வித்யாபாலனுக்காக தள்ளிப் போடப்பட்ட தனுஷின் இந்திப் படம்!
வித்யாபாலன் நடித்த காஞ்சக்கார் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாக இருப்பதால், தனுஷின் ராஞ்சனா தள்ளிப் போய்விட்டது.
கொலவெறி பாடல் தந்த புகழ் காரணமாக தனுஷுக்கு இந்தியியிலும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் 'ராஞ்சனா'. சோனம் கபூர் கதாநாயகியாக நடிக்க, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் இது.
இத்திரைப்படத்தை ஜூன் 21-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அதே தேதியில் வித்யாபாலன் நடிக்கும் 'கஞ்சக்கார்' படம் அந்த தேதியில் வெளிவர உள்ளது. அந்த நேரத்தில் தனுஷ் நடித்த ரஞ்சனா படத்தை வெளியிட்டால் பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்று கருதிய தயாரிப்பாளர்கள், படத்தை ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.
அநேகமாக ஜூன் 28-ம் ராஞ்சனாவை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
தமிழில் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படத்தையும் இந்தியில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷின் மரியான்... முதல் பார்வை!
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படத்தின் முதல் பார்வை ஸ்டில்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.
சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன், போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா சாவா என்று சவாலை எதிர்நோக்குகிறான். ஆனால் அந்த சவால்களை முறியடித்து தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெறுகிறான். அதற்கு துணையாகவும், இணையாகவும் இருப்பது அவனது காதலும் அதன் இனிய நினைவுகளும்தான்.
மரியான் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூ பார்வதி.
தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் ஆகியோருடன் விநாயகம், ஜெகன், அங்கூர் விகால் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வந்தே மாதரம் 'ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெரும் பெயரும் புகழும் பெற்ற பரத் பாலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் .
கடலோர மீனவ கிராமங்களிலும் கடினமான ஆப்ரிக்க காடுகளிலும், பாலைவனத்திலும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
தனுஷைப் பொறுத்தவரை இது முக்கியமான படம். படத்தின் போஸ்டர்கள் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதே சிரத்தை காட்சியமைப்புகளிலும் தொடர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
பில்லியனர் கிளப்பில் சேர்ந்த முதல் பாப் பாடகி மடோனா
நியூயார்க்: பிரபல பாப் பாடகி மடோனாவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பில்லியனரான முதல் பாப் இசைக் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
54 வயதாகும் பிரபல பாப் பாடகி மடோனா கடந்த ஆண்டு எம்டிஎன்ஏ என்ற உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் நிகழ்ச்சிகளை 2 மில்லியன் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த சுற்றுப்பயணம் அவருக்கு வெற்றிகரமானதாக அமைந்தது.
இது தவிர அவர் வாசனை திரவியங்கள், ஆடைகள் மற்றும் ஹெல்த் ட்ரிங்குகளிலும் முதலீடு செய்துள்ளார். சுற்றுப்பயணம் மற்றும் இந்த முதலீடுகள் மூலம் அவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. இதன் மூலம் பில்லியனரான முதல் பாப் இசைக் கலைஞர் என்ற பெருமையை அடைந்துள்ளார் மடோனா.
ஆடைகள், ஷூக்கள் மற்றும் லாஞ்சரி விற்பனை மூலம் மட்டும் அவருக்கு இந்த ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல! - த்ரிஷா
இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நிறைவான வேடங்கள், நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம் என்கிறார் த்ரிஷா.
தமிழ் சினிமாவில் 2002-ல் அறிமுகமாகி, பத்தாண்டு காலத்தை முன்னணி கதாநாயகியாகவே வெற்றிகரமாகக் கடந்தவர் த்ரிஷா. இன்றைய சூழலில் இது ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரம் போன்ற படங்களில் நடிக்கிறார் த்ரிஷா.
பத்தாண்டுகள் முன்னணி கதாநாயகியாக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. எனக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டியிருந்தது.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சினிமாவில் அதுவும் முன்னணி கதாநாயகி இடத்தில் இருப்பது பெருமை, என் அதிர்ஷ்டம்.
ஒரு காலத்தில், ராத்திரி - பகல் என்று பார்க்காமல் ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்திருக்கிறேன். காரணம், வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாதே என்பதால்.
இன்று என் மனசு விரும்பும் பாத்திரங்களில் நடிக்கிறேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.
அந்த பரபரப்பும் நிம்மதியற்ற சூழலும் இல்லாத நிலையில், முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அனுபவித்து நடிக்கிறேன்.
இனி எண்ணிக்கை முக்கியமில்லை. இருக்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டு, நல்ல படங்களில் நடிக்க வேண்டும்," என்றார்.
ஃபாஸில் மகன் காதலை ஏற்க மறுக்கும் ஆன்ட்ரியா
இயக்குநர் ஃபாஸில் மகனும், நடிகருமான பஹத் தெரிவித்த காதலை ஏற்க மறுத்துள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக மலையாள நடிகர் சமீபத்தில் பஹத் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். இருவரும் அன்னையும் ரசூலும் என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது ஆண்ட்ரியா மேல் பஹத்துக்கு காதல் ஏற்பட்டது. இவர் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நானும் ஆன்ட்ரியாவும் டேட்டிங் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக பழகி வருகிறோம். அவரை நான் தீவிரமாக காதலிக்கிறேன். அன்னயும் ரசூலும் படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்," என்றார்.
இதற்கு ஆண்ட்ரியா இதுவரை பதில் சொல்லாமல் இருந்தார். இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் யாரையும் காதலிக்கவில்லை. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.
பகத் என்னை விரும்புவதாக கூறியுள்ளார். அது அவர் ஆசையாக இருக்கலாம். ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. நான் அவரை காதலிக்க வில்லை. உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் எனக்கு இல்லை. சினிமாவில் இன்னும் வெரைட்டியாக நடிக்க வேண்டும்," என்றார்.
'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு!
ஹம்மர் கார் விவகாரம் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் மட்டுமல்ல நம்ம பவர் ஸ்டார் வீட்டிலும் சிக்கலை ஏற்படுத்தியதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 33 ஹம்மர் கார் பற்றி சிபிஐக்கு கிடைத்த புகாரை அடுத்து கடந்த வாரம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட விஐபிக்கள் வீடுகளில் திடீர் ரெய்டு நடைபெற்றது.
யார் யாரிடம் கார் இருக்கிறது? எங்கெங்கு ரெய்டு நடைபெற்றது என்ற முழு பட்டியலை சி.பி.ஐ வெளியிடவில்லை. ஆனால் சிபிஐ நடத்திய ரெய்டில் பவர்ஸ்டார் சீனிவாசனும் அடக்கமாம். இது யாருக்கும் தெரியாத செய்தி.
இதை அதிகாரப்பூர்வமாக பவர்ஸ்டார் தெரிவிக்காவிட்டாலும், சிம்பு தனது டுவிட்டரில் கண்ணா டேக்ஸ் கட்ட ஆசையா? என்று கலாய்த்திருந்தார். அப்போது நிறைய பேருக்கு புரியவில்லை. இப்போதுதான் அர்த்தம் புரிந்து சிரிக்கின்றனர்.
எத்தனை லட்சம் வரி கட்டுனீங்க பவர்?
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு ரஜினி படம்னு வருது!
ஏஜிஎஸ் நிறுவனம் 6 படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பது குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.
அதில் 5 படங்களின் பெயர்களை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம், 6 வது படம் என்னவென்று பிறகு சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த 6வது படம் மிகப் பிரமாண்டமாக தயாராகப் போகிறது என்றும் அறிவித்திருந்தனர்.
ரொம்ப நாட்களாகவே, ரஜினி நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்தி வருவதும், அதை மழுப்பலாக மறுப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஏஜிஎஸ் தயாரிக்கும் படங்களில் ஒன்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். அதில் கவுதம் கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ஐஸ்வர்யாவுக்குக் கொடுத்ததே, ரஜினி படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைப் பெறத்தான் என்கிறார்கள்.
அதற்கேற்ப, ஐஸ்வர்யா இயக்கும் படத்தை அறிவித்த கையோடு, அடுத்து ஒரு மெகா படம் தயாரிப்போம் என ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.
அந்தப் படத்தின் ஹீரோ ரஜினிதான் என்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது!
ஓபனிங்கில் ஹிட்டடித்த அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'!
ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் ‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.
மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் அமீர்கான். ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பாடலுக்காக தனது 5 மாத கைக்குழந்தையை அமீர் கான் நடிக்க வைத்திருந்தார். இதற்கு அவரது மனைவி கிரண்ராவ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காட்சியை நீக்கிய பின்பே ஒளிபரப்பினாராம் அமீர் கான். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவே தனது 5 மாத குழந்தையை நடிக்க வைத்தாக அமீர் கானின் நெருங்கி நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் இதேபோல் விறுவிறுப்பான விவாதங்கள் முன் வைக்கப்படுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம்: அஜீத்தின் புதுப் பட துவக்க விழா தள்ளிவைப்பு!
அஜீத் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய பட தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அஜீத்தை வைத்து பிரமாண்டமாக புதிய படத்தைத் தயாரிக்கிறது பாரம்பரியம் மிக்க விஜயா புரொடக்ஷன் நிறுவனம்.
இந்தப் படத்தை சிறுத்தை படம் இயக்கிய சிவா இயக்குகிறார். இப் படத்தின் துவக்க விழா ஏப்ரல் முதல் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் அஜீத் குமார் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் படத்தின் துவக்க விழாவை தள்ளிவைத்துள்ளனர்.
படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பதில், 5-ம் தேதி படத்தின் தொடக்க விழாவும், தொடர்ந்து படப்பிடிப்பும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் முடிந்ததும் காலில் அறுவைச் சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருப்பதால் சில மாதங்களுக்கு புதிய படத்தில் நடிக்க மாட்டார் அஜீத்.
தியேட்டர்களுக்கு வரும் முன்பே திருட்டு விசிடியாக வந்த 'கீரிப்புள்ள'!
கீரிப்புள்ள என்ற படம் இந்த வாரம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வரும் முன்பே நேற்று அதன் திருட்டு விசிடிகள் வெளியாகி திரையுலகை அதிர வைத்துள்ளது.
நடிகர் யுவன் - திஷா பாண்டே நடித்து நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் கீரிப்புள்ள. இந்தப் படத்தை திரைக்கு கொண்டுவரும் முன்னரே அதன் திருட்டு விசிடி மற்றும் டிவிடிகள் வெளியாகிவிட்டன. படத்தை சில இணையதளங்களும் வெளியிட்டுள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைமில் புகார் கொடுத்தார்.
உடனடியாக படம் வெளியாகியிருந்த 16 இனையதளங்களிலும் தடை செய்து விட்டனர். ஆனால் திருட்டு விசிடி மட்டும் தாராளமாகக் கிடைக்கிறது.
வேறு வழியில்லாமல் பெரோஸ்கான், யுவன் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து எல்லா ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு டிவிடிகளை கைப்பற்றி அழித்தனர்.
இது பற்றி பெரோஸ்கான் கூறுகையில், "கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே... சட்டத்தாலும் போலீசாலும் கூட தடுக்க முடியாத கொடுமையாக மாறி வருகிறது இந்த திருட்டு விசிடி பிரச்சினை," என்றார்.
விரைவில் சமந்தாவுடன் திருமணம்! - ஒருவழியாக ஒப்புக் கொண்ட சித்தார்த்
சென்னை: விரைவில் சமந்தாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகர் சித்தார்த் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும், சமந்தா பேசி சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விட்டார்.
அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவிட, ரகசியம் அம்பலமாகிவிட்டது. முதலில் இந்த செய்தியை மறுத்த சித்தார்த் இப்போது, ஆமாம், அதற்கென்ன இப்போது... அது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி வருகிறார்.
லேட்டஸ்ட் தகவல்படி சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார் சித்தார்த். சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டார்.
திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சொல்லி வருகிறார் சித்தார்த்.
கோச்சடையான் டப்பிங் - அரைநாளில் பாதிப் படத்துக்கு பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!
சென்னை: கோச்சடையான் படத்துக்கான டப்பிங்கில், சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய வேகம் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்றிருக்கும் ரஜினி, தன் பகுதிக்கான வசன டப்பிங்கில் பாதியை அரை நாளிலேயே முடித்துக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஷோபனா, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதல் முறையாக 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வரும் இந்தப் படத்தின் இசை வெளியீடு மே முதல் வாரம் ஜப்பானில் நடக்கவிருக்கிறது.
அப்பர் வேடத்தில் நடிப்பதா... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்!
சிவாஜி நடித்த அப்பர் வேடத்தில் நடிக்க விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கில்லாடி என்ற படத்தில் அப்பர் வேடத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றுகிறாராம் விவேக். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவையொட்டி, விவேக் அப்பராகத் தோன்றும் போஸ்டர்களை சென்னையில் ஒட்டியிருந்தனர்.
இது சிவாஜியை அவமதிக்கும் செயல் என சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் பூமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூமிநாதன் வெளியிட்ட அறிக்கையில், "விவேக்கின் அப்பர் வேட போஸ்டர்கள் சிவாஜியை அவமதிப்பது போல் உள்ளது.
இது குறித்து விவேக்கிடம் நேரில் பேசி உள்ளேன். இந்துக்களை இழிவுபடுத்துவது போன்றும் அவர் செயல் உள்ளது. சிவாஜி ரசிகர்கள் இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்றார்.
சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரனும் விவேக்குக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேசிடம் கேட்டபோது, "விவேக் சாமியார் வேடத்தில்தான் நடித்துள்ளார். அது சிவாஜி நடித்த "அப்பர்" வேடம் அல்ல. இதனை நடிகர் பிரபுவுக்கு தெரிவித்து விட்டோம்.
நான், விவேக், தயாரிப்பாளர் சந்திரசேகரன் அனைவரும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள்தான். விவேக்கின் கெட்டப் போஸ்டர் படங்கள் போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்டவை. விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம்," என்றார்.
அதான் கிடைச்சிடுச்சே!
என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்! - இளையராஜா
சென்னை: வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா.
ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை.
ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை.
அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான்.
இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.
"விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?
என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.
காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?
எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.
ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.
நெத்தியடி பதில்!
நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருப்பது உண்மைதான்! - மனம் திறக்கும் ஆர்யா
சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான்.
நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது.
இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள்.
இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.
எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது," என்றார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் மேனேஜர் மற்றும் பிஆர்ஓவாக ஜான்!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஜாக் கூட்டம் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், பம்பரக் கண்ணாலே, பூ, கனா கண்டேன், உயிர், நண்பன், பாகன் என குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் நடித்தவர், ஸ்ரீகாந்த்.
இப்போது ஓம் சாந்தி ஓம் மற்றும் நம்பியார் ஆகிய இரு பெரிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
அவரது மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகள் மற்றும் அனைத்து தொடர்புகளுக்கும் செய்தியாளர்கள் மற்றும் திரையுலகினர் இனி ஜான் பிஆர்ஓவை அணுகுமாறு இன்று அதிகாரப்பூர்வமாக நடிகர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
தண்ணீரில்லாத ஹோலி கொண்டாடுங்கள்: அமிதாப் வேண்டுகோள்
மும்பை: வறட்சி காரணமாக தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள் என மஹாராஷ்டிரா மக்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படவுள்ளது..
இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், ஹோலி கொண்டாடும்படி இந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்று அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தண்ணீர் சிக்கனத்தைப்பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மாணவர்களும் வீதி நாடகங்கள் மூலமும் வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதன் மூலமும் மக்களுக்குத் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர அரசும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தண்ணீரைச் செலவழிக்க வேண்டாமென்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாக்பூரில், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ஆசிரமம் பாபு இடத்தில் ஹோலியின்போது 50,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவு செய்யப்படுவது விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டத்தை அரசு தடை விதித்துள்ளது.
மீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி!
எண்பதுகளில் திரைப்படத் தயாரிப்பில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்தவர் கோவைத் தம்பி. இவரது மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உதயகீதம், இதயக் கோயில், உயிரே உனக்காக போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.
ஆனால் மங்கை ஒரு கங்கை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் போன்ற படங்கள் ஏமாற்றியதால், தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். வேந்தர் மூவீசுடன் இணைந்து உயிருக்கு உயிராக என்ற படத்தை தயாரிக்கிறார் கோவைத் தம்பி.
இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய மனோஜ்குமார் இயக்குகிறார்.
இயக்குநர் விஜய மனோஜ்குமார்?
இவர் வேறு யாருமல்ல... மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை," என்றார்.
இந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு ஏ ஜான்.
பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுகுமாரியின் நெருங்கிய நட்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்துப் பேசினார். அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ், மலையாளத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாசமலர், பட்டிகாடா பட்டணமா, வசந்த மாளிகை உள்ளிட்ட திரப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், ,இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 74 வயதான சுகுமாரி 1938ம் வருடம் நாகர்கோவிலில் பிறந்தவர் ஆவார். நம்மகிராமம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.
தேனியில் சினிமா கேரவன் வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி
தேனி: தேனி அருகே திரைப்படக்குழுவின் வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
தேனியில் இருந்து சினிமா படப்பிடிப்பிற்காக கம்பம் நோக்கிச் சென்ற கேரவன் வாகனம் மீது, எதிர்திசையில் வேகமாக வந்த கார் மோதியது. இதில்,கேரவன் வேனின் அடியில் கார் சிக்கிக்கொண்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி காரை மீட்டனர். இதில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இரண்டுபேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக கம்பம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தா - விமர்சனம்
நடிப்பு: கரண், மித்ரா குரியன், ராஜேஷ், விவேக், சத்யன்
இசை: சத்யசெல்வா
தயாரிப்பு: வி பழனிவேல்
இயக்கம்: பாபு கே விஸ்வநாத்
விவசாயம், எளிய வாழ்க்கை என்று இருந்த தஞ்சை மண்ணை, ரவுடியிசமும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ராஜ்யமும் ரத்தக் களறியாக்குகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பவன் ஒரு நல்லாசிரியருக்கு மகனாகப் பிறந்தவன். ஆனால் அதே நல்லாசிரியரால் வளர்க்கப்பட்ட ஹீரோ கரண் எப்படி காந்திய வழியில் அந்த வில்லனை திருத்த முயல்கிறார் என்பது கந்தா படத்தின் சுருக்கமான கதை.
கரண் இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டும் ஆவேசம் காட்டுவது ஆறுதல்.
அவருக்கு ஜோடியாக மித்ரா குரியன். இவருக்கும் கரணுக்கும் காதல் மலரும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். சில காட்சிகளில் பயமுறுத்துகிறது மித்ராவின் மேக்கப்.
விவேக் வரும் காட்சிகள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் கூத்துக்களை அம்பலமாக்கினாலும், அவற்றில் நகைச்சுவை ரொம்பவே கம்மி என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ரியாஸ்கான், காதல் தண்டபாணி, சத்யன், ஆர்த்தி ஆகியோர் கேரக்டர்களை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்.
விவேக்கால் தர முடியாத காமெடியை இயக்குநர் க்ளைமாக்ஸில் தந்துவிடுகிறார்.
தஞ்சை கிராம நிலங்கள் எந்த நிலையில் உள்ளன, விவசாயம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை சில காட்சிகள் உறைக்கிற மாதிரி சொல்கின்றன.
ரொம்ப நாளாக தயாரிப்பிலிருந்த படம். எழுத்தாளராக இருந்து இயக்குநராகியிருக்கும் பாபு கே விஸ்வநாத்துக்கு இது முதல் படம். காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி தெரிகிறது. ஆனால் அங்கங்கே துண்டாக நிற்கின்றன. முணுக்கென்றால் வரும் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல க்ளைமாக்ஸை இவ்வளவு நாடகத்தனம் இல்லாமல், புத்திசாலித்தனமாக அமைத்திருக்கலாம்.
-எஸ்எஸ்
பிரியங்கா சோப்ராவிடம் வாய்ப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
மும்பை: எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் , பிரியங்கா சோப்ராவை புகழ்ந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில், இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது. விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் சிறந்து விளங்குவதற்காக பிரியங்கா சோப்ராவிற்கும் விருது தரப்பட்டது.
பின்னர், பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்‘ என்றார்.
பிரியங்கா சோப்ரா நல்ல பாடகியும் கூட என்பது பலருக்குத் தெரியாது. ஒரு ஷோலோ ஆல்பத்தை அவரே பாடி வெளியிட்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்டை இயக்குகிறார் 'ஸ்லம்டாக் மில்லியனேர்' டேனி பாய்ல்?
அடுத்து வரும் ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தை, ஸ்லம்டாக் மில்லியனேர் தந்த டேனி பாய்ல் இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பாண்ட் படம் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு இறுதியில் டேனியல் கிரெய்க் நடித்த ஸ்கைபால் வெளியானது. இந்தப் படத்தை சாம் மென்டிஸ் இயக்கியிருந்தார்.
அடுத்த பாண்ட் படத்தையும் இவர்தான் இயக்குவார் என எதிர்ப்பார்த்த நிலையில், அவர் அதிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
எனவே, ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை இயக்கிய டேனி பாய்லுக்கு இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைத் தர முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோகலி. இந்த புதிய பாண்ட் படத்திலும் டேனியல் கிரெய்க்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடந்த எம்பையர் சினிமா விருது விழாவின்போது டேனி பாய்லுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார் ப்ரோகலி.
நிச்சயம் இந்தப் படத்தை டேனி பாய்ல்தான் இயக்குவார் என்று பாண்ட் பட தயாரிப்பாளர்களில் மூத்தவரான மைக்கேல் ஜி வில்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படின்னா இசை நம்ம ஏஆர் ரஹ்மான்தானே!
வயசானாலும் 'வெங்கி'க்கு மட்டும் ஓகே சொன்ன அஞ்சலி!
வயசான நடிகர்களுடன் நடிப்பதில்லை என்பது அஞ்சலியின் கொள்கைகளில் ஒன்று.
ஆனால் ஒருவருக்காக அதைத் தளர்த்திக் கொண்டாராம். அவர் வெங்கடேஷ்.
போல்பச்சன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய் பாஸ்கர் இயக்குகிறார்.
இதுகுறித்து அஞ்சலியின் அம்மா கம் 'மேனேஜர்' கூறுகையில், "போல்பச்சன் ரீமேக்கில் அஞ்சலி நடிப்பது உண்மைதான். படப்பிடிப்பு தொடங்கி, அதில் சில தினங்கள் அஞ்சலி நடித்தார். வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்," என்றார்.
ஏற்கெனவே சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தவர் அஞ்சலி. அந்த பழக்கம் காரணமாக, வெங்கடேஷுடன் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.
போல்பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அஜய் தேவ்கன் வேடத்தை வெங்கடேஷும், அபிஷேக் பச்சன் வேடத்தை ராமும் செய்கிறார்கள்.
காந்தி கொலைச் சதி திரைப்படமாகிறது!
மும்பை: காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் நடந்த சதித் திட்டத்தை The Men Who Killed Gandhi என்ற பெயரில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
நாடு சுதந்திரமடைந்த சில மாதங்களில் 1948ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகள் கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சே என்பவன் காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
ஆனால் இந்தக் கொலை ஒரு தனிமனித முயற்சி அல்ல. இதன் பின்னணியில் பெரிய இயக்கமே திட்டமிட்டு சதி வேலை செய்து வந்தது.
இந்த சதிகள் குறித்து விரிவாக The Men Who Killed Gandhi என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் மனோகர் மல்கோங்கர்.
இவர் பிர்லா ஹவுசில் காந்தி வசித்த வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் குடியிருந்தவர். எனவே அவருக்கு முழு விவரங்களும் தெரியும். அத்துடன் காந்தியை சுட்ட கோட்சேவின் உறவினர்களை நேரில் சந்தித்து பேசி அவர்கள் சொன்ன தகவல்களையும் இப்புத்தகத்தில் சேர்த்து உள்ளார்.
இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதே பெயரில் இப்படம் தயாராகிறது. சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார்.
காந்தி கொலை, இந்திய விடுதலை மற்றும் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. எனவே காந்தியின் சுதந்திர போராட்டங்கள், அவரை கொல்ல வகுக்கப்பட்ட திட்டங்கள் கோட்சேயின் பின்னணி விவரங்கள், காந்தியை அவன் வேவு பார்த்தது மற்றும் சுட்டுக் கொன்றது போன்ற அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன.
நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. 2014-ம் ஆண்டு காந்தியின் 66வது நினைவு நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்.
மலேசிய அமைச்சருடன் பாக்யராஜ் சந்திப்பு!
படப்பிடிப்புக்காக மலேசியா சென்றபோது, மலேசிய துணை அமைச்சர் எம் சரவணனைச் சந்தித்தார் இயக்குநர் கே பாக்யராஜ்.
'3 ஜீனியஸ்' என்ற படத்தில் நடிக்கிறார் இயக்குநர் கே பாக்யராஜ். இந்தப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது.
இந்த சந்திப்பின் போது பூர்ணிமா பாக்யராஜும் உடனிருந்தார். தமிழ் சினிமா மற்றும் மலேசிய கலைஞர்களின் தமிழ்சினிமா ஆர்வம் ஆகியவை உட்பட பல பொதுவான விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆஸ்கர் இயக்குனர் அட்டன்பரோவுக்கு மறதி நோய்
லண்டன்: ஆஸ்கர் விருது பெற்ற, "காந்தி' திரைப்பட இயக்குனர், ரிச்சர்டு அட்டன்பரோ, மறதி நோய் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
'ஆஸ்கார்' காந்தி...
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, 1982ல், அட்டன்பரோ இயக்கிய, "காந்தி' திரைப்படம்.
எட்டு ஆஸ்கார்...
சிறந்த இயக்குனருக்காக ரிச்சர்டு அட்டன்பரோவுக்கும் மேலும் எட்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளி குவித்தது ‘காந்தி'
நடிப்பிலும் மிளிர்ந்தார்...
அட்டன்பரோ "த க்ரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
கீழே வீழ்ந்தார்...
கடந்த, 2008ல், தவறி விழுந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அவர் மனைவி ஷீலா சிம்முக்கு, முதுமை காரணமாக மறதி நோய் ஏற்பட்டதால், பிரிட்டனில் உள்ள சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டார்.
எல்லாம் மறக்குது...
தற்போது, 89 வயதாகும் அட்டன்பரோவுக்கும், மறதி நோய் ஏற்பட்டுள்ளதால், அவரும், அதே சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
திருமணத்துக்கு சித்தார்த் தயார்.. மணமகள் சமந்தாவா?
திருமணத்துக்குத் தயாராகிறேன். குடும்பம் குழந்தைகள் என வாழ் ஆசையாக உள்ளது, என்கிறார் சித்தார்த்.
ஆனால் மணமகள் சமந்தாவா என்ற கேள்விக்கு மட்டும், அது என் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.
பாய்ஸில் அறிமுகமான சித்தார்த், ஒரு எம்பிஏ பட்டதாரி. ஷங்கரிடம் பணியாற்றியவர். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
ஏற்கெனவே திருமணமாகி, மனைவியைப் பிரிந்தவர் சித்தார்த்.
இவருடன் பல நடிகைகள் இணைத்துப்பேசப்பட்டனர். குறிப்பாக ஸ்ருதி ஹாஸனும் இவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்வதாகக் கூறப்பட்டது.
இப்போது சமந்தாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் இருவரும் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். ஜோடியாக அமர்ந்து ராகு, கேது பரிகார பூஜையும் செய்தார்கள். அப்போதுதான் இவர்கள் காதல் விஷயம் அம்பலமானது.
இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதுகுறித்து சித்தார்த் கூறுகையில், "நான் திருமணத்துக்கு தயாராகிறேன். குழந்தை குடும்பம் என்று இருக்க ஆசை வந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய பெண்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை பொருட்படுத்தவில்லை. என் சொந்த வாழ்க்கையில் தலையிடும் உரிமை பத்திரிகைகளுக்கும் இல்லை... ரசிகருக்கும் இல்லை," என்றார்.
சல்மான் கான் கார் மோதல் வழக்கு: ஏப்.8-க்கு விசாரணை ஒத்திவைப்பு
மும்பை: கார் மோதி உயிரிழந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று ஆஜராகாத காரணத்தால் வழக்கு விசாரணை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு மும்பை நகரின் பந்தாரா பகுதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் உயிரிழந்தார். நான்குபேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை 2005-ம் ஆண்டு தொடங்கியது.
வேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக போலீசார் ஆதாரம் அளித்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கான் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை கோர்ட், இதுதொடர்பாக மார்ச் 11-ம் தேதி சல்மான் கான் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரிக்கும் அமர்வு நீதிபதி யார் என்பது உறுதி செய்யப்படாததால் அன்று சல்மான கான் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.
இவ்வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் என அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. விசாரணையின் போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் கோர்ட்டு வாசலில் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், சல்மான் கான் வரவில்லை. அவரது வக்கீல் நீதிபதியின் முன்னர் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இதனையொட்டி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். சல்மான் கான் மீதான புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் எப்.எம்ல் உதயம் என் ஹெச் 4 இசை வெளியீடு
ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருவிழாவாக கொண்டாடுபவர்கள் இருக்கின்றனர். வெளிநாடு போய் கேசட் வெளியிடுவார்கள். ஹெலிகாப்டரில் பறந்து பறந்தும் இசை வெளியீடு நடத்துவார்கள். இது அவரவர் வசதியைப் பொறுத்த விசயம்.
சன் குழுமத்தின் சூரியன் எப்.எம் ரேடியோவில் உதயம் என்.ஹெச் 4 படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகின்றன.
உதயம் என்.ஹெச்4 படத்தில் சித்தார்த் - அஷ்ரிடா நடித்துள்ளனர். மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்திற்கு டப்பிங் பணிகள் தற்போது பெங்களூரில் நடைபெறுகிறது. உதயம் என்ஹெச்4 படம் ஏப்ரல் 14ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உதயநிதியுடன் நயன்தாரா.. பார்க்கக் கூடியது பெருங்கூட்டம்!
இது கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்காக கோவை வந்த நயன்தாராவைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் கதிரவனின் காதலி. சுந்தர பாண்டியன் படம் தந்த எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
பீளமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் படத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. திங்கள் கிழமை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது.
பூங்காவில் நயன்தாரா கோபமாக அமர்ந்திருப்பது போலவும், அவரை உதயநிதி ஸ்டாலின் சமாதானம் செய்து பேசுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.
நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் அந்த பகுதியில் குவிந்துவிட்டனர்.
இவர்களின் ஆர்வத்தால், நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போதும் லிப் டு லிப்பு... உதடு புண்ணா போச்சு! - ஓட்டம் பிடித்த நடிகை
விரைவில் வரவிருக்கும் அந்தப் பெரிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் ஹீரோவின் சேட்டை ரொம்பத்தான் அதிகம் போலிருக்கிறது.
ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் நடிக்கும் இந்தப் படத்தில் இரு நாயகிகள். ஒருவர் கொழுக் மொழுக் பார்ட்டி. இன்னொருவர் கலகலப்பான அங்காடி நடிகை.
படத்தின் காட்சிப்படி (கதைப்படி-ன்னு சொல்ல முடியாது.. இருந்தால்தானே சொல்வதற்கு!) இரு நாயகிகளுக்குமே லிப் டு லிப் அடிக்கும் வாய்ப்பு பாஸுக்கு.
ஏக குஷியுடன் கொழுக் மொழுக்கின் உதடுகளை மேய்ந்துவிட்டாராம். அவரும் ஆறேழு டேக்குகள் வாங்கியும் பெரிதாக முணுமுணுக்காமல் ஒத்துழைத்தாராம்.
இப்போது கலகல நடிகையின் உதடுகளைப் பதம் பார்க்கும் வாய்ப்பு. நடிகை ரொம்ப பிகு பண்ணி பின் ஒப்புக் கொண்டாராம். இதை மனதில் வைத்துக் கொண்ட நடிகர், லிப் டு லிப் காட்சி வந்ததும், கிட்டத்தட்ட 15 டேக்குகள் வரை இழுத்தாராம். நடிகைக்கு உதடு புண்ணாகும் நிலை. இதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டாராம். பின்னர்தான் ஒருவழியாக அவரை ரிலீஸ் செய்தாராம் நடிகர்.
அடுத்த இரு தினங்களுக்கு நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
கமலை போன்று 'முத்த' நாயகனாக விரும்பும் ஆர்யா?
சென்னை: கமல் ஹாசனைப் போன்று முத்த ஸ்பெஷலிஸ்டாக விரும்புகிறாராம் ஆர்யா.
கோலிவுட் நடிகர்களில் முத்த காட்சிகளுக்கு பெயர் போனவர் உலக நாயகன் கமல் ஹாசன் தான். கமல் படம் என்றால் முத்தம் இல்லாமலா என்று கூறும் அளவுக்கு 'இச்' கொடுப்பதில் அவர் ஸ்பெஷலிஸ்ட். இந்நிலையில் கமல் வழியில் ஆர்யாவும் முத்த நாயகனாக விருப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
அவரது விருப்பத்தை அறிந்து தான் சேட்டை படத்தில் ஹன்சிகாவுடன் ஒரு முத்தக் காட்சி வைத்துள்ளார்களாம். இந்த காட்சி பற்றி ஆர்யா முதலில் ஓவராக பில்ட்அப் கொடுத்துள்ளார். இதனால் அந்த காட்சி ஆபாசமாக இருக்கும் என்று செய்தி பரவியது. இது குறித்து அறிந்த ஆர்யா தற்போது முத்தக் காட்சி பற்றி தன்னிடம் கேட்பவர்களிடம் தானும், ஹன்சிகாவும் நடித்த முத்தக் காட்சி ஆபாசமாக இருக்காது. அது காதல் முத்தம் என்று கூறி வருகிறாராம்.
'3டி' யில் படமாகும் ஜல்லிக்கட்டு விளையாட்டு
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சினிமா படமாகிறது. இப்படத்தை 3டி முறையில் வெங்கடேசன் இயக்குகிறார்.
இவர் காந்தியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ‘மன்னிப்பு' என்ற பெயரில் குறும்படமாக எடுத்தவர். ஜெமினி கணேசனை பற்றி காதல் மன்னன் என்ற பெயரிலும், ஆவண படம் எடுத்துள்ளார்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டை இணையதளத்துக்காக படம் பிடித்துள்ளார். ஜல்லிக்கட்டை சினிமா படமாக எடுப்பது பற்றி வெங்கடேசன் எம். கூறும்போது,
'திட்டமிடப்பட்ட பாதுகாப்பு முறைகளுக்கு உட்பட்ட ஜல்லிக்கட்டில் ஆபத்துக்கு வாய்ப்பு இல்லை. அசம்பாவிதமாக நடப்பது விதிவிலக்கு. கிரிக்கெட் , ஓட்டப் பந்தயங்களில் கூட அடிபடுகிறது. ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்க்கை, மாடு வளர்க்கும் முறை, விளையாட்டு நடக்கும் ஊர்கள், மக்கள் மனநிலை போன்ற யதார்த்தங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போல் சுவாரஸ்யமாக இப்படத்தின் திரைக்கதை இருக்கும்.
ஜல்லிக்கட்டு பற்றிய பல உண்மைகளை இப்படம் உலகுக்கு காட்டும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறது' என அவர் கூறினார்.
இந்தோ-சீனா எல்லையில் சீன ராணுவத்திடம் சிக்கிய விதார்த்
சென்னை: படப்பிடிப்பின்போது இந்தோ-சீனா எல்லையோர கிராமத்தில் சுற்றிய விதார்த்தை, சந்தேகத்தின் அடிப்படையில் சீன ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டதாம்.
சுசி கணேசனின் உதவியாளர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வரும் படம் "ஆள்". இதில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திகா ஷெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது விதார்த் சீன ராணுவத்திடம் பிடிபட்டுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தின் எல்லையோர பகுதியில் படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பியிருக்கும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது, 'சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை செய்யும் விதார்த், சென்னைக்கு தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். அவரை இங்கு ஒரு கும்பல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்ய சொல்கின்றனர். அதி பயங்கரமான அந்த காரியத்தை அவர் செய்கிறாரா? அவரை ஏன் அந்த கும்பல் செய்ய வைக்கிறது என்பதற்கு சிக்கிமில் நடந்த ஒரு சம்பவம் காரணம்.
சென்னையில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சிக்கிம் போர்ஷனை எடுப்பதற்காக கடந்த வாரம் சிக்கிம் சென்றோம். அங்கு பத்து நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்தோ-சீனா எல்லையோர கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். மைனஸ் 7 டிகிரி குளிரில் அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தினோம். கதைப்படி அந்த கிராமத்திலிருந்து தினமும் பைக்கில் விதார்த் கல்லூரிக்கு போவது போன்ற காட்சிகளை படமாக்கினோம். ஒரு நாள் காலை விதார்த் ஜாலியாக பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க கிளம்பிப் போனார். காலை 6 மணிக்குச் சென்றவர் 11 மணிக்கு படப்பிடிப்பு துவங்கும் வரை திரும்பி வரவில்லை. அதனால் அவரை நாலா புறமும் கிராமத்து ஆட்கள் துணையுடன் தேடினோம்.
கடைசியல் அவரை சீன ராணும் பிடித்து வைத்திருப்பதாக உள்ளூர் போலீசில் இருந்து தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றோம். அங்கு சீன ராணுவத்தின் செக் போஸ்ட்டில் விதார்த்தை உட்கார வைத்திருந்தார்கள். விதார்த்தின் ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லை. அவர்களது சீன மொழி விதார்த்துக்கு புரியவில்லை. பிறகு உள்ளூர் மக்கள் விபரத்தை சொன்னார்கள். அதன் பிறகு அந்த பகுதியில் இருந்த இந்திய ராணுவ அலுவலகத்தில் விபரம் சொல்லி அங்கிருந்த அதிகாரியிடம் இருந்து உத்தரவாத கடிதம் வாங்கிக் கொடுத்து அவரை மீட்டு வந்தோம். மோட்டார் சைக்கிளில் சென்றவர் பாதை தெரியாமல் சீனாவின் எல்லைக்குள் சென்று விட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அன்று விதார்த் ரொம்பவே அப்செட். அதனால் அன்று ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மறுநாள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம்' என்றார்.
தீ விபத்தில் காயமடைந்த பழம்பெரு நடிகை சுகுமாரியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: தீ விபத்தால் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பழம்பெரும் நடிகை சுகுமாரியின், 74, உடல் நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பழம்பெரும் திரைப்பட நடிகை சுகுமாரி. முதல்வர் ஜெயலலிதாவுடன், பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள்.
சில நாட்களுக்கு முன், சுகுமாரி, தன், தி.நகர்., வீட்டில், விளக்கு ஏற்றும்போது, புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, குளோபல் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சுகுமாரியை நேரில் பார்க்க, முதல்வர் ஜெயலலிதா, நேற்று மதியம், 1:40 மணிக்கு, பெரும்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுகுமாரி மற்றும் அவர் உறவினர்களிடம், நலம் விசாரித்தார்.
வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்!
கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும்.
தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ்.
இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை.
இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது:
கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்
வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.
சந்துரு இயக்கத்தில் முழுநீள காமெடி படமாக உருவாகிறது சரஸ்வதி சபதம். ஜெய், விடிவி கணேஷ், மனோபாலா நடிக்கின்றனர்.
அடுத்து ஜெயம் ராஜா - ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறோம்.
அதர்வா முரளி நடிக்கும் ஒரு விறுவிறுப்பான படமும் தயாராகிறது. புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார்.
ஆறாவதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படம் செய்கிறோம். இதில் ஹீரோ கார்த்திக் கவுதம்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பெரிய பட்ஜெட் படமும் தயாராகிறது. அதன் விவரம் இப்போது சொல்வதற்கில்லை," என்று தெரிவித்துள்ளார்.
செந்திலுக்கு வயசு 60... திருக்கடையூரில் கொண்டாடினார்!
நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 - வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் செந்தில். பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமானார் செந்தில். அவரை பெரிய நடிகராக்கியது தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம்.
கவுண்டர் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய ஓய்வு ஏற்பட்டது. ஆனாலும் அவரது காமெடி தொலைக்காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளது. அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று செந்தில் தன் 60 வது ஆண்டு பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். திருக்கடையூரில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் செந்திலும் அவர் மனைவி கலைச்செல்வியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2வில் கமல்ஹாசன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பிரகாஷ்ராஜ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2. இந்த நிகழ்ச்சி இம்மாதம் 11ம் தேதி தொடங்கியது. நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களை கவரும் வகையில் தொகுத்து வழங்கிவருகிறார்.
பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அதற்காக மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கமல்.
நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியபோது கமல் மகள் ஸ்ருதி பங்கேற்றார். நடிகர் கமல் போன் மூலம் மகளுக்கு உதவி செய்தார். சீசன் 2ல் கமலுக்கு அவரது மகள் போன் மூலம் உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த எபிசோட் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.
சினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா!
சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைத்துள்ளோம் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
சினேகா, பிரசன்னா திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ஹரிதாஸ் படம் அவருக்கு இன்னொரு திருப்பத்தைத் தந்துள்ளது.
இப்போது தமிழில் இரு படங்களும், தெலுங்கில் இரு படங்களும் கைவசம் உள்ளன.
இந்த நிலையில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக சிலர் ஆர்வக்கோளாறில் அடித்துவிட்டனர். இதைப் படித்த திரையுலகினர் சினேகா - பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் சினேகா கர்ப்பமாக இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் பிரசன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சினேகா கர்ப்பமாக இருப்பதாக தவறான தகவல் பரவி உள்ளது. இதனால் நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர் கர்ப்பமாக இல்லை. குழந்தை பெறும் ஆசையை கொஞ்ச நாள் தள்ளிப் போட்டுள்ளோம்," என்றார்.
சினேகாவின் அம்மா மற்றும் அக்காவும் சினேகா கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்து பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் சினேகா.
யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று புதிய படம் தொடங்கினார் ஐஸ்வர்யா!
3 படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்திக்கை வைத்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அடுத்த படம் தொடங்குகிறார் என்று கூறியிருந்தோம் அல்லவா... இதோ இன்று தொடங்கிவிட்டார்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை எந்தவித ஆசம்பரமும் இல்லாமல், மகா சிம்பிளாக இன்று தொடங்கினார் ஐஸ்வர்யா.
கவுதம் கார்த்தி நடித்த முதல் படமான கடல் படுதோல்வியைத் தழுவியதும், அந்த நஷ்டப் பணத்தை திரும்பப் பெற விநியோகஸ்தர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம்.
ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 யும் வசூல் ரீதியாக பலத்த அடியைத் தந்துவிட்டது விநியோகஸ்தர்களுக்கு.
முதல் படங்களில் தோல்வியைச் சந்தித்த இருவரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பது பெரிய ப்ளஸ்.
3 படத்துக்கு ஏற்பட்ட அசாதாரண எதிர்ப்பார்ப்பு அந்தப் படத்தைக் கவிழ்த்தது. ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மகா சாதாரணமாக ஆரம்பித்துள்ள இந்தப் படம் ஐஸ்வர்யா எதிர்ப்பார்க்கும் அந்தஸ்தைத் தருமா? பார்க்கலாம்!
மானை சுட்ட வழக்கு: நேரில் ஆஜராக சல்மான், தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிஃபுக்கு உத்தரவு
ஜோத்பூர்: அரிய வகை உயிரினமான கறுப்பு மானைச் சுட்ட வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதே வழக்கில் சல்மானுடன் குற்றம்சாட்டப்பட்ட தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்கள் மீது புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன் ஹம் சாத் சாத் ஹெய்ன் பட ஷூட்டிங்கின்போது, மான் வேட்டைக்குப் புறப்பட்டனர் சல்மான் கானும் உடன் நடித்த தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோரும்.
இந்த வழக்கு கடந்த டிசம்பரில் மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அனைவரும் ஜோத்பூருக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சல்மான் கான் அமெரிக்காவில் இருப்பதால் வரவில்லை. நாளை நிச்சயம் வந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கானின் குற்றம் உறுதியானால் அவர் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவருடன் வேட்டைக்குப் போன தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிப்புக்கும் இதுதான் கதி.
இந்த வழக்கில் முக்கிய சாட்சி, சல்மான் உள்ளிட்ட நடிகர்களை ஜீப்பில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்தான். ஆனால் அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பிரிவு 148ல் சல்மான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் நீதிமன்றம் நீக்க முடிவு செய்தது. ஆனால் இதனைத் தடுத்த உச்சநீதிமன்றம், சல்மானை அந்தப் பிரிவின் கீழும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
அஜீத்தின் புதிய படம் தலைப்பு 'வெற்றி கொண்டான்?'
சென்னை: வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள். கடைசியில் போன மாதம்தான் அதற்குப் பெயர் வலை என்று டிசைனை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்.
இப்போது அதற்கடுத்த படத்துக்கான தலைப்பு குறித்த செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இந்தப் படத்தை சிறுத்தை படம் தந்த சிவா இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் புதிய படத்துக்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்துக்கும் இந்தத் தலைப்பு பிடித்துவிட்டதாம்.
இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
மகர மஞ்சுவில் தாசியாக நடிக்கும் கார்த்திகா!
முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் தாசி அல்லது செக்ஸ் தொழிலாளி வேடமேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள் ஹீரோயின்கள்.
இது பாஸ்ட் புட் காலமல்லவா... அதனால் ரொம்பவே வேகமாக தாசி வேடத்துக்கு புரமோட் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் கோ படத்தில் அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இப்போது தாசி வேடம் ஏற்றுள்ளார், தாய் மொழியான மலையாளத்தில்.
படத்துக்குப் பெயர் 'மகர மஞ்சு'. இந்தப் படத்தில் கார்த்திகாவுக்கு ஜோடியாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மனின் வாழ்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது.
கார்த்திகா ஏற்றுள்ள தாசி வேடத்தை எப்படி செய்ய வேண்டும் என்றும் அம்மா ராதா ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்து வருகிறாராம். ஏற்கெனவே தாசி வேடத்தில் ஒரிஜினலாக அசத்திக் காட்டிய நடிகைகளின் க்ளிப்பிங்குகளையெல்லாம் போட்டுப் பார்த்து, ஒரு தேர்ந்த தாசிப் பெண்ணாகவே மாறியிருக்கிறாராம் இந்தப் படத்தில்.
தமிழில் அப்சரஸ் என்ற தலைப்பில் வெளியாகிறது மகரமஞ்சு.
என்னமோ போங்க... ஸ்வேதா மேனனுக்குப் போட்டியா ஆகாம இருந்தா சரி!
'அதுக்கு இவர் லாயக்கில்லை!' - பிரபல பாடகர் மீது பாடகி புகார்... விவாகரத்து கேட்டு வழக்கு!!
பெங்களூர்: திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன ரீதியாக லாயக்கில்லாதவராக இருக்கிறார் என்று கூறி பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவியும் பிரபல பாடகியுமான ரம்யா.
தமிழில் வட்டாரம் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியவர் ராஜேஷ் கிருஷ்ணன். கன்னடத்தில் இவர் முன்னணி பாடகர். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, நந்தி விருது கூட பெற்றுள்ளார். ஏற்கெனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தானவர்.
இவர் மூன்றாவதாக மணந்தவர்தான் பிரபல பாடகி ரம்யா. கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.
இந்த நிலையில் ரம்யா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கிருஷ்ணன் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.
ஜீவி பிரகாஷ் குழுவில் முக்கிய பாடகியாக உள்ளவர் இந்த ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனக்கு வேதனையளிக்கிறது... ரஜினிகாந்த்
சென்னை: குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என்று அவரது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
1993 ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் 1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை மன்னிக்க கோரியிருந்தார்.
1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இது கொலை போன்ற பெரிய குற்றம் அல்ல. குண்டு வெடிப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் அவர் தீவிரவாதி என கைது செய்யப்பட்டார். கடந்த 20 வருட காலத்தில் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போதும் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இது போன்ற பல அலைக்கழிப்புகளை சந்தித்து விட்டார். இவரின் பெற்றோர் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். இதனால் சஞ்சய் தத்தை மன்னிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி, ''ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து கட்ஜு கருத்து தெரிவித்தால், அதனை அரசும் மற்றவர்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆனால் இந்த விசயத்தை பொருத்தமட்டில் பலவற்றை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. இந்த விசயத்தை கையாளும் அரசின் பல்வேறு அமைப்புகள், இவருடைய கருத்தை கவனத்தில் கொள்ளும். தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''என்று கூறினார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.
இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்''என தெரிவித்துள்ளார்.
கல்யாண சமையல் சாதம் காமெடியில் கலக்கும் லேகா வாஷிங்டன்
பிரசன்னாவுக்கு திருமணத்திற்கு பின் முதன் முதலாக நடிக்கும் படம் "கல்யாண சமையல் சாதம்" நகைச்சுவை கலந்த படமாக தயாராகிறது.
ஒரு திருமணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இந்தப் படத்தை குறும்படங்களின் மூலம் விருது குவித்த ஆர்.எஸ். பிரசன்னா எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தில் கலக்கல் காமெடி ரோலில் நடித்திருப்பது தனக்கு திருப்தியளிக்கிறது என்கிறார் நடிகை லேகா வாஷிங்டன்.
சிம்பு உடன் சண்டையா?
ஜெயம் கொண்டான்' படம் மூலம் பிரபலமானவர் லேகா வாஷிங்டன். 'கெட்டவன்' படத்தில் சிம்புவுடன் இணைந்து இவர் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்று போனது. தற்போது 'கல்யாண சமையல் சாதம்' படம்தான் கை கொடுக்க வேண்டும்.
குறும்படம் என்ன ஆச்சு லேகா?
லேகா வாஷிங்டன் சிம்புவை வைத்து குறும்படம் எடுத்ததாகவும் அப்போது படப்பிடிப்பில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தது. இருவரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது.
அதெல்லாம் வதந்தி நம்பாதீங்க...
சிம்புவுக்கும், தனக்கும் தகராறு நடந்ததாக வந்த செய்திகள் வதந்தி என்கிறார் லேகா. நான் குறும்படம் எடுக்கவே இல்லை.ஓட்டலுக்கு அவருடன் போனதாக வந்த செய்தியும் தவறு.
காமெடியில் கலக்குறேன்
நான் தற்போது பிரசன்னாவுடன் 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தின் கதையை கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நான் நடிக்கிறேன்.
பிரசன்னாவும் லேகா வாஷிங்டனும்
பிரசன்னா திருமணத்திற்கு கலக்கல் காமெடி படத்தில் லேகா உடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் டெல்லிகணேஷ், உமா பத்மநாபன் ஆகியோர் நடித்துள்ளனர். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், இயக்கிய அருண் வைத்தியநாதனும் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
'காதலி'க்காக மாதக்கணக்கில் காத்திருந்த 'கதிர்வேலன்'!
இது கதிர்வேலன் காதலி படத்தின் அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பே வந்திருந்தாலும், ஷூட்டிங் களைகட்டாமல் இருந்தது. காரணம், உதயநிதியின் காதலியாக நடிக்க வேண்டிய நயன்தாரா, அஜீத்துடன் டூயட் பாடிக் கொண்டிருந்தார்!
உதயநிதியை வைத்து எந்த காட்சியும் எடுக்க முடியவில்லை. காரணம் அவர் வரும் காட்சிகளில் ஒன்று நயன்தாரா இருப்பார்... அல்லது சந்தானம் இருப்பார். சந்தானமும் செம பிஸி.
ஆகவே வேறு வழியின்றி இந்த இருவருக்காகவும் காத்திருந்தார் கதிர்வேலனான உதயநிதி.
அஜீத் பட கமிட்மென்டுகளை முடித்துவிட்டு நேற்றுதான் கதிர்வேலன் காதலி படத்தின் ஷூட்டிங்குக்கு கோவை வந்தார் நயன்தாரா. அவர் தொடர்புடைய காட்சிகளை மளமளவென்று ஷூட் செய்ய ஆரம்பித்துள்ளார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். நாளையிலிருந்து உதயநிதியுடன் டூயட் பாடவிருக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் பின்னர் சந்தானம் சேர்ந்து கொள்வாராம்.
ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
நயன்தாராவுக்கு நான் ஏன் பிரியாணி விருந்து கொடுத்தேன் தெரியுமா ? - மனம் திறக்கிறார் ஆர்யா
சென்னை: நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ள நிலையில், நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? என ஆர்யா விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது `வலை', ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள். பிரபு தேவாவுடனான காதலை முறித்துவிட்டு நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததை ஆர்யா விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது.
அப்போது நயன்தாராவை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு அவருக்கு ருசியான பிரியாணி விருந்து அளித்தார். எனவே, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.
இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, 'எனது வீட்டில் அம்மா சுவையாக பிரியாணி சமைப்பார். நிறைய பேர் அதை சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததாக மற்றவர்களிடம் சொல்லி உள்ளனர். எனவே நிறைய பேர் பிரியாணி சாப்பிட ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்காக வீட்டில் விருந்து வைத்தேன். நயன்தாராவும் அந்த விருந்துக்கு வந்தார்.
மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களும் வந்து இருந்தார்கள். நயன்தாராவுக்கு மட்டும்தான் பிரியாணி விருந்து வைத்தேன் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். திருமணத்துக்கு நான் பெண் தேடுகிறேன். பொருத்தமான பெண் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்' என ஆர்யா கூறினார்.
அமீருடன் கை கோர்க்கும் அஜீத்
சென்னை: அமீரின் அடுத்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக சில வதந்திகள் பரவி வருகின்றன.
‘மெளனம் பேசியதே', ராம், பருத்திவீரன் படங்களைத் தொடர்ந்து அமீரின் ஆதிபகவன் படம் வெளியாகி திரையரக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நீதுசந்த்ரா ஹீரோயின்.
சூர்யா, ஜீவா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவியைத் தொடர்ந்து, அமீரின் அடுத்த ஹீரோ அஜீத் தான் எனக் கூறப்படுகிறது. தானே தயாரிக்க இருப்பதால், நல்ல மார்க்கெட் உள்ள நடிகராக தேடி, அஜீத்தை அமீர் தேர்வு செய்துள்ளாராம்.
சிறைக்குப் போகும் சஞ்சய் தத்… என்னாவாகும் போலீஸ் கிரி
சஞ்சய் தத் சிறைக்குப் போனாலும், அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போலீஸ்கிரி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.
தமிழில் வெளியான சாமி படம்தான் இந்தியில் போலீஸ்கிரி என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வந்தது. பொங்கல் விடுமுறையின்போது, சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் சஞ்சய் தத்தும் ரஜினியைச் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், இப்போது சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஏற்கெனவே அவர் 18 மாதங்கள் சிறையில் இருந்ததால், இன்னும் மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழித்தாக வேண்டும்.
இதனால் போலீஸ்கிரி படத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டபோது, கேஎஸ் ரவிக்குமார் ஷூட்டிங்கை கடந்த வாரமே முடித்துவிட்டதாகவும், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடப்பதால் படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.
அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சய் தத் ரசிகர்களுக்கு போலீஸ் கிரிதான் ஒரே ஆறுதல்!