மண் மணம் கமழும் மக்கள் தொலைக்காட்சியின் பாரம்பரிய சமையல்!

|

Makkal Tv Takes Tamils Parampariya Samayal
தூதுவளை குழம்பு, மூலிகை பானம் என தமிழகத்தின் பாரம்பரிய சமையலை செய்து காட்டி மக்களை பழமைக்கு அழைத்துச் செல்கிறது மக்கள் தொலைக்காட்சி.

இன்று பிட்சாவுக்கும், பர்கருக்கும், பதப்படுத்திய உணவுக்கும் தமிழன் பழகிவிட்டான். அதனால் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி வருகிறான்.

நோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. அதனால்தான் பண்டைய காலத்தில் உணவே மருந்து என்று கூறியுள்ளனர்.

இன்றைய சமையல் முறையில் அதிக எண்ணெய் ஊற்றி சத்தில்லாத உணவுகளே சமைக்கப்படுகின்றன. அவற்றை உண்பதன் மூலம் உடல்நலம்தான் கெடுகிறது. இதை கருத்தில் கொண்டே சராசரி சமையல் நிகழ்ச்சியை வழங்காமல் பாரம்பரியத்தை உணர்த்தும் சமையலை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது மக்கள் தொலைக்காட்சி.

அழிந்து கொண்டு வரும் தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது இந்த பாரம்பரிய சமையல். உண்மையிலேயே ஒரு பெரிய வணக்கம் சொல்ல வைப்பதாக இந்த அருமையான நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் தோறும் மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார். இதில் பண்டைய தமிழர்களின் சிறந்த உணவுவகைகளை சமைத்துக் காட்டுகிறார்கள் சித்தமருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் செந்தில் கருணாகரன்.

மேலும் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களின் மகத்துவத்தையும் விளக்கிக் கூறுகிறார்கள். சாப்பிட மறக்கறீங்களோ இல்லையோ, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மறக்காதீங்க...அவ்வளவு பயனுள்ள நிகழ்ச்சி இது.
 

Post a Comment