நீர்ப்பறவை நெஞ்சைத் தொட்ட கதை

|

neerparavarai  விஷ்ணு, சுனேனா, நந்திதா தாஸ் நடித்துள்ள 'நீர்ப்பறவை' படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நடித்துள்ளது பற்றி நந்திதா தாஸ் கூறியதாவது:கடந்த இரண்டு வருடமாக என் மகனை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தேன். 'நீர்ப்பறவை' கதையை கேட்டதும் எனக்குப் பிடித்திருந்தது. இதில் மீனவரின் மனைவியாக நடித்துள்ளேன். சர்வதேச கடல் எல்லையை அறியாமல் தாண்டிச் செல்கிற மீனவர்களை மற்ற நாட்டு ராணுவம் சுட்டுக்கொல்வது, பிடித்துச்செல்வது பற்றியான கதைதான் 'நீர்ப்பறவை'. தனிபட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் இது நெஞ்சைத் தொடுகிற விஷயம். இதில் அநீதிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் வேடத்தில் நடித்துள்ளேன். இதையடுத்து இன்னும் சில சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க இருக்கிறேன். நாடகங்களிலும் பங்குபெற இருக்கிறேன். நடிப்பது, படம் இயக்குவது, நாடகம் என்று சொல்கிறீர்களே அடுத்து என்ன என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாக ஈடுபடுகிறேன். இப்போது இதழ் ஒன்றில் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.இவ்வாறு நந்திதா தாஸ் கூறினார்.
 

Post a Comment