'ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக தமிழ்ப் படமான '3' ஐ பார்க்க நேரிட்டது. இதில் ஸ்ருதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. நிகில் இயக்கும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. இந்த காட்சிகள் நம்பும்படியாக இருக்க, ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்று நிகில் நினைத்தார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்தோம்' என்று நிகில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகில் அத்வானி படத்தில் அர்ஜுன் ராம்பால், இர்பான் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயினாக ஹுமா குரேஸி நடிக்கிறார்.
Post a Comment