மீண்டும் தேதியை மாற்றினார் கமல்... 7-ம் தேதி விஸ்வரூபம் ஆடியோ!!

|

Kamal Haasan Viswaroopam Audio On Dec

விஸ்வரூபம் பட இசை வெளியீடு கடந்த நவம்பர் 7-ம் தேதி, கமல் பிறந்த நாளில் வெளியாகவிருந்தது. ஆனால் தட்பவெப்ப நிலை சரியில்லை என்று கூறி இந்த விழாவை அப்போது ரத்து செய்தார் கமல்.

இந்த நிலையில் விஸ்வரூபம் ஆடியோவை சோனி நிறுவனம் வாங்கியதாக அறவித்து.

அதன் பிறகு, டிசம்பர் 2-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியிடப்படும் என்றார்கள். ஆனால் அந்தத் தேதியும் மாறிவிட்டது.

இப்போது டிசம்பர் 7-ம் தேதி இசை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மதுரையில் வேலம்மாள் மைதானத்தில் காலையிலும், கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகலிலும், சென்னையில் மாலையிலும் நடக்கப் போகிறதாம்.

சென்னையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பற்றிய தகவலை மட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை கமல்.

 

Post a Comment