எனக்கு திருமணமா? கவுரி முஞ்சால் கோபம்

|

gowri munjal angry தமிழில், 'தொட்டால் பூமலரும்', 'சிங்கக்குட்டி' படங்களில் நடித்தவர் கவுரி முஞ்சால். அவர் கூறியதாவது:தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவருகிறேன். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தது பெருமைதான். என்றாலும் சமீபகாலமாக தமிழில் காண முடியவில்லையே என்கிறார்கள். நான் அமைதியானவள். எந்த பரபரப்பையும் விரும்பாதவள். அதனால் வாய்ப்புகளைத் தேடிப் போகவில்லை. வரும் படங்களில் நடிக்கிறேன். நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. கடந்த சில வருடங்களாக என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர்க¬ளை கவனித்துக்கொண்டேன் என்றாலும் திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. உடல் எடையை பத்துகிலோ வரை குறைத்துள்ளேன். இப்போது அதிக வாய்ப்புகள் வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும் சிறந்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன்.

 

Post a Comment