குழந்தை கடத்தல் கதையில் கேரள ஹீரோயின்

|

Kerala heroin the story of child trafficking குழந்தை கடத்தல் கதையில் மலையாள ஹீரோயின் அறிமுகமாகிறார். 'என்னவளே, 'ஜூனியர் சீனியர், 'வேலை போன்ற படங்களை இயக்கிய ஜே.சுரேஷ் அடுத்து 'பாரசீக மன்னன் என்ற படத்தை எழுதி இசை அமைத்து இயக்குவதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் அச்சப்பட வைக்கிற விஷயமாக குழந்தை கடத்தல் சம்பவம் நடக்கிறது. கடத்தப்படும் குழந்தைகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள்.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் பின்னணி என்ன? அவர்கள் பெறும் ஆதாயம் என்ன? என்பதை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், திலீப் போன்றவர்களுடன் நடித்த ஸ்ருதிலட்சுமி ஹீரோயின். ரமேஷ் கண்ணா, பாண்டு, பாலாஜி, ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். நூதலப்பட்டி பிரகாஷ் ஒளிப்பதிவு. கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப்குமார் தயாரிப்பு. இசை ஆலோசனை, யுவன் சங்கர்ராஜா. சென்னை, கோவை, கேரளா, மும்பை, புனே, பாங்காக், துபாய் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
 

Post a Comment