பாகிஸ்தான் பாடகி பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி: ஆஷா போன்ஸ்லேவுக்கு ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு

Raj Thackeray S Party Is After Asha

மும்பை: பாகிஸ்தானிய பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாடகி ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்ததுள்ளார்.

கலர்ஸ் என்னும் இந்தி தொலைக்காட்சி சேனலில் சூர் ஷேத்ரா என்ற பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பாடகி ஆஷா போன்ஸ்லே, வங்க தேசத்தைச் சேர்ந்த பாடகி ருணா லைலா மற்றும் பாகிஸ்தானின் கவாலி பாடகி ஆபிதா பர்வீன் ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பாடகி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே பங்கேற்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளார்.

இதையடுத்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆஷா கூறுகையில்,

எனக்கு அரசியல் பிடிக்காது. அது எனக்கு புரியவும் செய்யாது. ராஜ் தாக்கரே என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் சரி அவர் மீது நான் அன்பு வைத்துள்ளேன். நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவள். எனது மாநிலத்தை விரும்புகிறேன். நான் ஒரு பாடகி. எனக்கு இசையின் மொழி தான் புரியும். ராஜ் தாக்கரேவுக்கு எனது பாடல்கள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்றார்.

இந்த சந்திப்பு நடந்தபோது ஹோட்டலுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு?

Did Bipasha Basu Help Esha Gupta Do A Nude

மும்பை: ராஸ்3 படத்தில் நிர்வாணக் காட்சியில் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும் ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கூச்சம் நீங்கி, துணிச்சலாக ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா கூடவே இருந்து உதவியதாகவும் கூறப்படுகிறது.

ஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர் ஈஷா குப்தா. இந்த நிலையில் அவரது 2வது படம்தான் ராஸ் 3. இதில் அவர் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாணத்திற்குப் போய் விட்ட அவரைப் பாற்றி பாலிவுட்டில் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.

ஆனால் படப்பிடிப்பின்போது அவருக்கு கூச்சம் நீங்கி, தைரியமாக நடிக்க படத்தின் நாயகியான பிபாஷா பாசுதான் ரொம்ப ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின்போது பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும், ஈஷா குப்தா படபடப்பின்றி, தைரியமாக நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்து கூடவே இருந்தனராம். இந்தக் காட்சியில் ஈஷா நடித்தபோது கூடவே ஏகப்பட்ட பூச்சிகளும் அவரை சுற்றிச் சுற்றி கடிப்பது போல காட்டியுள்ளனராம்.

இப்படத்தில் பிபாஷாவும், ஈஷாவும் எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருந்தாலும் ஈஷாவுக்கு, பிபாஷா ரொம்பவே உதவியாக இருந்து நடித்தாராம்.

இப்படியே எல்லோரும் இருந்துட்டா, டைரக்டர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..

 

கார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா

Anushka Seeks Selvaraghavan S Permission   

சென்னை: அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை. இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவு்ககு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான இமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷூட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.

அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் 'பேட் பாய்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

 

சந்தானம் பிஸி.. கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்

Shankar S I Shooting Cancelled Because

சென்னை: காமெடி நடிகர் சந்தானத்தால் ஷங்கரின் ஐ பட ஷூட்டிங் கேன்சல் செய்யப்ப்டடுள்ளது.

இன்றைய தேதிக்கு கோலிவிட்டில் மிகவும் பிசியாக இருக்கும் காமெடி நடிகர் யார் என்றால் அது சந்தானம் தான். மனிதன் ஓடி, ஓடி நடி்ததுக் கொண்டிருந்தார். அவர் டேட் இல்லை என்று கூறினால் கூட இயக்குனர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரிடம் டேட் இல்லை என்று தெரிந்தும் அவரை அணுகி ப்ளீஸ் சந்தானம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து என் படத்திற்கு டேட் கொடுங்களேன் என்று ஒவ்வொரு இயக்குனரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட அவர்கள் இவ்வளவு இறங்கி வரும்போது பிஹ்ஹு பண்ண முடியாதல்லவா அதனால் சந்தானமும் எப்படியோ டேட் கொடுத்துவிடுகிறார். இப்படி அட்ஜெஸ்ட் பண்ணி டேட் கொடுத்தது இயக்குனர் ஷங்கரின் தலையில் வந்து விடிந்தது. ஆம், ஷங்கரின் ஐ படத்தில் சந்தானம் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தானம் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் ரெடியானார்கள்.

ஆனால் சந்தானத்தால் அன்றைய ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் போனது. இதனால் ஷூட்டிங் கேன்சல் ஆனது.

 

குடிபோதையில் காரோட்டி போலீசாரிடம் சிக்கிய பாலகிருஷ்ணா மகன்

Balakrishna S Son Mokshagna Makes

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் தவப் புதல்வன் மோக்ஷாக்னா குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன் அருமை மகன் மோக்ஷாக்னாவை மீடியாக்கள் கண்ணில் படாமல் வளர்த்து வந்தார். வெளிநாட்டில் படிக்கும் மோக்ஷாக்னா தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். பாலகிருஷ்ணா நடிக்கும் ஸ்ரீமன்நாராயணா படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு மகனை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார் பாலகிருஷ்ணா. மேலும் மோக்ஷாக்னா படிப்பை முடித்தவுடன் நிச்சயம் நடிக்க வருவார் என்று உறுதியளித்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் செய்தியாளர்கள் விறு, விறு என்று எழுத, புகைப்படக்காரர்கள் கிளிக், கிளிக் என்று போட்டோ எடுத்துத் தள்ளிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் டாடா சபாரி காரில் ஜுபிளி ஹில்ஸ் சோதனைச்சாவடி வழியாக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண ரெட்டி அந்த காரை நிறுத்தியுள்ளார். மோக்ஷாக்னாவிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது உறுதியானது.

இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த மோக்ஷக்னா மீது வழ்ககுப் பதிவு செய்துள்ளனர். எங்கே மீடியா வந்து போட்டோ எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் மோக்ஷாக்னா தனது நண்பர்களுடன் வேறு காரில் ஏறி பறந்துவிட்டாராம்.

 

ஜெயம் ரவியை ஆட்டிவைத்த காயத்ரி ரகுராம்

Jayam Ravi Romances Amala Paul Goa

சென்னை: நிமிர்ந்து நில் படத்தின் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் சொல்லியபடியே ஜெயம் ரவியும், அமலா பாலும் காதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலா பால் நடிக்கும் படம் நிமிர்ந்து நில். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சாலக்குடியில் சுமார் 12 நாட்கள் நடந்தன. அதிலும் கோவாவில் கடற்கரையோரம் அழகிய மர வீடு கட்டி அதில் ஷூட்டிங் எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வைத்து ஜெயம் ரவி, அமலா பால் டூயட் படமாக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடு்க்க அதை அப்படியே திருப்பி ஆடியுள்ளனர் ஹீரோவும், ஹீரோயினும். மர வீட்டில் எடுத்துள்ள இந்த பாடல் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காக ரவி அவரது உடலை சும்மா கும்மென்று ஆக்கியுள்ளார். அவரது புது கெட்டப்புக்கு எக்கச்ச பாராட்டுகள் வந்து குவிகிறதாம். வேலை வேலை என்று ஓடியதால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு ரவி தனது மனைவியுடன் கோவாவில் பொழுதைக் கழித்துவிட்டு வந்துள்ளார்.

 

சத்யமேவ ஜெயதேவுக்காக ஆமீர் கானை பெருமைப்படுத்திய டைம் பத்திரிக்கை

Aamir Khan First Bollywood Hero On

நியூயார்க்: சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் போட்டோ பிரபல பத்திரிக்கையான டைமின் அட்டைப் படத்தில் வந்துள்ளது.

சமூகப் பிரச்சனைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி அமெரி்க்கா வரை பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி பற்றி அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் பாலிவுட் ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆமீர்.

முன்னதாக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோரின் படங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தை அலங்கரித்தன. அவர்கள் தவிர முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா மற்றும் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் போட்டோவும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ...!

A Movie Named Facebook Launched

தமிழ்ப் படவுலகினருக்கு டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பஞ்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.

முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் பெயர்கள் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல. படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்த செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.

படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது...

வரட்டும், பார்க்கலாம்.

 

சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா

I M Not Engaged Rana Trisha   

எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.

திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.

கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.

இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.

இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.

மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

செப். 1ல் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் வெளியீடு.. பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

Nee Thaanae En Ponvasantham Audio Release Sep 1

சென்னை: கோடானுகோடி இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இசை ரசிகர்களும் கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீதானே பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை நேரு உள்ளரங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மெய்ன்ட் நிறுவனம் தயாரித்து, கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இசைஞானி இளையராஜா இந்தப் படத்தில் நடத்தியிருக்கும் இசைத் திருவிழா. படத்தின் பாடல்கள் குறித்த சில சாம்பிள்களை ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் குஷியைக் கிளப்பி விட்டு விட்டார் கெளதம் மேனன். இதனால் எப்பப்பா பாட்டு வரும் என்று அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

ஜீவா, சமந்தா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் இளையராஜா அழகான இசையைக் குழைத்து அமர்க்களமாக பாட்டு போட்டிருப்பதாக பேச்சு பலமாக அடிபடுகிறது.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் அதாவது பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள்ளரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு விழா தொடங்குகிறது. இதில் கெளதம் வாசுதேவ மேனன், இளையராஜா, ஜீவா, சமந்தா உள்பட அனைவரும் பங்கேற்கின்றனர்.

படத்தின் பாடல்களை நேரடியாக மேடையில் அரங்கேற்றுகிறார் இசைஞானி.

இந்த நிகழ்ச்சியை முழுமையாக கவர் செய்கிறது ஜெயா டிவி. வேறொரு நாளில் இந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்படும்.

 

'இருட்டறை'க்கு வராத பிந்து மாதவி!

Bindu Madhavi Bunks Soi Shooting   

பெங்களூரில் நடந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷூட்டிங்குக்கு வராமல் டிமிக்கி அடித்து விட்டாராம் நடிகை பிந்து மாதவி. இதனால் படக் குழுவினர் அப்செட் ஆகி விட்டனராம்.

கழுகு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிந்து மாதவி. அப்படியே சிலுக்கு போலவே இருக்கிறார் என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டதால் பிந்து மாதவிக்கு தன் மீதே காதல் வந்து விட்டதாம். அந்தப் பெருமிதத்துடன் தற்போது நடித்து வரும் பிந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் போய் விட்டனர். ஆனால் பிந்து மாதவியைக் காணோம். அன்று முழுவதும் அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். இதனால் ஷூட்டிங் கேன்சலாகி விட்டதாம்.

என்ன ஏது என்று விசாரித்தபோது அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி புதிதாக வந்த 3 படங்கள் தொடர்பான ஆழமான டிஸ்கஷனில் அவர் இருந்ததால்தான் சட்டம் ஒரு இருட்டறை ஷூட்டிங்குக்கு வர முடியாமல் போனதாக இன்னொரு தகவலும் கிடைத்ததால் படக் குழுவினர் கடும் அப்செட்டாம்.

உண்மை என்னவோ மாதவி ...!

 

ஹாலிவுட்டுடன் இணையப் போகிறதாம் தமிழ் இயக்குநர்கள் சங்கம்!!

Tamil Cinema Directors Association To Join Hollywood

சென்னை: ஏற்கெனவே தமிழ் இயக்குநர்கள் சிலர் ஹாலிவுட்டில் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தை ஹாலிவுட்டுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.

இயக்குநர் பிரபு சாலமன் அவருடைய நண்பர் ஜான்மேக்சுடன் இணைந்து `சாட்டை' என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழாவில், 'பெப்சி' தலைவரும், இயக்குநர்கள் சங்க செயலாளருமான அமீர் கலந்துகொண்டு பேசுகையில், "சினிமா என்பது கூட்டு முயற்சி. அதில் நிறைய பேர் உழைப்பு இருக்கிறது. இன்றைய சினிமாவில் மூத்த கலைஞர்களை இளம் கலைஞர்கள் மதிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் மூத்த கலைஞர்களை ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களை மதிக்க தவறியதில்லை.

மூத்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கடந்து வந்த பாதை வேறு. இப்போது நாங்கள் கடந்து செல்லும் பாதை வேறு. நாங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் இல்லாமல், சினிமா இல்லை. இந்தியாவிலேயே தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில்தான் முதல்முறையாக 'வெப்சைட்' தொடங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் சங்கத்துடன் இணைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் பேசும்போது கேட்டுக்கொண்டார். அந்த முயற்சியில் நிச்சயமாக ஈடுபடுவோம்.

இயக்குனர்கள் சங்கத்துக்கு இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். லிங்குசாமி போன்றவர்கள் இயக்குனர்கள் சங்கத்துக்கு தலைவராக வரவேண்டும்,'' என்றார்.

விழாவில் டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம் வாசுதேவ் மேனன், ஜெயம் ராஜா, ஜனநாதன், பிரபு சாலமன், சமுத்திரக்கனி, நடிகர்கள் விக்ரம் பிரபு, தம்பி ராமையா, யுவன், நடிகை மஹிமா, இசையமைப்பாளர் டி.இமான், பாடல் ஆசிரியர் யுகபாரதி, பட அதிபர் ஜான் மேக்ஸ் ஆகியோரும் பேசினார்கள்.

'சாட்டை' படத்தின் டைரக்டர் அன்பழகன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை டைரக்டர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.

 

எஸ்.தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது "கள்ளத்துப்பாக்கி" தயாரிப்பாளர் கொலை மிரட்டல் புகார்

Kallathuppakki Producer Files Life Threat Complaint

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் கலைப்புலி தாணு, எஸ்ஏ சந்திரசேகரன் ஆகியோர் மீது கள்ளத்துப்பாக்கி படத் தயாரிப்பாளர் ரவி தேவன் கொலைமிரட்டல் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிதேவன் (வயது 39). இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "நான், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சினிமா படம் ஒன்றை தயாரித்து வருகிறேன். இந்த படம் வெளிவரும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றை, எஸ்.தாணு தயாரித்து வருகிறார். துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்த, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நான் தடை ஆணை பெற்றுள்ளேன்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளர் எஸ்.தாணுவும், அடியாட்களை ஏவிவிட்டு, என்னை மிரட்டுகிறார்கள். செல்போன் மூலமும் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்குமாறு வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பாபிலோனா 'பாடி'யுடன் 'விஞ்ஞானி' விஎஸ் ராகவன்... - இது 'பொம்மை நாய்கள்' மேட்டர்!

Vs Raghavan Babilona Bommai Naaigal

தலைப்பைப் படித்துவிட்டு கன்னா பின்னா கற்பனைகளுடன் மேட்டருக்குள் வராதீர்கள். விரைவில் வரவிருக்கும் ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 'பாடி'க்கு விஞ்ஞான ரீதியில் உயிர்கொடுக்கும் விஞ்ஞானியாக மூத்த நடிகர் விஎஸ் ராகவன் நடித்துள்ளாராம்!

பாபா சினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், மூன்று பொம்மை நாய்கள் ஆக்ஷன் ஹீரோக்களாக நடித்துள்ளன. பகலெல்லாம் பொம்மைகளாக அலமாரியில் இருக்கும் இந்த மூன்று நாய்களும் இரவில் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறி எதிரிகளைப் பழி வாங்குகின்றன.

பொம்மை நாய்கள் எப்படி ஆக்ஷன் ஹீரோக்களாக மாறுகின்றன, ஏன் பழி வாங்குகின்றன என்பதை இயக்குனர் எஸ்.எஸ். பாபா விக்ரம் குழந்தைகளும் ரசிக்கிற விதத்தில் சொல்லியுள்ளாராம்.

இந்த பாபா விக்ரம் யார் என்று தெரிகிறதா..? கருணாநிதி கதை வசனம் எழுதி கண்ணம்மா என்று ஒரு படம் வந்ததே... அந்தப் படத்தின் இயக்குநர். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாம் இவரே.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. காரணம், மறைந்த பாடகி சொர்ணலதா பாடிய கடைசி பாட்டு இது.

பட்டுச்சேலை வாங்கித் தாரேன் வாம்மா...
ஒரு பவுன் நகை வாங்கித் தரேன் வாம்மா...

- என புஷ்பவனம் குப்புசாமி பாட பதிலுக்கு

பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா

- என சொர்ணலதா பாடியுள்ளார்.

இந்தப் பாடலுக்காக ஏவிஎம்மில் பெரிய கடைவீதி செட் போட்டு குறவன் - குறத்தியாக கருணாஸும் கோவை சரளாவும் ஆட, நடனக் கலைஞர்களுடன்
30 ஜோடி நிஜ குறவன் - குறத்திகளும் ஆடியுள்ளனர்.

பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டாமல், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி.எஸ். ராகவன் பொம்மை நாய்களுக்கு உயிர் கொடுக்கும் விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாபிலோனாவை சிலர் கொன்றுவிட, அந்த உடலுக்கு ராகவன்தான் உயிர்தருகிறாராம்!

ராதாரவி, நாசர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், பாண்டு, சூர்யகாந்த், சாம்ஸ், ஆர்த்தி, கிரேன் மனோகர், ஜாகுவார் தங்கம், டெல்லி கணேஷ், மும்பை மாடல் ப்ரியா, மைசூர் மாடல் காயத்ரி, பத்து வயது இளம் நட்சத்திரம் கண்ணம்மா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

'சிக்'கென்று ஒரு சிரிப்புப் படம்... கமலின் புதிய பிளான்!

Kamal May Join With Crazy Mohan Yet Another Laugh Riot

சென்னை: விஸ்வரூபம் படத்தை முடித்து விட்டு ஹாலிவுட்டுக்குள் காலடி எடுத்து வைக்கப் போகும் கமல்ஹாசன் அதற்கு முன்பாக தமிழில் ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

மின்னல் வேகத்தில் இந்தப் படத்தை ஆரம்பித்து எடுத்து முடித்து சட்டுப் புட்டென்று ரிலீஸ் செய்யப் போவதாகவும் கூறுகிறார்கள். இதில் கமலுடன் கை கோர்க்கப் போவது கிரேஸி மோகன்.

வழக்கமாக மிகப் பெரிய படத்தையோ அல்லது சீரியஸ் படத்தையோ நடித்து முடிக்கும்போது அடுத்து ஒரு லைட்டான படத்தைக் கொடுப்பது கமல்ஹாசனின் ஸ்டைல். இதை ஒரு வழக்கமாக கடைப்பிடித்து வரும் கமல்ஹாசன் தற்போது பெரும் பொருட் செலவில் விஸ்வரூபம் என்ற படத்தை முடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

ஹாலிவுட் படத்தை நடிப்பதோடு, இயக்கியும், கதை வசனம் எழுதியும் பணியாற்றப் போகிறார்.

ஆனால் அதற்கு முன்பு ஒரு முழு நீள காமெடிப் படத்தைக் கொடுக்கும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இப்படத்தின் வசனத்தை கிரேஸி மோகன் எழுதுவார் என்றும் தெரிகிறது. கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் இணைந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் காமெடிப் படங்கள். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் இணைக்கும் திட்டம் உள்ளதாம்.

இப்படத்தை படு சடுதியாக எடுத்து முடித்து வெளியிடும் திட்டத்தில் உள்ளாராம் கமல். இந்தப் படத்தை முடித்த பின்னரே அவர் ஹாலிவுட்டுக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

 

பார்வையற்றோர் - மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கிய சினேகா - பிரசன்னா

Sneha Prasanna Present Free Gifts

சென்னை: பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு உடை மற்றும் வீல் சேர்களை வழங்கினர் நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியர்.

அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தின் 32-வது ஆண்டுவிழா, சங்கத்தின் தலைவர் புலவர் ஏ.கே.அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. சாய் சமாஜ் தலைவர் கே.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவில், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் டி.விஜயகுமார், மாவட்ட மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு அதிகாரி சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வி.விஜயகுமார், மாற்றத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் எம்.பி.நந்தகுமார், சமூக சேவகி எம்.லதா, டபுள்யூ.ராமச்சந்திரன், என்.எப்.பி.நிர்வாகி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உடை, வீல் சேர், மாணவர்களுக்கு சி.டி ஆகியவற்றை, நடிகை சினேகா மற்றும் பிரசன்னா வழங்கினர்.

விழாவில், 'மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையின் நகலை வைத்து, வெளியூர் செல்லும் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதிலாக, பார்வையற்றவர்கள், தமிழகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 'ஆல் ரூட்' பஸ் பாஸ் வழங்கவேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்திருப்பதாக அகில இந்திய பார்வையற்றோர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.கே.அருணாசலம் தெரிவித்தார்.

 

முத்தத்திற்கு படு்க்கையறைக் காட்சியே மேல்: பிபாஷா பாசு

Bipasha Basu Prefers Love Making Over Smooching   

மும்பை: முத்தத்திற்கு படுக்கையறைக் காட்சியில் நடிப்பதே மேல் என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.

மாடலாக இருந்து நடிகையான பிபாஷா பாசுவும், முத்த மன்னன் இம்ரான் ஹஷ்மியும் நடித்துள்ள ராஸ் 3 படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பிபாஷா தனது திரையுலக வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,

2001ம் ஆண்டில் அஜ்னபி படத்தில் முதன்முதலாக நடித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை அளித்ததால் ராஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதலில் படங்களில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் தற்போது படங்களுக்கு தான் என்னுடைய முதல் முக்கியத்துவம்.

அனைத்து ஹீரோயின்களுமே அழகான ஆடைகள் அணிந்து, பாட்டு பாடி டான்ஸ் ஆடி, ஹீரோ தன்னை காப்பாற்றும் மசாலா படங்களில் நடிக்க விரும்புவார்கள். எப்பொழுதாவது தான் வித்தியாசமான படங்களில் நடிப்போம். பிறகு மீண்டும் மசாலா படங்களில் நடிக்கவே விரும்புவோம். ஏனென்றால் அங்கு தான் நிறைய பணம் புரளும்.

ராஸ் 3 படத்தில் இம்ரான் ஹஷ்மியுடனான முத்தக் காட்சி தான் இதுவரை படங்களில் வந்துள்ள முத்தக் காட்சிகளிலேயே மிகவும் நீளமானது. அந்த காட்சியில் அவருக்கு முத்தம் கொடுக்கும் வேளையில் பேசவும் வேண்டும் என்பதால் கஷ்டமாக இருந்தது. முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு பதில் படு்க்கையறைக் காட்சிகளில் நடிக்க விரும்பும் ஒரே ஹீரோயின் நானாக தான் இருப்பேன் என்று கூறிவிட்டு சிரித்தார்.

 

சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜெ வைத்த விருந்து!

Jaya Throws Party Film Personalitie

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா திரைப்பட நடிகர் நடிகையரை தனது இல்லத்துக்கு அழைத்து மதிய உணவு விருந்தளித்தார்.

மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச் சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி கவுரவித்த முதல்வர் ஜெயலலிதா, இன்று தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள், தனக்கு மூத்த கலைஞர்களுக்கு விருந்து வைத்தார்.

அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது.

இவர்களில் பழம்பெரும் திரைப்பட நடிகரும், துக்ளக் இதழாசிரியருமான சோ ராமசாமி, பழம்பெரும் திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, ஜமுனா, குமாரி சச்சு, ராஜஸ்ரீ, சுகுமாரி, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சுசீலா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு... இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி

I Learned Music With Decency Msv

சென்னை: ஜெயா டிவி சார்பில் தனக்கு நடந்த பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் நான்கே வரிகளில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கிதமும் எனக்குத் தெரியும். அதனால், என் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்பட பேருக்கு மட்டுமே பேச அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இதில் ஜெயலலிதாவின் உரைதான் மிகப் பெரியது. அவர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசித்தார்.

பின்னர் எம்எஸ்வியை ஏற்புரையாற்ற அழைத்தனர். அவர் மிகச் சுருக்கமாக இப்படிச் சொன்னார்:

"எனக்கு சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கீதமும் தெரியும். அதனால் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். இருக்கும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், எங்களால முடிஞ்ச இசைப்பணியை செய்யும் வல்லமையை இறைவன் தரணும்னு கேட்டுக்கிட்டு, முடிச்சிக்கிறேன்," என்றார்.

டிகே ராமமூர்த்தி ஒரு வணக்கம் போட்டுவிட்டு கீழே வந்துவிட்டார்.

பொதுவாக ஏற்புரையில் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவார்கள், நிகழ்ச்சியின் நாயகர்கள். ஆனால் எம்எஸ்வி, தன்னை விட தன் இசை பேசட்டும் என்ற நினைப்புடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார் போலும்!

 

மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது

Kannada Actor Arjun Arrested Harass

பெங்களூர்: மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

கன்னட நடிகர் அர்ஜுனுக்கு 34 வயது ஆகிறது. இவர் கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அர்ஜுனுக்கும் லதாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அர்ஜுன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி லதாஸ்ரீயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு லதாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஆனாலும் அர்ஜுன் அவரை விடவில்லை. நேற்று இரவு குடிபோதையில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த வீட்டுக் காவலருடன் சண்டை போட்டு, வீட்டுக்குள் புகுந்தார்.

வீட்டில் இருந்த லதாஸ்ரீயையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து லதாஸ்ரீ பெங்களூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் அர்ஜுனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

 

தலைமுறைகளைக் கடந்த இசை எம்எஸ்வியுடையது! - கமல்ஹாஸன்

Ms Vishwanathan Music Is Beyond Generations   

சென்னை: எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

ஜெயாடிவி 14-ம் ஆண்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைப் பாராட்டி கமல்ஹாஸன் பேசியது:

"இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி 'இது யாருடைய இசை?' என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

அதன்பிறகு அவள் பயிற்சி முடிந்து வந்ததும் நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து வந்தேன். இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை எனறார், இளையராஜா. அவரே அப்படி சொல்லி விட்ட பிறகு நான் என்ன சொல்லிப் பாராட்டுவது?

இங்கே வந்திருந்த அத்தனை கலைஞர்களையும் நமது முதல்-அமைச்சர் கவுரவித்து பாராட்டியபோது என்னையே பாராட்டியதாக உணர்ந்தேன். முக்கியமாக பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களை பாராட்டியபோது நான் சினிமாவில் முதன்முதலாக அவர்கள் பாடிய `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடலுக்குத்தான் வாயசைத்து நடித்தது மனதில் வந்தது. அவர்களை முதல்-அமைச்சர் பாராட்டியபோது என்னையே கவுரவித்தது போல் உணர்ந்தேன்", என்றார்.

கே பாலச்சந்தர்

இயக்குநர் கே பாலச்சந்தர் பேசுகையில், "1950-ம் ஆண்டுகளில் இருந்து இசையில் சாதனை செய்து வரும் இந்த இசை மேதைகளை போற்றும் விதத்தில் இவர்களுக்கு திரையுலகம் எடுத்திருக்க வேண்டிய விழாவை ஜெயா டி.வி. எடுத்திருக்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தமிழில் 24 படங்களிலும் தெலுங்கில் 10 படங்களிலும் பணியாற்றிய காலகட்டத்தை மறக்க முடியாது. நான், எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் மூவரும் பணியாற்றிய நாட்களில் எனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவரது இசைக்கு இன்னும் தேசிய அங்கிகாரம் கிடைக்காதது மட்டும் இன்னும் எனக்குள் ஏக்கமாகவே இருக்கிறது,'' என்றார்.

ஏவிஎம் சரவணன்

ஏவி எம் சரவணன் பேசுகையில், "மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அவருக்குப் பின் வந்த இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது.

அது அவர்கள் திறமைக்காக கிடைத்தது என்றாலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நிச்சயமாக அம்மா (முதல்வர்) அவர்களின் ஆசியுடன் அந்த விருதுகளும் இவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

 

வைகை அணையில்... வெண்ணிற ஆடை படப்பிடிப்பில்... - இசைஞானியின் ப்ளாஷ்பேக்

Ilayaraaja Remembers His First Shooting Experience

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது இளமை நாட்களில் பார்த்த முதல் ஷூட்டிங், ஜெயலலிதாவின் வெண்ணிற ஆடை படப்பிடிப்புதான் என்றார்.

விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.

அவர் பேசியது:

கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.

ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான்.

அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும் (பாடிக் காட்டுகிறார்...) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.

மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்..

அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு இளையராஜா பேசினார்.

 

என்னமா யோசிக்கிறாங்க... - முகமூடி படத் தலைப்புக்கும் வேணுமாம் தடை!!

Small Producer Seeks Ban Mugamoodi   

சென்னை: ஏதாவது ஒரு சொத்தைக் காரணம் இருந்தாலும், அதை முகாந்திரமாக வைத்து ரீலீஸ் நேரத்தில் ஒரு படத்தை முடக்க முடியுமா.. அதில் ஏதாவது பப்ளிசிட்டி கிடைக்குமா என்று ஆராய்வதில் டாக்டரேட் பட்டமே கொடுக்க வேண்டும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு.

சிறிய தயாரிப்பாளர் என்பது இவர்களுக்கு ஒரு ஆயுதம். அப்படி ஒரு ஆயுதத்துடன், நாளை மறுநாள் வெளியாக உள்ள மிஷ்கினின் முகமூடி படத்துக்கு தடை கேட்டு சிலர் களமிறங்கியுள்ளனர்.

சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் எம்.சசிகலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நான் அர்த்தநாரீஸ்வரர் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர். முகத்திரை என்ற தலைப்பில் சினிமா தயாரிக்கும்படி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்து, அதை சட்டப்படி 27.8.11 அன்று பதிவு செய்தோம்.

பல லட்சம் ரூபாய் செலவில் தயாராகும் இந்த படத்தை ஆர்.எஸ்.கணேஷ் இயக்குகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பத்திரிகை மற்றும் டி.வி.களில் வந்த விளம்பரத்தில், முகமூடி என்ற பெயரில் யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சினிமாப்படம் 31-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முகத்திரை என்ற பெயரை நாங்கள் பதிவு செய்த பிறகு அந்த பெயரை பிரதிபலிக்கும் வேறு பெயர்களை பதிவு செய்யக்கூடாது. ஆனால் முகத்திரை என்ற தலைப்பை ஒட்டிவரும் முகமூடி என்ற தலைப்பை பதிவு செய்துள்ளனர்.

முகமூடி என்ற பெயரில் சினிமா வெளியே வந்தால், மக்களுக்கு குழப்பம் ஏற்படுவதோடு, எங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே முகமூடி என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த 17-வது சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி, தென்னிந்திய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கில்டு, தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை பதிலளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ கதை முகமூடி. மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிப்பில் ஜீவா, நரேன், பூஜா, கிரீஷ் கர்னாட் நடித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது.

 

என் சிபாரிசை ஏற்கவில்லை: எம்.எஸ்.விக்கு பத்ம விருது தர மத்திய அரசு மறுத்துவிட்டது- ஜெயலலிதா

Delhi Denies Honour Msv Tk Ramamoorthy With Padma Award

சென்னை: இசை இரட்டையர் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் வழங்குமாறு சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினேன். ஆனால் மறுத்துவிட்டது, என்று குற்றம்சாட்டினார் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் 'நான் சொன்னால் இந்த விருதுகளைத் தரும் காலம் கனியும்.. அன்று கிடைக்கச் செய்வேன்', என்று உறுதியளித்தார்.

ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அவர் பேச்சு:

இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.

இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.

அதனால்தான் "இசைக்கு மயங்காதார் எவருமில்லை", "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி.

இசைப் பின்னணி இல்லாத எம்எஸ்வி..

இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஜெனோவா" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்' திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் வரை டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.

முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்; மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.

ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார்.

அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த' என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

வயலின் ஸ்பெஷலிஸ்ட் டிகே ராமமூர்த்தி..

டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா' என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி . அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.

நுட்பமான இசை..

இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை ராமநாதன், மகாதேவன், ஆதி நாராயண ராவ், சலபதி ராவ், தக்ஷிணாமூர்த்தி, சுப்பைய்யா நாயுடு, இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பதுதான் உண்மை.

உயிர் மூச்சுள்ளவரை...

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள். அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்திருக்கிறது. அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.

நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது. ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது. இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது.

இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.

"சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், "உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா" என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, உடனே வீணையை எடுத்து "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா" என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள்.

அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு திருப்பிவிட்டவர்கள்.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.

இசையை ரசிக்க ஞானம் வேண்டுமா...

இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.

சங்கீதத்தைப் பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.

இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.

இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.

ஒரு முக்கியமான கட்டத்தில், "பலே" என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.
தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

திரையிசையின் பொற்காலம்...

இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் "பொற்காலம்" என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.

இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.

என் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை...

சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. "ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்" என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963-ஆம் ஆண்டு விஸ்வநாதன் - ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.

இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

 

ரசிகர்களை மிரள வைத்த மடோனாவின் 'லோ கட்'!

Madonna Spills Of Her Basque Onstage

லண்டன்: 54 வயதானாலும் மடோனாவின் அழகும், ஸ்டைலும் சற்றும் கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கிறது. அவரது அழகு கொடுக்கும் இம்சையிலிருந்து மீள முடியாமல் ரசிகக் கண்மணிகள் தவியோ தவியென்று தவிக்கும் நிலை. இந்த நிலையில் படு லோ கட்டான ஒரு டிரஸ்ஸுடன் வந்து ரசிகர்களுக்கு மேலும் கிளர்ச்சியூட்டியுள்ளார் மடோனா.

மேடை நிகழ்ச்சிகளின்போது அவ்வப்போது மார்புகளைக் காட்டுவது, கவர்ச்சியாக ஆடுவது என்று கலக்கி வந்த மடோனா திடீரென படு லோ கட்டான ஒரு டிரஸ்ஸில் வந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அவரை படு கவர்ச்சியாகப் பார்த்த அத்தனை பேரும் திறந்த வாயை மூட முடியாமல் தவித்துப் போய் விட்டனராம்.

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த நிகழ்ச்சியின்போது லோ கட் பாஸ்க் உடையுடன் வந்தார் மடோனா. கிட்டத்தட்ட அவரது முக்கால்வாசி மார்பகங்கள் வெளியே தெரிந்தன. மார்புகளின் முனைப்பகுதியும் கூட கிட்டத்தட்ட வெளியே தெரிந்தது. அப்படி ஒரு பூதாகர கவர்ச்சி டிரஸ் அது.

அந்த மேடையில் மடோனாவின் மகன் ரோக்காவும் கூட இணைந்து பாடினார். மகன் இருக்கிறானே என்று கூச்சம் கூட மடோனாவிடம் துளியும் இல்லை.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்காவில் தனது கச்சேரிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் மடோனா என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரும்ப வருவேன் – அமீர்கானின் சத்யமேவ ஜெயதே சீசன் 2

Get Ready Satyamev Jayate Season 2

கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சத்யமேவ ஜெயதே சீசன் 2 மூலம் மீண்டும் மக்களை சந்திக்க வருவேன் என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது சத்யமேவ ஜெயதே. இந்தி நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி வெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இல்லாமல் இன்றைய சமூகத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது அமைந்தது. பெண் சிசுக்கொலை தொடங்கி பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை, வரதட்சணை கொடுமை, மருத்துவ முறைகேடுகள், ஆடம்பர திருமணங்கள், இன்றைய சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அவலங்கள் போன்ற தலைப்புகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதி கடந்த மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

இதனிடையே எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், தூம் 3, பிகே போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கின்றேன். இந்த படங்கள் முடிந்த உடன் மீண்டும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

சத்யமேவ ஜெயதே சீசன் ஒன்றிர்க்காக அமீர்கான் டீம் இரண்டு ஆண்டுகளாக நாடுமுழுவதும் சுற்றித்திருந்து தகவல்களை சேகரித்தனர். இது 13 பகுதிகளாக ஒளிபரப்பானது. மீண்டும் சீசன் 2 விற்கான பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

‘மானாட மயிலாட 7’ சிறப்பு விருந்தினர் டாப்ஸி

Aadukalam Heroine On Maanada Mayilaada

மானாட மயிலாட நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நடிகை டாப்ஸி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட பகுதி 7ன் இறுதிப் போட்டி மலேசியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 8 ம் தேதி மாலாவதி உள் அரங்கத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நான்கு ஜோடிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு நடிகர், நடிகையர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக், நடிகை டாப்ஸி பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மானாட மயிலாட பகுதி 7ன் நடுவர்களாக நடன இயக்குநர் கலா, நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!- அதிர வைத்த ரஜினி!

Success Or Defeats Not Affect Leaders Like Karunanidhi

சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு. அந்தப் பேச்சு முழுவதுமாக:

“இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.

இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.

எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க்.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்…

ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.

இது எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.

அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா… நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…

எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.

அந்தப் படத்துல ஒரு பாட்டு, ‘அவளுக்கென்ன அழகிய மனம்..’. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.

‘அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே… அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,’ என்றார்.

ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா… இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.

நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது… என்ன அவர் காவி உடை போடல… மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.

மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். ‘மண வினைகள் யாருடனோ..’ எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.

சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல ‘சம்போ சிவ சம்போ…’ பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.

எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது… பினிஷ்.. அவ்வளவுதான்.

இன்னொரு வகை… மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.

ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

என் ஆருயிர் நண்பர் டாக்டர் கலைஞர்…

வடக்கில் பார்த்தீங்கன்னா… சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்… இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி… இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.

ஏன்னா… அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.

அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்.”

-இவ்வாறு பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

கணவருடன் மட்டுமே செக்ஸாம்: சொல்கிறார் சன்னி லியோன்


Sex Only With Hubby Sunny Leone   
மும்பை: நீங்க நம்பினால் நம்புங்க, இல்லாட்டி போங்க சன்னி லியோன் கணவருடன் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்வாராம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரது இயற் பெயர் கரண்ஜித் கௌர் வோரா. நடித்ததோடு மட்டுமல்லாமல் ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார். ஆபாச படத்தில் நடிக்க இளவர் ஹாரி்ககு ரூ.55 கோடி தர முன்வந்த விவிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார். இந்நிலையில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமான அவர் ஜிஸ்ம் 2 இந்தி படத்தில் நடித்த கதை உங்களுக்கே தெரியும்.

இந்நிலையில் அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளி்தத பேட்டியில் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் ஷோ மூலம் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. அந்த ஷோவில் கலந்து கொள்வது என்பது தான் இதுவரை நான் எடுத்த முடிவுகளிலேயே சிறந்தது. நான் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. நான் எனது கணவர் டேனியல் வெப்பருடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வேன். மற்ற யாருடனும் உறவு வைத்துக் கொள்வதில்லை. அது எல்லாம் படத்திற்காக ஷூட் செய்வது. அதனால் அது வித்தியாசமாகத் தெரியாது என்றார்.
 

உலகுக்கோர் 'நற்செய்தி'... சினிமாவில் நடிக்கிறார் பூனம் பாண்டே!

Hollywood Cinematographer Capture Poonam Pande
மும்பை: அப்பாடா... பூனம் பாண்டே பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது... எஸ்... அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். வழக்கம் போல கவர்ச்சியில் வெளுத்துக் கட்டப் போகிறார். அவரது கவர்ச்சியை 'தரோ'வாக படம் பிடிக்க ஹாலிவுட்டிலிருந்து ஒரு கேமராமேனை புக் செய்துள்ளனராம்.

குமார் மங்கத் இயக்கும் இப்படத்தில் பூனம் பாண்டேவின் மொத்த அழகையும் நிரப்பத் திட்டமிட்டுள்ளனராம். இதனால்தான் உள்ளூர் 'ஆட்டக்காரர்கள்' சரிவர மாட்டார்கள் என்பதால் ஹாலிவுட்டிலிருந்து 'வெளியூர் ஆட்டக்காரரான' கேமராமேன் ஜேம்ஸ் பவுல்ட்ஸை கூட்டி வருகின்றனராம்.

படம் முழுக்க இதுவரை பார்த்திராத பூனம் பாண்டேவைப் பார்க்கலாமாம். அப்படி ஒரு அழகு படத்தில் மிளிருமாம். ஈகிள் ஹோம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

பவுல்ட்ஸ் ஹாலிவுட்டில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கேமராமேனாக இருந்திருக்கிறாராம். டார்க் ஹன்டர்ஸ், டூப்ளிசிட்டி, அப்சலூட் பவர் உள்ளிட்ட சில படங்களின் டைட்டில் காட்சிகளை படம் பிடித்திருக்கிறாராம்.

தற்போது இப்படம் தொடர்பான படப்பிடிப்புக்கு முந்தைய ஒர்க்ஷாப் நடந்து வருகிறதாம். அதில் பூனம் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறாராம். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். விறுவிறுப்பாக படத்தை எடுத்த முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

டிவிட்டரில் ஏற்கனவே பிரளயத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பூனம். இந்த நிலையில் பெரிய திரையில் தனது பிரமாண்டக் கவர்ச்சியை கொட்டிக் கவிழ்க்கப் போகிறார்...

நாயகி பூனமே நீங்க நல்லவரா, கெட்டவரா....?!
 

ரசிகர்களை ராத்திரியில் வியர்க்க வைத்த கிம் கர்தஷியான்!

29 Kim To Bed
கிம் கர்தஷியானுக்கு இருந்தாலும் இத்தனை குரூர மனப்பான்மை இருக்கக் கூடாதுங்க. ராத்திரி தூங்கப் போகும்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படு ஹாட்டான படத்தைப் போட்டு விட்டு குட்நைட் சொல்லி விட்டுப் போய் விட்டார். அவர் பாட்டுக்குப் போய் விட்டார், ஆனால் ரசிகர்கள்தான் தூக்கத்தைத் தொலைத்து ஏங்கித் தொலைக்க வேண்டியதாகி விட்டது.

31 வயதானாலும் பக்கா இளமையுடன் கிக்காக திரிந்து கொண்டிருக்கிறார் கிம். அவரது ஏடாகூட செயல்களால் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷம்தான். இந்தநிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு விறுவிறுப்பான படத்தைப் போட்டுள்ளார் கிம்.

அன்டர்வெர் மற்றும் பிராவுடன் படு கிறக்கமாக தோன்றுகிறார் இந்தப் படத்தில் கிம். அவரது மார்பகம் கிட்டத்தட்ட முழுசாக தெரிகிறது. மேலும், அவரது கழுத்திலிருந்து மார்பு வரை அழகாக தொங்கிக் கொண்டிருக்கிறது 15.0 மில்லியன் டாலர் மதிப்பிலான அழகான நெக்லஸ்.

இந்தப் படத்தைப் போட்டு விட்டு நைட்டி நைட் என்றும் ஒரு கமெண்ட்டைப் போட்டு விட்டு ஓடியுள்ளார் கிம்.

அதேபோல பர் கோட் அணிந்து இன்னொரு படத்தையும் போட்டு வைத்துள்ளார் கிம். ஆனா அதை யாரும் ரசித்துப் பார்த்ததாக தெரியவில்லை...
 

துபாய் போகும் வழியில் எப் 1 வீரருடன் லண்டனில் 'ஹால்ட்' அடித்த ஹாலிவுட் நடிகை!


Nicole S 24 Hour Pit Stop With Lewis
லாஸ் ஏஞ்சலெஸ்: துபாயில் நடந்த படப்பிடிப்புக்காக லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து கிளம்பிய ஹாலிவுட் நடிகை நிக்கோல் ஷெர்சிங்கர், வழியில் லண்டனில் தரையிறங்கி தனது காதலரும், எப் 1 கார்ப் பந்தய வீரருமான லூயிஸ் ஹாமில்டனுடன் இரவைக் கழித்துள்ளார். அதன் பின்னர் காலையில் மறுபடியும் துபாய்க்குக் கிளம்பிச் சென்றுள்ளார்.

34 வயதாகும் நிக்கோல், துபாயில் தொடங்கவிருந்த டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்செலஸிலிருந்து சனிக்கிழமை இரவு கிளம்பினார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் வந்து சேர்ந்த அவர் அங்கு இறங்கி லூயிஸ் ஹாமில்டனை சந்திக்க ஓடினார். இருவரும் இரவை ஒன்றாக களித்தனர். பின்னர் காலையில் குளித்து முடித்து, ஹாமில்டனுடன் சாப்பிட்டு விட்டு துபாய்க்குப் புறப்பட்டுப் போயுள்ளார். திங்கள்கிழமை துபாய் போய்ச் சேர்ந்து விட்டார் - அதாவது திட்டமிட்டபடி சரியாக போய் விட்டார்.

துபாய் போன பின்னரும் ஹாமில்டனை மறக்க முடியாமல் அவருக்குப் போன் செய்து ஒரு மணி நேரம் பேசித் தீர்த்தாராம்.

கடந்த மாதம்தான் ஹாமில்டன் குறித்து சன் பத்திரிக்கையில் ஒரு பலான் செய்தி போட்டிருந்தனர். அதாவது பத்து பெண்களுடன் ஒரே அறையில் கொட்டமடித்தார் ஹாமில்டன் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் அப்செட் ஆகியிருந்தார் நிக்கோல். ஆனால் தற்போது இருவரும் மீண்டும் வழக்கம் போல நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனராம்.
 

அக்டோபரில் சயீப் - கரீனா திருமணம் உறுதி! - ஷர்மிளா தகவல்

Saif Kareena Will Marry October

மும்பை: வரும் அக்டோபர் மாதம் சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என சயீப்பின் தாயார் ஷர்மிளா தாகூர் தெரிவித்தார்.

கரீனா கபூரும், சயீப் அலிகானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் அக்டோபர் 16-ந்தேதி திருமணம் நடக்கலாம் என தகவல் பரவியது. ஆனால் சயீப் அலிகான் இதனை மறுத்தார். தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.

தற்போது சயீப் அலிகானின் தாயாரும், முன்னாள் நடிகையுமான ஷர்மிளா தாகூர் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் கரீனா கபூர் - சயீப்அலிகான் திருமணம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். ஆனால் தேதியை உறுதியாகக் கூறவில்லை. இதுபற்றிய தகவலை சயீப்பே அறிவிப்பார் என்றார் ஷர்மிளா.

இந்தத் திருமணம் டெல்லி அல்லது மும்பையில்தான் நடக்கும் என்றும், தங்களின் சொந்த ஊர் படோடியில் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

சயீப் அலிகான் பட்டோடி சமஸ்தானத்தின் நவாபாக உள்ளார். பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதி. வக்பு வாரிய சொத்துக்களுக்கும் காப்பாளர் அவரே.

 

ஆயுர்வேத சாலை மசாஜ்... 'சௌந்தர்யா' படம் சொல்லும் மெஸேஜ்!

Soundarya Comes With Message   

ஆயிர்வேத சாலையில் மசாஜ் பார்லரில் வேலை பார்க்கும் பெண் ஒருவரைப் பற்றி ஒரு இளைஞன் சொல்லும் பொய் அவளை எப்படி சிதைத்துவிடுகிறது என்பதைச் சொல்கிறதாம் சௌந்தர்யா திரைப்படம்.

ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌.

பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ எப்‌எம்‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.

ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா‌. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌ நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்‌. அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌ மறுக்‌கி‌றா‌ள்‌.

இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌. அந்‌த வன்‌முறை‌ தா‌ங்‌காது செ‌ளந்‌தர்‌யா உயி‌ரை‌ இழக்‌கி‌றா‌ள்‌. பி‌றகு அவள்‌ ஆவி‌யா‌க வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய களத்‌தி‌ல்‌, பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல்‌, பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌,‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.

மே‌லும்‌ அவர் கூறுகை‌யி‌ல்‌, "இந்‌தப்‌ படத்‌துல ஒரு மெ‌சே‌ஜ் இருக்‌கு. சீ‌ரி‌யஸா‌ இருந்‌தா‌லும்‌ அதை‌ உணர்‌ற மா‌திரி‌ நகை‌ச்‌சுவை‌யோ‌டு சொ‌ல்‌லி‌ருக்‌கே‌ன்‌.ரெ‌ண்‌டரை‌ மணி‌ நே‌ரம்‌ போ‌வதே‌ தெ‌ரி‌யா‌மல்‌ கலகலப்‌பா‌க படம்‌ இருக்‌‌கும்‌..." என்‌றா‌ர்‌

தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ குருவண்‌ண பஷீ‌ர்‌ கூறுகை‌யி‌ல்‌, "யா‌ர்‌ தப்‌பு‌ செ‌ய்‌தா‌லும்‌, அவர்‌களுக்‌கு இந்‌த பூ‌மி‌யி‌லே‌யே‌ தண்‌டனை‌ கி‌டை‌ச்‌சி‌டும்‌ என்‌பதுதா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தோ‌ட கருத்‌து. தீ‌ஙகு செ‌ய்‌யமா‌ல்‌ இருக்‌கவு‌ம்‌, தெ‌ரி‌ந்‌தோ‌, தெ‌ரி‌யா‌மலோ‌ செ‌ய்‌த தவற்‌றை‌ நி‌னை‌த்‌து சி‌லர்‌ தி‌ருத்‌தி‌க்‌க ஒரு வா‌ய்‌ப்‌பா‌கவு‌ம்‌ ஒரு உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க இந்‌தப்‌ படம் இருக்‌கும்‌‌. செ‌ய்‌த தவறை‌ நி‌னை‌த்‌து ஒரு ஆள்‌ வருத்‌தப்‌பட்‌டா‌ல்‌ கூட எங்‌களுக்‌கு பெ‌ரி‌ய தி‌ருப்‌தி‌தா‌ன்‌..." என்‌றா‌ர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌களை‌ கவி‌குமரன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌.

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.

 

நீர்க்குமிழியும் ரீமேக் ஆகிறது - நாகேஷ் வேடத்தில் விவேக்!

Selva Remake Neerkumizhi With Vivek

பாலச்சந்தரின் க்ளாஸிக் படமான நீர்க்குமிழியும் ரீமேக் அலைக்குத் தப்பவில்லை. அந்தப் படத்தை பாலச்சந்தரின் சிஷ்யரான பழைய பட ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் செல்வா இயக்கப் போகிறார்.

நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்கிறார்.

1965-ல் வெளிவந்து ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம் நீர்க்குமிழி. நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருப்பார் நாகேஷ். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆடியடங்கும வாழ்க்கையடா.. இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரமிடுகிறது.

நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்க, இதே பெயரில் அந்தப் படத்தை இயக்குகிறார் செல்வா. இவர் ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கி, ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘நான் அவனில்லை‘ படத்தை ரீமேக் செய்தவர்.

நீர்க்குமிழி ரீமேக் செல்வா கூறுகையில், "ரீமேக் என்பது தப்பான காரியமல்ல. நல்ல விஷயம். பழைய க்ளாஸிக் படங்களை உயிர்ப்புடன் வைக்க உதவும். அந்த வகையில்தான் நீர்க்குமிழி ரீமேக் இருக்கும். இந்தப் படத்தின் உரிமையைப் பெற்ற பிறகு முறையான அறிவிப்பு வரும். விவேக்தான் ஹீரோவாக நடிக்கிறார்,' என்றார்.

 

கற்பழித்த பெண்ணையே 4வது மனைவியாக்க முயல்கிறார்: நடிகரின் 3வது மனைவி புகார்

Actor Selvaraja Molested Girl Complaints Third Wife

சென்னை: கற்பழித்த பெண்ணையே நான்காவது மனைவியாக்க முயற்சிக்கிறார் என்று நடிகர் செல்வராஜாவின் 3வது மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24).

இந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், செல்வராஜா ஏற்கனவே தனக்கு 2 முறை திருமணமானதை மறைத்து என்னை மணந்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இந்நிலையில் 4வதாக ஒரு பெண்ணை மணக்கவிருக்கிறார். அவரிடம் எந்த பெண்ணும் சிக்கிவிடாமல் காப்பாற்றுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் ரீட்டாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

நான் எனது கணவர் செல்வராஜாவுக்கு உறவுப்பெண். எனது 16வது வயதில் நான் எனது கணவரிடம் அவரது கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் என்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் என்னை கைவிடாமல் வீட்டிலேயே தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கும் விவரம் அப்போது எனக்கு தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் காலப்போக்கில் அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டார். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், என்னை அடித்து உதைத்து துன்புறுத்துவார். நான் வெளியில் சென்றிருந்தபோது, யாருடன் படுத்தாய் என்று கேவலமாக பேசுவார். வீட்டில் பொருத்தி இருந்த ரகசிய கேமராவை பார்ப்பார். அவரது அடி-உதை சித்ரவதையை தாங்க முடியாமல் நான் தவித்தபடி இருந்தேன்.

இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணையும் கெடுத்து பாழாக்கிவிட்டார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் எனது கணவரை கைது கூட செய்தனர். இப்போது அதே மஞ்சுவை 4வது திருமணம் செய்ய எனது கணவர் முயற்சிக்கிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் எனது கணவரிடம் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும். அவர் வழியில் அவர் போகட்டும், என்வழியில் அவர் குறுக்கே வராமல் எனக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

நேற்று செல்வராஜாவையும், ரீட்டாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்றாக உட்கார வைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் ரீட்டா தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். மேலும் செல்வராஜாவும் ரீட்டாவை விட்டுப் பிரிய சம்மதித்ததுடன் அவரது வாழ்க்கையில் இனி தலையிட மாட்டேன் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர்.

முன்னதாக 4வது திருமணம் குறித்து செல்வராஜாவிடம் கேட்டதற்கு, தான் யாரையும் திருமணம் செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.

 

காமெடியாகத்தானே பேசினேன், மன்னிச்சிருங்க... பார்த்திபன்

Parthiban Apologies His Speech On Lord Shiva

சென்னை: நான் தில்லுமுல்லு படத் தொடக்க விழாவில் பேசியது பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில்தான். நகைச்சுவையாகத்தான் பேசினேன். அது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர்-இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

தில்லுமுல்லு பட நாயகி இஷா தல்வார் மட்டும் கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு டூயட் பாட வருவார் என்று பேசியிருந்தார் பார்த்திபன். இந்தப் பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. போராட்டத்தையும் அறிவித்திருந்தது.

இதையடுத்து மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டுள்ளார் பார்த்திபன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தினங்களுக்கு முன், தில்லுமுல்லு பட தொடக்க விழாவில் நான் பேசிய நகைச்சுவையான பேச்சு வெளியாகியிருந்தது.

அந்த பேச்சு பிரச்சினைக்குரியதாக ஆக்கப்பட்டு, முற்றுகை போராட்டம் என்று பூதாகரமாகி விட்டது. நான் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்தவும், பார்வையாளர்களை மகிழ்விக்கவும் மட்டுமே. அதற்கு ஓட்டை காலணாவைக் கூட சன்மானமாக பெறுவதில்லை.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை. அதை பயன்படுத்தி யாரை திட்டும் திட்டமிடுதலும் இல்லை.

கடவுள் விருப்பு-மறுப்பு என்பது அவரவர் ஏற்பு. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒருவரின் நம்பிக்கை, அது விருப்போ-மறுப்போ அதை புண்படுத்த எவருக்கும் அதிகாரமில்லை.

சிவனே சிவனேன்னு இருக்க முடியாது என்று நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பின்னர் வருத்தப்பட்டேன். அந்த பேச்சின் மூலம் யார் மனம் புண்பட்டி ருந்தாலும், அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனம்தான் கோவில். அதில் உள்ள நல்லெண்ணங்களே தெய்வம். அதன் மீது கல்லெறிவது என்னைப் பொருத்தவரை அது தெய்வ குற்றம். நான் கடவுள் நம்பிக்கை மிகுந்தவன். அந்த கடவுள் காட்சிப்படுத்த முடியாதது. எந்த கட்சிக்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதது.

ஆண்பால்-பெண்பால், உருவம்-அருவம் என்று எதற்குள்ளும் கட்டுப்படாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு அண்டம். விவரிப்பிற்கு அப்பாற்பட்ட விஸ்தீரம். அதை நான் உள்ளொளியாய் வழிபடுகிறேன்.

நாம் அனைவரும் உடனடியாக போராடி தீர்க்கப்பட வேண்டியது, (ஊழல்) வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவில், வறுமையால் ஒரு சிறு வயிறும் வாடாமல் இருப்பதே. மனிதம் வளர்ப்பது தெய்வத் திருப்பணியே என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

 

அறுசுவையும் 5 வகை உணவும்: வணக்கம் தமிழா

Makkal Tv Vanakkam Tamizha

நாம் உண்ணும் உணவே நம் உடல்நலத்தை தீர்மானிக்கிறது. நாம் எந்த வகை உண்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் நமக்கு கிடைக்கிறது என்று மக்கள் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தெரிவித்தார் உடல்நலப் பயிற்சியாளர் சங்கர்.

பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் உடற்பயிற்சி, யோகா, சமையல், உணவு என்று ஒளிபரப்புகின்றனர். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக மாலை நேரத்தில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை தருவது சிறப்பம்சம். பெண்கள் கற்றுக்கொள்ள கைத் தொழில் தொடங்கி, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு வீரக்கலை வரை கற்றுத்தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த நிபுணர்கள் பங்கேற்று இதில் ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர்.

எட்டுவிதமான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் பகுதியில் பெண்கள் பேன்சி நகைகள் செய்ய கற்றுத் தருகின்றனர். எண்சான் உடம்பை எழிலாக்குவோம் பகுதியில் உடற்பயிற்சி நிபுணர் சரவண் உணவுத்திட்டம் பற்றி தெரிவித்தார். தெரியும், தெரியாது நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ரேவதி சங்கரன் மூளையின் திறமையை பற்றி எடுத்துரைத்தார்.

திருவாசகத்தேன் என்னும் இசை நிகழ்ச்சியில் செவிக்கினிய தமிழிசை பாடல்களை பாடினார்கள்.

மருந்தில்லா மருத்துவம் உடல்நல பயிற்சியாளர் சங்கர் உடல் ஆரோக்கியத்திற்கு 6 சுவை உணவு உண்ணவேண்டும் என்றும் அதற்கேற்ப 5 வகை உணவுகளையும் கூறினார். முதல்வகை உணவுகள் பழங்கள் இது உடலுக்கு நல்லது. இதில் அனைத்து வகை சத்துக்களும் உள்ளது. உயிர்ச்சத்து உள்ளதால் உடலுக்கு எல்லாவித சத்துக்களும் கிடைக்கிறது. இந்த பழங்களை உண்பதால் மனிதனின் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். இரண்டாம் வகை உணவு முளை கட்டிய தானியங்கள் பயிறுவகைகள். உயிர் ஊட்டப்பட்ட உணவு. பச்சை காய்கறிகள், கீரைகள் மூன்றாம் வகை உணவு. இவற்றை பச்சையாக சாப்பிட்டால் 6 சுவைகளும் அப்படியே கிடைக்கும். சமைத்த உணவுகள் நான்காம் வகை உணவு, நாம் சாப்பிடும் உணவில் 6 சுவை இருக்கவேண்டும். சமைத்த உணவில் 3 சுவைதான் இருக்கிறது. நிறைய ரசாயனம் கலந்து உண்கிறோம் எனவேதான் நோய்கள் தாக்குகின்றன. மாமிச உணவு 5 ம் வகை உணவு இவற்றை உண்பது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து வெற்றியை நோக்கி என்ற தன்னம்பிக்கை பகுதியும், வீரக்கலை பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான சிலம்பாட்டம், கராத்தே நிகழ்ச்சியும் கற்றுத்தரப்பட்டது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை ஜாஸ்மின் தொகுத்து வழங்குகிறார்.