பெங்களூர்: முத்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் நடிகையை படத்திலிருந்து நீக்கி விட்டார் இயக்குநர். அத்தோடு அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவவே கடுப்பாகிப் போன நடிகை, தற்போது இயக்குநர் மீது வழக்குத் தொடரப் போவதாக மிரட்டியுள்ளார்.
கன்னடத்தில் கில்மாவான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் பிரஜ்னா. தற்போது நல்ல பிரேக்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சந்து என்ற இயக்குநரின் இயக்கத்தில் டோவ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அப்படத்தில் இவர் இல்லை.
மேலும் இயக்குநருக்கும், பிரஜ்னாவுக்கும் மோதல், தற்கொலைக்கு முயன்றார் பிரஜ்னா என்றெல்லாம் செய்திகள் வெளியாகவே கன்னடத் திரையுலகில் லைட்டாக பதட்டம் பற்றிக் கொண்டது. ஆனால் இதை மறுத்துள்ளார் பிரஜ்னா. சந்து கூறியபடி தான் நடிக்க மறுத்ததால் அவரே வதந்திகளைப் பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரஜ்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில் படத்தில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது போல அது இருந்தது. அதை நான் விரும்பவில்லை. நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டேன். இயக்குநரும் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கண்டிப்பாக முத்தமிட வேண்டும் என்றார். அதை நான் ஏற்கவில்லை. இதனால் என்னை நடிக்கக் கூப்பிடாமல் மற்ற காட்சிகளில் பிசியாக இருந்தார் இயக்குநர்.
இதையடுத்து நான் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி கேட்டபோது, கண்டிப்பாக முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார். அதற்கு நான் முடியாது என்றேன். பின்னர் அவரே என்னைக் கூப்பிட்டு நீ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதுதான் நடந்தது. ஆனால் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர்களே வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார் பிரஜ்னா.
ஒரு சாதாரண முத்தத்திற்கு இவ்வளவு சண்டையா...?
Post a Comment