கரீனா படத்தில் ரஜினி பாடல் நஷ்டஈடு கேட்டு திடீர் வழக்கு

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கரீனாவும் அவரது காதலன் சைப் அலிகானும் நடித்துள்ள இந்தி படத்தில் ரஜினி பாடல் பயன்படுத்தியதை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படுகிறது. நீண்ட வருட காதலர்கள் கரீனாவும், சைப் அலிகானும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சைப் தயாரித்து நடித்த 'ஏஜென்ட் வினோத் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார் கரீனா. இப்படத்தில் ரஜினியின் 'தளபதி படத்தில் இடம்பெற்ற 'ராக்கம்மா கைய தட்டு.. பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் திடீரென்று பெங்களூரை சேர்ந்த பாடல் கேசட் நிறுவனம், அனுமதி இல்லாமல் Ôராக்கம்மா கைய தட்டுÕ பாடலை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி சைப்பிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இது பற்றி பாடல் கேசட் கம்பெனி நிர்வாகி வேலு கூறும்போது, 'ராக்கம்மா கைய தட்டு பாடலின் சர்வ தேச உரிமையை எங்கள் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் சைப் அலிகான் தனது படத்தில் இப்பாடலை பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக எங்களிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து பட குழுவினர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



 

Post a Comment