'திருடா திருடி' படம் மூலம் அறிமுகமானவர் சாயாசிங். 'வல்லமை தாராயோ', 'அனந்தபுரத்து வீடு' உட்பட பல படங்களில் நடித்தார். அவருக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சாயாசிங் கூறியதாவது: தற்போது பெங்காலி படத்தில் நடித்து வருகிறேன். குடும்பத்துக்காக உழைத்து வாழ்க்கையை தியாகம் செய்யும் பெண்ணின் கேரக்டர். பெங்காலியில் இது இரண்டாவது படம். இதுதவிர போஜ்புரி, மலையாள படங்களில் நடித்து வருகிறேன். வீட்டில் பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இப்போது சம்மதம் தெரிவித்திருக்கிறேன். அவர்கள் மாப்பிள்ளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. பெற்றவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு.
Post a Comment