இசைஞானி இளையராஜாவின் 920வது படமாக வருகிறது நீதானே என் பொன்வசந்தம்.
இந்திய சினிமாவில் யாரும் தொடாத உச்சத்தைத் தொட்ட இசையமைப்பாளர் இளையராஜா. விருதுகளைத் தாண்டிய பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். எண்பதுகளிலேயே ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த பெருமை அவருக்குண்டு.
அவரது முதல்படம் அன்னக்கிளி. 100வது படம் மூடுபணி. 300வது படம் உதயகீதம். 400வது படம் நாயகன்....
இப்போது ஆயிரம் படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் இசைஞானி. இப்போது அவரது இசையில் வெளியாகும் நீதானே என் பொன்வசந்தம் அவரது 920வது படமாகும்.
எண்பதுகளில் ஒரே ஆண்டில் 50 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த சாதனையை எந்த மொழியிலும் யாராலும் இதுவரை தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் எண்ணிக்கை என்பதைத் தாண்டி, தனது அத்தனைப் படங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் தன் முத்திரையைப் பதித்தவர் ராஜா என்றால் மிகையல்ல.
Post a Comment