கவர்ச்சியா நடிக்கமாட்டேன்னு நான் எப்போ சொன்னேன்? - ரம்யா நம்பீஸன்

|

Ramya Nambeesan Ready Go Glam
பீட்ஸா விற்கும் கடையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திப்பான்?

இதையெல்லாம் ஒரு சினிமாவாகக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர் பெயர் கார்த்திக் சுப்பாராவ். படத்துக்குப் பெயரே பீட்ஸா-தான்.

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அசத்திய விஜய் சேதுபதி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அட்டகத்தி என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் திருக்குமரன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக நடிப்பவர் ரம்யா நம்பீஸன். குள்ளநரிக் கூட்டத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் தனது வேடம் பற்றி ரம்யா கூறுகையில், "என்னுடைய நடிப்பு திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு இந்தப் படம். மொழி பிரச்சினை காரணமாக இதுவரையான படங்களில் டப்பிங் பேசவில்லை.முதன்முறையாக இப்படத்தில் தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசப்போகிறேன்.

தமிழில் எனக்கென்று தனி இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கிளாமர் ரோல்களில் நடிப்பதில் தவறில்லை. நான் அப்படி நடிக்கமாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. எனக்கு இதுவரை அந்த மாதிரி கவர்ச்சி வேடம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். நீச்சல் உடைகளில் நடிப்பதில்தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது," என்றார்.

சரி... நீங்க நடிக்கும் படத்துக்குப் பெயர் பீட்ஸா.. உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் அதுதானா? என்றதற்கு,

"ம்ஹூம்... எனக்கு பீட்ஸாவெல்லாம் பிடிக்காது. பிரியாணி அதுவும், சிக்கன் பிரியாணிதான் ரொம்ப பிடிக்கும்," என்றார்.
 

Post a Comment