மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் இன்று வெளியானது.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். மீனவர் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படங்கள், நடிகர் நடிகையர் படங்கள் என எதையும் வெளியிடாமல் இருந்தார் மணிரத்னம் (அது அவர் ஸ்டைலாம்!).
இன்றுதான் முதல் முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதிலும் கூட நாயகன் நாயகி உள்ளிட்ட யாருடைய முகமும் இல்லை. கடலை ஒரு இளைஞன் திரும்பி நின்று பார்ப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment