கட்டுமஸ்தான ஆண்களை சட்டையின்றி வர வைத்து இன்டர்வியூ செய்த பாடகி!

|

Courtney Stodden Auditions Shirtless

நியூயார்க்: வாட்டசாட்டமான ஆண்களை வரவழைத்து அவர்களை சட்டையைக் கழற்ற வைத்து நேரடியாக இன்டர்வியூ செய்தார் ஹாலிவுட் நடிகை கர்ட்னி ஸ்டோடன். இந்த நேரடி இன்டர்வியூவில் அவருக்கு உதவியாக கணவர் டோக் ஹட்சின்சனும் கூட உட்கார்ந்திருந்தார் என்பதுதான் விசேஷமானது.

பிரபல அமெரிக்க பாடகி ஸ்டோடன். டிவியிலும் தோன்றி வருகிறார். இவர் ஒரு புதிய இசை ஆல்பத்தை உருவாக்கவுள்ளார். வீடியோ ஆல்பமான இதில் நடிப்பதற்காக சில ஆண்கள் தேவைப்படுகிறார்கள். அந்த ஆண்களை தேர்வு செய்வதற்காக இவர் ஒரு நூதன நேர்முகத் தேர்வை வைத்தார். அதில் கலந்து கொண்ட ஆண்களுக்கு சட்டையைக் கழற்றி பாடி முழுவதும் தடவியும், உற்றும் பார்த்து தேர்வு செய்தார். இந்த பணியின்போது ஸ்டோடனின் கணவர் டோகும் அருகேயே இருந்து மனைவிக்கு கூட மாட உதவி செய்தார்.

சட்டையில்லாமல் வந்த ஆண்களின் கவர்ச்சியான, கட்டுமஸ்தான, வாட்டசாட்டமான உடல் அமைப்பை ரசித்தபடியும், கேலி செய்தபடியும், கமென்ட் அடித்தபடியும், எழுந்து போய் அருகில் நின்று போஸ் கொடுத்தபடியும், தடவிப் பார்த்தபடியும் கலாய்த்தாராம் ஸ்டோடன்.

ஸ்டோடன் நடத்திய இந்த இன்டர்வியூவில் நடிகர்கள், மாடல்கள், நடனக் கலைஞர்கள் என சகல தரப்பினரும் கலந்து கொண்டு பாடியைக் காட்டியுள்ளனர்.

ஸ்டோடனுக்கு 18 வயதுதான் ஆகிறது. அதேசமயம், அவரது கணவருக்கு 52 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்டர்வியூவின்போது ஸ்டோடனின் தாயார் கிறிஸ்டா கெல்லர், வீடியோ ஆல்பத்தின் இயக்குநர் மைக்கேல் செரட்டோ ஆகியோரும் இருந்தனராம்.

ஒவ்வொரு ஆம்பளையாக பார்த்து வந்த ஸ்டோடனுக்கு ஒருவரைப் பிடித்து விட்டதாகவும், அவரையே தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாரை ஸ்டோடன் தேர்வு செய்துள்ளார் என்பதை அவர் இதுவரை சொல்லவே இல்லை.

 

Post a Comment