை சொல்ல வந்தாலும் பிஸி என சொல்லிவிடுகிறாராம் அஞ்சலி.


 

விரைவில் இசை பள்ளி ஆரம்பிக்க உள்ளேன் : சோனியா அகர்வால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனியா அகர்வால் கூறியது: 'திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், 'வானம்' படத்தில் சிறிய வேடம். 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் இசை பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன்' என்று கூறினார்.


 

திரையுலகம் நாளை ஸ்தம்பிக்கிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமா துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்திய முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ, தியேட்டர்கள் ஒரு நாள் ஸ்தம்பிக்கிறது.

இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லப்பா கூறும்போது, "சினிமாவுக்கு ஏற்கனவே என்டர்டெயின்மென்ட் டாக்ஸ் எனப்படும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு வரி விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (வியாழன்) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகிறது. ஸ்டுடியோக்களும் மூடப்படுவதுடன் அனைத்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது" என்றார்.

இதுகுறித்து ஆலோசனை செய்ய தமிழ் திரையுலகினர் பங்கேற்ற கூட்டம் நேற்று பிலிம்சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பெப்சி செயலாளர் ஜி.சிவா, திரை அரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், இந்திய திரைப்பட சம்மேளன துணைத்தலைவர் எல்.சுரேஷ், இயக்குனர்கள் சங்க செயலாளர் அமீர், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, "திரையுலகம் ஏற்கனவே பல சுமைகள் காரணமாக நலிந்திருக்கிறது. சேவை வரிவிதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இந்தியா முழுவதும் நாளை நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும். அதன்படி சினிமா படப்பிடிப்பு, தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சென்னை பிலிம்சேம்பரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை கூட்டம் நடக்கும்" என்றனர்.


 

இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கமல்தான் நடனம் கற்பதில் ஆர்வம் மிகுந்தவர். இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை' என்றார் பிரபல டான்ஸ் மாஸ்டர். 'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்காக பிரபல நடன இயக்குனர் பிஜு மஹராஜ் என்பவரிடம் சமீபத்தில் கதக் நடனம் கற்றார். இதுபற்றி மஹராஜ் கூறும்போது,"விஸ்வரூபம் படத்துக்காக கமல் என்னிடம் சமீபத்தில் கதக் நடன பயிற்சி பெற்றார். நான் பார்த்தவர்களில் நடனத்தை ஆர்வமாக கற்றவர் கமல். இந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை. கையையும், காலையும் அசைக்கிறார்கள் அவ்வளவுதான். சமீபத்தில் டிவி ஒன்றில் கேத்ரினா கைப் ஆடிய நடனம் பார்த்தேன். அது நடனமாக எனக்கு தெரியவில்லை. முறையான நடனம் ஆடும் அளவுக்கு அவர் தகுதியாக இல்லை. அந்த கால நடிகைகள் வஹீதா ரெஹமான் அல்லது மீனா குமாரி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இப்போதுள்ள நடிகைகள் ஒன்றுமே இல்லை. மாதுரி தீட்சித் மட்டுமே ஓரளவுக்கு ஆடும் திறமை பெற்றவர். காட்சி முடிந்தபிறகுகூட நடன அசைவு எப்படி இருந்தது என்று ஆர்வமாக கேட்பார்" என்றார்.


 

எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜித்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்..?" என்றால், "ஏப்ரல் 2012..." என்கிறார் தெளிவாக.



 

திருமணத்தை ரத்து செய்தார் நடிகர் கோபிசந்த் : அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணத்தை திடீரென்று ரத்து செய்தார். இந்த அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம்: ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு படவுலகில் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ராம்பாபுவின் 2வது மகள் ஹரிதாவுக்கும்(21) கடந்த ஜனவரி 26ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் திரையுலக¤னர், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது. தனது மருமகன் சினிமா ஹீரோ என ராம்பாபு பெருமையாக பலரிடம் கூறி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தாராம். இந்நிலையில் திடீரென மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் நடிகர் கோபிசந்த்-ஹரிதா திருமணம் நின்று போனது. இதனால் ராம்பாபு அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். இதை தாங்கிக்கொள்ள முடியாத அவர், நேற்று முன்தினம் ஐதராபாத் தில்சுக் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பலமணி நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரைதள்ளியபடி ராம்பாபு இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

டைட்டிலை மாற்றும் சுந்தர்.சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிக்கும் படம் 'மசாலா கபே'. ரோம்ப நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் இது. சமீபகாலமாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்குனர் பணியில் களமிறங்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் 'மசாலா கபே' படத்தின் டைட்டிலை மாற்ற முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.


 

கண்மாய்கரையில் தூங்கிய வெளிநாட்டு ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படத்தில் நடிக்கும் வெளிநாட்டு நடிகை நம்மூர் கண்மாய்கரையில் தலைக்கு கையை வைத்து தூங்கி ஓய்வெடுத்தார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த எலினா அசன், செல்வின் ஜோடி நடிக்கும் படம் 'ஒண்டிப்புலி'. இப்பட இயக்குனர் ராஜகுரு கூறியதாவது: தண்ணீரின் தேவை, அணைகளின் அவசியம், தடுப்பணைகள் கட்ட வேண்டியதின் அவசரம் போன்றவற்றை மையமாக வைத்து இப்பட கதை உருவாகி உள்ளது. மழைநீர் கடலில் வீணாகிறது. பயிர் செய்யும் காலத்தில் அணைகள் திறக்கப்படாமல் அறுவடை காலத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தவறுகள் இப்போதும் நடக்கிறது. முல்லை பெரியாறு அணையை பென்னி குக் என்ற ஒற்றை மனிதர் தலைமை தாங்கி கட்டி முடித்தார். இந்த வரலாறும் இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. செல்வின் ஹீரோ. எலினா அசன் என்ற ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஹீரோயின். இவர் டெல்லியில் இந்தோ-ஜெர்மன் தூதரக அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். நடிப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, பெரியகுளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. தும்பிபுரம் என்ற இடத்தில் கண்மாய் அருகே ஷூட்டிங் நடந்தது. ஓய்வு நேரத்தில் கண்மாய் கரை ஓரத்திலேயே எலினா அசன் தூங்கி ஓய்வெடுத்தார். ஏசி கேரவேன் தந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல ஹீரோயின்கள் கண்டிஷன்போடும் இந்நாளில் கண்மாய் கரையோரம் ஒரு ஹீரோயின் தூங்கியதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது எளிமை வியக்க வைத்தது. ஜேம்ஸ்வசந்தன் இசை. வைரமுத்து பாடல்கள். இப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பென்னி குக்கின் கொள்ளுபேரன் சாம் சான் குக்கை அழைத்து வர உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.