நாளிதழ், வாரஇதழ் என எதுவாக இருந்தாலும் சினிமா பற்றிய செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குவார்கள். அதேபோலத்தான் இணையதளங்களிலும் சினிமாவிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். இப்போது சின்னத்திரையிலும் சினிமா செய்திகளை எல்லோரும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.
ஜெயா டிவியில் ‘சினிமா' என்ற புதிய நிகழ்ச்சியை சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் புதுமையாக சினிமா பிரபலங்களில் சமூகவலைதளப் பதிவுகளைப் பற்றிய செய்திகளை கூறுகின்றனர். இன்றைக்கு சினிமா செய்திகளை படிக்கவும், பார்க்கவும் தனி ரசிகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகவே ஜெயா டிவியில் சினிமா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் தொகுத்து தருகின்றனர்.
திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. புதியதாக சினிமா பிரபலங்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள், அவர்களின் பதிவுகளும் இந்த சினிமா நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு அம்சம். வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Post a Comment