நீதானே என் பொன் வசந்தம் நாயகி சமந்தா நடிகை அஞ்சலியின் ரசிகையாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் எம்.ஏ, அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் அஞ்சலியின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். அஞ்சலி ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. நான் அவரது ரசிகை என்று கிலாகித்துள்ளார் சமந்தா.
அஞ்சலியைத் தவிர நடிகை கஜோல் நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்று கூறும் சமந்தா, கஜோலின் எளிமை ரொம்ப பிடிக்கும். எனக்கு அவரை மாதிரி இருக்கணும்னு ஆசை என்கிறார்.
தன்னுடைய உயிர்தோழி காஜல் அகர்வால் என்று கூறும் சமந்தா, அவரை செல்லமாக காஜ் என்று அழைப்பாராம்.
அழகான சமந்தாவிடம் கொஞ்சம் கருணையும் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் ‘பிரதியுஷா' என்ற அறக்கட்டளை தொடங்கி ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 600 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
Post a Comment