என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன்

எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார்.

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,

நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

 

சமூகத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்... பாரதிராஜா.வீடு முன் போராட்டம்!

சமூகத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்... பாரதிராஜா.வீடு முன் போராட்டம்!

தேனி: சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை இயக்குநர் பாரதிராஜா செய்துள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தேனியில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு பார்வர்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன்பாக பார்வர்ட் பிளாக் கட்சியினர் திடீரென திரண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், அவர்கள் வீட்டை நெருங்கும் முன்பு தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சியினர் வீட்டுக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் அவர்கள் மனு அளித்தனர்.

அதில், அன்னக்கொடி சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது.

காதல் மற்றும் கலப்பு திருமண பிரச்சினைகளால் தர்மபுரி நாயக்கன் கொட்டாய், மரக்காணப் பகுதியில் நடந்த கலவரங்கள் தற்போது ஓய்ந்து உள்ளன. இந்த சினிமா மீண்டும் தென் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதாக உள்ளது.

சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை பாரதிராஜா செய்து உள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

உயரமான நடிகையை தீவிரமாக ரசிக்கும் இயக்குனர்

சென்னை: உயரமான நடிகை ஒருவரை இயக்குனர் ஒருவர் தீவிரமாக ரசித்து வருகிறாராம்.

நெடு, நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த நடிகை அருகில் நின்றால் பல ஹீரோக்கள் குள்ளமாகத் தெரிவார்கள். அந்த நடிகைக்கும் ஒரு தெலுங்கு நடிகருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகருக்கு அண்மையில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

நடிகையோ தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

அந்த நடிகையை லிங்கமான இயக்குனர் தீவிரமாக ரசித்து வருகிறாராம். இதை அவர் அந்த நடிகையிடம் இதுவரை தெரிவித்தது இல்லையாம்.

 

இனி வருஷத்துக்கு 2, அதுவும் பெருசு மட்டுமே: விமல் முடிவு

இனி வருஷத்துக்கு 2, அதுவும் பெருசு மட்டுமே: விமல் முடிவு

சென்னை: விமல் சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஒரு முடிவை எடுத்துள்ளார்.

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த் ஆகியோரின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல். இனி வரும், போகும் கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

 

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

நியூயார்க்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான டாம் குரூஸ் தன் செல்ல மகளின் பாதுகாப்பிற்காக வாரம் ரூ 29,76,150செலவிடுகிறாராம்.

50 வயதான டாம் , தனது 7வயது மகள் சூரியின் பாதுகாப்பிற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறாராம். தனது தாயோடு நியூயார்க்கில் வாழ்ந்து வரும் சூரியைச் சுற்றி 24 மணி நேரம் பாதுகாப்புப்படையினர் உள்ளனராம்.

இது குறித்து டாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், ‘டாமைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் பாதுகாப்பு அரணாக கலர் டிரெஸ்ஸில் இருப்பார்கள். தற்போது அவர் மகள் சூரிக்கு இருமடங்காக நான்கு பேர் பாதுகாப்புக்கு உள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு பணியில் உள்ளவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாம். மேலும், அதிகாரப் பூர்வமாக ஆயுதம் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

சென்னை: பிரியா ஆனந்துக்கு காதல் ஆசை வந்துவிட்டது.

படத்தில் ஹீரோக்களை காதலிப்பது போன்று நடிக்கும் பிரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்கும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

வாமனன் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த என்னை காதல் காட்சியில் நடிக்கக் கூறினார். காதலி கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்று தான் கூற வேண்டும்.

தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்து கொண்டேன். ஆனால் திரையில் காதலிப்பது போன்று நடிக்க மட்டுமே முடியும். நிஜத்தில் மனதுக்கு பிடித்த ஒருவரை காதலிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

நடிப்பில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லை. ஆனாலும் கதாலர் என்று ஒருவர் வரும்போது ஆசை தீர அவரை காதலிப்பேன். பல ஆண்டுகள் காதலித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன். தொழில் அதிபரை மணக்கும் எண்ணம் இல்லை. சக நடிகராக இருந்தாலும் மனதுக்கு பிடித்தவராக இருந்தால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

 

கோச்சடையானில் ரஜினியின் 'சூப்பர்' லுக்

சென்னை: கோச்சடையான் படத்தில் ரஜினியின் சூப்பர் லுக்குடன் கூடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கோச்சடையான். 3டியில் வெளியாகும் கோச்சடையானில் ரஜினி நடுக்கடலில் டால்பினுடன் சண்டை போடும் காட்சி உள்ளது.

கோச்சடையான் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியைப் படிக்கும்போது படம் பற்றிய ஆர்வம் கூடுகிறது. படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரு பலம் என்று கூறலாம்.

கோச்சடையானில் ரஜினியின் 'சூப்பர்' லுக்

மேலும் ரஜினிகாந்த் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் படத்தில் ரஜினியின் சூப்பர் லுக்கைப் பார்த்தீர்களா என்று அவரது பி.ஆர்.ஓ. நிகில் ட்விட்டரில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

 

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

சென்னை: சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்துள்ள உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

உத்தரகண்டில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் நூற்றுக்கண்கானோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் சிக்கினர். பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்த உத்தரகண்டிற்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் அகரம் பவுன்டேஷன் என்ற பெயரில் உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரகசியமாக ‘காதல்’ வளர்க்கும் வம்பு நடிகர்

சென்னை: படப்பிடிப்பில் உண்டான அறிமுகம் தற்போது வீடு வரை தொடர்ந்துள்ளதாம் விரல் நடிகருக்கும், பப்பாளி நடிகைக்கும்.

ஐதராபாத் தான் இவர்களது ரகசிய சந்திப்புகளுக்கு உகந்த இடமாம். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கும் தெரிந்து விட்டதாம்.

எப்படியோ நல்லாருந்தா சரி என வாழ்த்திய பெற்றோர், நடிகரின் தங்கை திருமணம் முடியும் வரை காத்திருக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.

அப்போ... கூடிய சீக்கிரமே, இன்னொரு நட்சத்திர டும் டும் இருக்கும் போல.

 

அன்னக்கொடி- விமர்சனம்

Rating:
2.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம்: பாரதிராஜா

தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட படைப்பாளி, ஸ்டுடியோக்களுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர், மண்ணின் கலைகளை - உணர்வுகளை செல்லுலாய்டில் செதுக்கியவர்... என எத்தனையோ பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பாரதிராஜா 5 ஆண்டுகள் கழித்து உருவாக்கியிருக்கும் படம் என்ற முத்திரையோடு வந்திருக்கிறது அன்னக்கொடி.

ஆனால்... இத்தனைப் பெருமைக்குரியவர் தந்திருக்கும் படம்... பார்க்கும்படி இருக்கிறதா...? பார்க்கலாம் வாங்க!

அன்னக்கொடி- விமர்சனம்

சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்)... ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல் பூக்கிறது.

ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரையே வளைத்து வைத்திருக்கிற சடையனின் (மனோஜ்) காமப் பார்வைக்குள் சிக்குகிறாள் அன்னக்கொடி. அந்த நேரத்தில் அன்னக்கொடியை பெண்கேட்டு அப்பனோடு வருகிறான் கொடிவீரன்.

தாழ்ந்த சாதிக்காரன் எப்படி பெண் கேட்கலாம் என அவர்களை அடித்து உதைத்து சாணியைக் கரைத்து ஊற்றி அசிங்கப்படுத்தி அனுப்புகிறாள் அன்னக்கொடியின் தாய். விஷயமறிந்த சடையன் தன் அடிமையான போலீசுக்கு சொல்லி கொடிவீரனை சிறையில் தள்ளுகிறான்.

ஒரு நாள் அன்னக்கொடியின் தாய் செத்துப் போக, அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக அன்னக்கொடியை தன் வசமாக்கிக் கொள்கிறான் சடையன்.

சடையனுக்கு மனைவியாக அன்னக்கொடி வாழ்ந்தாளா? கொடிவீரன் காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் ரத்தக்களறியாக சொல்லி முடிக்கிறார் க்ளைமாக்ஸில்.

பாரதிராஜாவின் கிராமத்துக் கதைகள் பெரும்பாலும் சோடைபோகாதவை. விலக்காக முதல் சொதப்பல் ஈரநிலம்... அந்தப் பட்டியலில் இப்போது அன்னக்கொடி!

அன்னக்கொடி- விமர்சனம்

ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன. பாரதிராஜாவின் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, அழகியலோ, வசனங்களோ, நுட்பமான நளினங்களோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட இல்லை.

ஒரு சாம்பிள்... நாடோடித் தென்றலில் சோத்துக்கு தொட்டுக் கொள்ள ரஞ்சிதாவின் கைவிரல்களை பயன்படுத்தியபோது நம்மால் ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தப் படத்தில் கார்த்திகாவின் அல்லது லட்சுமணனின் நகங்களைக் கடித்து அதை கஞ்சிக்கு தொட்டுக் கொள்வதாகக் காட்டியிருப்பது குமட்டலைத்தான் தருகிறது!

அதேபோல ஏற்கெனவே பாரதிராஜாவின் படங்களில் பார்த்த நிறைய காட்சிகளை இந்தப் படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. அன்னக்கொடியின் தாய் இறந்துபோனது தெரிந்ததும், காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான் கொடிவீரன்... அப்போது கல்யாணமாகி புருஷனுடன் மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருப்பாள் அன்னக்கொடி. இதை வேதம் புதிதிலேயே கொஞ்சம் வேறு மாதிரி காட்டியிருப்பார்.

அன்னக்கொடி- விமர்சனம்

ஒரு நா ஒரு பொழுது, சிறுக்கி மவ, அல்லைல குத்து... இதுபோன்ற ஒரு டஜன் வார்த்தைகள் திரும்பத் திரும்ப படம் முழுக்க வந்து பெரிய அலுப்பைத் தருகின்றன. வசனங்களில் ஆபாசம், அருவருப்புக்கும் பஞ்சமில்லை.

சடையனுக்கு தந்தையாக வரும் (இயக்குனர்) மனோஜ்குமார் தன் மருமகளையே மடக்கப் பார்க்கும் காட்சிகளும் வசனங்களும் இது பாரதிராஜாவின் படமா.. மாமனாரின் இன்பவெறி மாதிரி கில்மா படமா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் சேலை ரவிக்கை என டீஸன்டாக நடமாட, இளம் பெண்களான கார்த்திகாவும், 'லோக்கல் வெடக்கோழி' மீனாளும் மட்டும் ரவிக்கையில்லாமல் அலைவது ஏன் என்பது பாரதிராஜாவுக்கே வெளிச்சம். ஒரு காட்சியில் காட்சியில் கிட்டத்தட்ட முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமான நிர்வாணத்தோடு கார்த்திகாவை ஓடவைத்திருக்கிறார் பாரதிராஜா. அவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்பட்டிருக்கிறது!

மகனுக்கு நல்ல வாய்ப்பை உண்டாக்கித் தர ஒரு தந்தை விரும்புவது நியாயம்தான். ஆனால் அதற்காக இப்படியா... மனோஜ் இல்லாத காட்சியென்று எதையும் எடுக்கவே அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் மனோஜ். இதில் அவருக்கு பஞ்ச் டயலாக்... பஞ்சர் பாட்டு என்று படுத்தி எடுக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் சாகும் விதமிருக்கே... பாரதிராஜா சார்... அந்தக் காட்சியைப் பார்த்து குதிரை மேலிருந்த அய்யனாரே குபுக்கென்று சிரித்திருப்பார்!

கதைப்படி மனோஜ், 'அந்த விஷயத்துக்கு' லாயக்கில்லாதவர். அப்புறம் அவரைக் காமுகனாகக் காட்டுவது, அயிட்டம் மீனாள் வீட்டுக்கு ரேட் பேசிவிட்டுப் போவது, அடுத்தவன் பெண்டாட்டியை தூக்கி வருவது, இன்னொருவனைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்தும் அன்னக் கொடியை அபகரிப்பது.... இதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா... இந்தக் கதைக்கு மனோஜின் கையாலாகாத்தன கேரக்டர், அதற்கான ப்ளாஷ்பேக், அவர் செய்யும் ஆறேழு கொலைகள் எந்த வகையிலாவது உதவியிருக்கின்றனவா... என்ன டைரக்டரே?

நடிகர்களின் பங்களிப்பு என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. லட்சுமணன் கொஞ்சம் முயன்றால் ஒரு நல்ல நடிகராக வர வாய்ப்பிருக்கிறது. முதல் படம் என்றாலும், முக பாவங்களைத் தெளிவாகக் காட்ட வருகிறது அவருக்கு. கார்த்திகாவை ஆடு மேய்க்கும் பெண்ணாக ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அவரது தோற்றம் அப்படி. குறிப்பாக அந்த புருவம்.. ரொம்ப ஓவர்!

அன்னக்கொடி- விமர்சனம்

மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த போலீஸ்காரர்... கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சாதி... இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல் ஜோடி... பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். இதை அவர் எந்த சமரசமும் இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும்.

ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது.

பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில், அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..!

 

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

பெங்களூரு: நடிகர் விவேக் முதல் முறையாக கன்னடத்தில் பேசி நடித்துள்ள சந்திரா திரைப்படம் கர்நாடகா முழுவதும் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா நாயகியாகவும் பிரேம் குமார் நாயகனாகவும் நடித்துள்ள படம் சந்திரா. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் மட்டும் வெளியாகிவிட்டது. ரூபா அய்யர் இயக்கியுள்ள இந்தப் படம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

மன்னர் குலத்தில் பிறந்த சந்திராவான ஸ்ரேயாவுக்கும், அந்த குடும்பத்துக்கு நெருக்கமான நண்பரின் மகன் சந்திரசேகரன் என்கிற சந்திராவுக்கும் இடையில் காதல் பூக்கிறது. ஆனால் மன்னர் குடும்பம் தங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள பையனுக்கு சந்திராவை மணம் முடிக்க முடிவு செய்கிறது. சந்திரா - சந்திரசேகரன் காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்தப் படத்தின் சில வரிக் கதை.

படத்தில் சந்திராவாக வரும் ஸ்ரேயாதான் ஹைலைட். படம் முழுக்க அவரது கவர்ச்சியை செலுலாய்டில் விருந்தாகப் படைத்திருக்கிறது காமிரா. இதுவரை இல்லாத அளவுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார் இந்தப் படத்தில் ஸ்ரேயா.

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம், நம்ம ஊர் சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடிதான். பொதுவாக தமிழ் காமெடியன்கள் வேறு மொழிக்குப் போனால் டப்பிங் குரல்தான் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களின் ஒரிஜினல் குரல் கேட்டுப் பழகியவர்களால் அந்தப் படங்களை ரசிக்க முடியாமல் போய்விடும். காரணம் காமெடியன்களின் அடையாளங்களுள் முக்கியமானது அவர்களின் குரல்.

இதை நன்கு உணர்ந்தவர் விவேக். அதன் விளைவு, கன்னடமாக இருந்தால் என்ன... நானே கற்றுக் கொண்டு பேசிவிடுகிறேன் என்று உறுதியாக இருந்தாராம். கன்னடத்தை அந்த லோக்கல் ப்ளேவரோடு அசத்தலாகப் பேசியிருக்கிறார் விவேக் என படம் பார்த்த கன்னட ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அவரோடு காமெடி செய்த சாது மஹராஜ் சொதப்பினாலும், விவேக் அதையும் சமாளித்து நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

பரவாயில்லையே... விவேக்குக்கு இன்னொரு கேட்டும் ஓபனாயிடுச்சு!

 

எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

சென்னை: சிக்ஸ் பேக், ஜிம் பாடி ஆண்களை எனக்குப் பிடிக்காது. இந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார் பிரபல நடிகை கங்கனா ரனவத்.

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனவத். இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது திருமணம், குடும்பம் என செட்டிலாகும் மூடுக்கு வந்துவிட்டார்.

தனக்கு எப்படிப்பட்ட ஆண் துணை வேண்டும் என்பது குறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பலசாலிகளாக இருப்பதை விட, அன்பானவர்களாக இருப்பதையே விரும்புகிறேன். சிக்ஸ்பேக், ஜிம் பாடி ஆண்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்.

வாழ்க்கையில் காதலை விட முக்கியமான விஷயங்கள் ஏராளம் உள்ளன. எனவே இப்போது காதல் பற்றி பேச எனக்கு நேரம் கிடையாது. அதுபற்றி எதுவும் தெரியாது.

சினிமாவில் கதாநாயகிகளை ஆபாசமாக பொம்மை போல காட்டுகிறார்கள். இது சரியானதல்ல.

நான் ஆபாசமாக நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஆபாச முத்திரை விழுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கிறேன். ஹ்ரித்திக் ரோஷனுடன் கிரிஷ் 3 படத்தில் இப்போது நடித்து வருகிறேன்," என்றார்.

 

கூடுதல் பணம் கேட்டு தகராறு- சுஜிபாலா மீது புகார்

கூடுதல் பணம் கேட்டு தகராறு- சுஜிபாலா மீது புகார்

உண்மை என்ற படத்தின் படப்பிடிப்புக்கு வர கூடுதல் பணம் கேட்டு தகராறு செய்வதாக அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளனர்.

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை. இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ரவிக்குமார்தான் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தது நினைவிருக்கலாம்.

திருமணம் நின்று போன பிறகும், அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சுஜிபாலா. ஆனால் சண்டிகரில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் சுஜிபாலா கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் இயக்குநர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் சுஜிபாலாவிடம் பேசுவதாக கூறியுள்ளார்.

ரவிக்குமார் கொடுத்துள்ள புகாரில், "சண்டிகரில் ‘உண்மை' படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன். அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.

படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள். என்னை டைரக்டர் என்றும் பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார். சண்டிகாரில் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சம் செலவில் அரங்கம் அமைத்துள்ளோம்.

தற்போது மழை சீசன் என்பதால் அந்த செட் வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன்," என்றார்.

 

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

அமீர் நடிக்கும் படப்பிடிப்பில் கல்வீச்சு மற்றும் தகராறு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யோகி படத்திற்கு பிறகு அமீர் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பேரன்புமிக்க பெரியோர்களே. சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு அந்த மர்ம நபர்கள் படப்பிடிப்பு சாதனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாரதிராஜாவின் அபிமானிகள் சிலர்தான் இந்த கல்வீச்சுக்கு காரணமாக இருக்கும் என நினைத்து அமீர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சம்பவத்தை கேள்விப்பட்ட பாரதிராஜா உடனே அதை மறுத்துள்ளார்.

எனவே அமீர் மாவட்ட காவல் அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இப்போது பலத்த பாதுகாப்போடு ஷூட்டிங் நடந்து வருகிறது.

 

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

சினிமாவில் ரொமான்ஸ் நாயகன் என்று பெயரெடுத்த தனுஷ் தனக்கு வீட்டில் ரொமான்ஸ் செய்ய வராது என்றும் என் மனைவி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். படம் பட்டையை கிளப்புறது. சோனம் கபூர் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும், ரொமான்ஸ் சூப்பர் என்றும் பரவலான பேச்சு உள்ளது.

ராஞ்சனா மட்டுமல்லாது, தனுஷ் மனைவி இயக்கிய 3 படத்திலும் நாயகி ஸ்ருதியுடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்திருந்தார் தனுஷ். சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது பற்றியும், வீட்டில் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றியும் மும்பை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தனுஷ்.

அப்போது, வீட்டில் தன்னால் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தார். என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறேன். ஆனால் என் மனைவி ஐஸ்வர்யாதான் பாவம் எப்படியோ என்னை பொறுத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்னுடைய வேலை அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்த தனுஷ் பாவம் சொந்த வாழ்க்கையில் ரொமான்ஸ் செய்ய நேரம் இல்லாமல் தவிப்பதைத்தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

 

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

சினிமாவில் ரொமான்ஸ் நாயகன் என்று பெயரெடுத்த தனுஷ் தனக்கு வீட்டில் ரொமான்ஸ் செய்ய வராது என்றும் என் மனைவி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். படம் பட்டையை கிளப்புறது. சோனம் கபூர் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும், ரொமான்ஸ் சூப்பர் என்றும் பரவலான பேச்சு உள்ளது.

ராஞ்சனா மட்டுமல்லாது, தனுஷ் மனைவி இயக்கிய 3 படத்திலும் நாயகி ஸ்ருதியுடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்திருந்தார் தனுஷ். சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது பற்றியும், வீட்டில் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றியும் மும்பை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தனுஷ்.

அப்போது, வீட்டில் தன்னால் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தார். என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறேன். ஆனால் என் மனைவி ஐஸ்வர்யாதான் பாவம் எப்படியோ என்னை பொறுத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்னுடைய வேலை அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்த தனுஷ் பாவம் சொந்த வாழ்க்கையில் ரொமான்ஸ் செய்ய நேரம் இல்லாமல் தவிப்பதைத்தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

 

சில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி

சென்னை: நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது சாவு கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.

சில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி

றுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன. அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்தபோதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம்.

இந்நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.

 

கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

இளமைப் பயணம் என்ற படத்தினை தொடங்கி வைத்து வாழ்த்தினார் தமிழக கவர்னர் ரோசய்யா.

மேஜிக் அண்டு லாஜிக் புரோடக்சன் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சித்ரா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் இளமை பயணம். இப்படத்தை பாரதி கணேஷ் இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர். ரேஹானா இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரோசன், மனாஷ், வினோத், ப்ரீத்தி, ஸ்வீட்டி ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் சேகர், ராதாரவி, அம்பிகா, கோவை சரளா. தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கவர்னர் தொடங்கி வைத்த புதுப் படம்.. இளமைப் பயணம்!

இந்த படத்தின் பூஜை நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் ராதாரவி, இயக்குனர் மாதேஷ், விக்ரமன், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தமிழக கவர்னர் ரோசய்யா படபூஜையை துவங்கி வைத்ததார்.

அப்போது அவர் ''எனக்கு சினிமா பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் படத்தில் நடிக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன்,'' என்றார்.

மூன்று ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்களை கொண்ட ஒரு காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்குதாக படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் தெரிவித்தார்.

 

‘சத்யாகிரஹ்’ மூலம் ‘கரீனா கபூர் கான்’ ஆக அறிமுகம் ஆகும் கரீனா

‘சத்யாகிரஹ்’ மூலம் ‘கரீனா கபூர் கான்’ ஆக அறிமுகம் ஆகும் கரீனா  

மும்பை: பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூர் தனது பெயரை கரீனா கபூர் கான் என மாற்றிக் கொண்டுள்ளார்.

தலாஷ் படம் ரிலீசான போது கூட தனது பெயரை கரீனா கபூர் என்றே போடச் சொன்னவர் தற்போது சத்யாகிரஹா திரைப்படத்தில் தனது பெயரை கரீனா கபூர் கான் என மாற்றியுள்ளாராம்.

தனது கணவரின் பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் கரீனா, இதன் மூலம் தான் திருமணமானவர் என வெளிப்படுத்த விருப்படுகிறாராம்.

நேற்று மாலை நடந்த சத்யாகிரஹ் படத்தின் ட்ரைலர் வெளியீட்டின் போது, கரீனா இனி கரீனா கபூர் கான் என அறிமுகப்படுத்தப் படுகிறார் என ஒளிர்ந்ததைக் கண்டு அனைவரும் சில நிமிடங்கள் திகைத்தனர்.

இதன் மூலம், கான் கிளப்பிற்கு ஒரு கிளாமர் ஸ்டார் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடி இன்று வெளியாகிறது!

பாரதிராஜாவின் அன்னக்கொடி இன்று ரிலீஸ்!

பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகிறது.

பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளி வரும் படம் அன்னக்கொடி. ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அமீர், இனியா, புதுமுகம் லட்சுமணன் மற்றும் கார்த்திகா நடிக்கவிருந்தனர். இவர்களை வைத்து தேனி அல்லி நகரத்தில் பெரிய அளவில் பூஜையும் போடப்பட்டது.

ஆனால் பின்னர் அமீரும் இனியாவும் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டனர். லட்சுமணனும் கார்த்திகாவும் மட்டும் நடித்துள்ளனர். அமீர் நடிக்கவிருந்த பாத்திரத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அன்னக்கொடி படத்தை வெளியிடுகிறார் பாரதிராஜா.

இந்தப் படம் கலப்புத் திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாக செய்திகள் கசிந்ததால், அதன் அடிப்படையில் படத்தை தடை செய்யக் கோரி மதுரை தேவர் பாசறையின் இயக்கத் தலைவர் ஏ.கே.ரகுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தடை எதையும் விதிக்காமல் வழக்கைத் தள்ளி வைத்தனர்.

எனவே திட்டமிட்டபடி இன்று அன்னக்கொடி படம் வெளியாகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் படமாக வந்துள்ள அன்னக்கொடி, பாரதிராஜாவுக்கும் ரசிகர்களுக்கும் இன்னொரு மண்வாசனையாக அமையுமா... பார்க்கலாம்!

 

நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல்... மிருகங்களுடன் பைட் - கோச்சடையான் அப்டேட்

கோச்சடையான் படத்தில் நடுக்கடலில் ரஜினி டால்பின்களுடன் நீந்துவது போலவும், கொடிய மிருகங்களுடன் சண்டையிடுவதுபோலவும் காட்சிகள் அமைத்துள்ளார்களாம்.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம், அதிகபட்ச கிராபிக்ஸ் மற்றும் அதை 3 டிக்கு மாற்றும் பணிகள் காரணமாக தாமதமாகி வருகிறது.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது.

நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல்... மிருகங்களுடன் பைட்- கோச்சடையான் அப்டேட்

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் காட்சிகள் குறித்து கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தில் ராட்சத சுறா மீன்களுடன் ரஜினி சண்டையிடுவது போல கிராபிக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது.

இப்போது அதற்கு விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சௌந்தர்யா, "கோச்சடையானில் ரஜினி சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. ஆனால் அவர் டால்ஃபின்களுடன் நீந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் கொடிய மிருகங்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. முதலில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டுத்தான் டிரெய்லர், இசை வெளியிடுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

 

'உ' பட இசைத் தகடு... இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார்

சென்னை: விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய 'உ' என்ற தமிழ் படத்தின் இசையை பிரபல இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார். தயாரிப்பாளர் தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

இந்த இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனியில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.

'உ' பட இசைத் தகடு... இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார்  

இப்படத்தை பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆஷிக் இயக்குகிறார். இவர் எஸ்எஸ் குமரனிடம் பணியாற்றியவர். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கும் வருகிறது. பத்திரிகையாளர் முருகன் மந்திரம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார்.

விழாவில் பேசிய தம்பி ராமையா, "சரி...கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் கதை கேட்க ஆரம்பித்தேன்...சும்மா சொல்லக்கூடாது பயல்கள் மிரட்டியிருக்கிறார்கள்... என்னைப் பாடவைத்து ஆடவைத்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள்," என்றார்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசுகையில், "பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்து... குடும்பம் குட்டி என்று ஆகி வாழ்வாதாரத்திற்கே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்... சினிமா பத்திரிக்கையாளராகவே எனது பயணம் இருந்ததால் சினிமாவுக்குள்ளேயே இருக்கமுடிந்தது... இன்று பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது... அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பிராமையாவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித்தும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.

 

நடிகை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடுவராகும் ‘டான்ஸ் தம்பி’

சென்னை: தற்போது தொகுத்து வழங்கி வரும் ஜாக்கெட் புகழ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் ரன் நடிகை.

அந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பிரபலமான நடுவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என கருதிய தயாரிப்புக் குழுவினர், நடிகையின் உதவியைக் கேட்க, டக்கென்று நடிகையின் மனக்கண்ணில் தோன்றியது ஒல்லிக்குச்சி நண்பர் தானாம்.

முன்பொரு காலத்தில் தனக்கு ‘ஐ லவ் யூ' சொன்னவர் என்ற உரிமையில் நடிகை கேட்க, ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணே' என உருகினாராம் நடிகர். ஆனால், நான் நடுவராகக் கேட்டது உன் தம்பியை என ரன் விளக்கவும், ஒடி வந்துவிட்டாராம் டான்சின் தம்பி நடிகர்.

தம்பி தற்போது ஹிந்தி படம் இயக்குவதில் பிசியோ பிசி என்பது கொசுறு செய்தி.

 

இனி நான் குடும்பப்பாங்கினி- அஞ்சலியின் புது முடிவு

கவர்ச்சிக்கு முற்றாக 'பை' சொல்லும் மூடுக்கு வந்துவிட்டார் நடிகை அஞ்சலி.

காரணங்கள் இரண்டு:

தான் கவர்ச்சியாக நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை..

கவர்ச்சிக்கு 'பை' 'பை'.. இனி நான் குடும்பப்பாங்கினி- அஞ்சலியின் புது முடிவு

அடுத்து கவர்ச்சி காட்டும் அளவுக்கு வாகாக அவர் உடலும் அமையவில்லை. இடுப்பு பெருத்து, பார்க்க சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.

இந்த காரணங்களை வைத்து, இனி தம்மாத்தூண்டு உடையுடன் வரும் இயக்குநர்களைப் பார்த்தாலே காத தூரத்துக்கு ஓடுகிறாராம் அஞ்சலி.

இனி தனக்கு அங்காடித் தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள்தான் வேண்டும் என்றும், இந்த மாதிரி கதைகள் கிடைத்தால் பாதிச் சம்பளமே கூடப் போதும் என்றும் கறாராகச் சொல்கிறாராம் அஞ்சலி.

ஆனால் அம்மணியின் கண்டிஷன் எல்லாம் தமிழுக்குதான். தெலுங்கிலோ, மேடையிலேயே கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் வந்து கதி கலங்க வைக்கிறார் அஞ்சலி.

இங்கே நீங்கள் பார்ப்பது, சமீபத்தில் நடந்த தெலுங்கு டிவி சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அஞ்சலியின் 'குடும்பப் பாங்கான' தோற்றம்தான்!

 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பு: ஏ ஆர் ரஹ்மான், லதா ரஜினி, விஜய் வாழ்த்து

சென்னை: ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பில் தமிழ் சினிமா உலக பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் நேற்று சென்னை ராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்தது. மாலையில் அதே மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். ரஜினி சார்பில் அவர் மனைவி லதா ரஜினி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஜிவி பிரகாஷின் தாய்மாமாவாகிய ஏ ஆர் ரஹ்மானும் வரவேற்புக்கு வந்து வாழ்த்தினார்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமண வரவேற்பு: ஏ ஆர் ரஹ்மான், லதா ரஜினி, விஜய் வாழ்த்து  

திமுக பொருளாளர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

நடிகர்கள் விஜய், தனுஷ், பார்த்திபன், ஆர்யா, ஷாலினி அஜீத், அதர்வா, இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாரதிராஜா, ஷங்கர், அமீர், லிங்குசாமி, வெற்றிமாறன், வசந்த பாலன், சிம்பு தேவன், இசையமைப்பாளர்கள் டி இமான், விஜய் ஆன்டனி, பரத்வாஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தயாநிதி அழகிரி, எல்ரெட் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா?

த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா?  

சென்னை: த்ரிஷாவுக்கு கோ பட நாயகி கார்த்திகாவை இவ்வளவு பிடிக்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.

ராதாவின் மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன. மேலும் அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்துள்ள அன்னக்கொடி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அன்னக்கொடிக்கு விளம்பரமே செய்யவில்லை என்று நினைத்த நிலையில் ஒருவர் அப்படத்தை தென் மாவட்டங்களில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் படத்திற்கு தடை கோரியுள்ளாரே அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று ஏற்கனவே பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஓசியில் நல்ல விளம்பரம் தான்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். கார்த்திகாவின் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் த்ரிஷாவின் ட்வீட் தான் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. ட்வீட்டைப் பார்ப்பவர்கள் அடடா த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்வளவு பிடிக்குமா என்று நினைக்கும்படி உள்ளது.

த்ரிஷாவின் ட்வீட்,

@KarthikaNair9 happppy happpy bdayyy sexyyyy womannn hav a great oneee . much love n kisses

 

ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலு

ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலு

ஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு.

2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார்.

அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்!

படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன்.

ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங்க முதலில் ஹீரோயினா நடிக்க ஒப்பந்தமாச்சு. அப்புறம் என்னாச்சின்னே தெரியல... அது நடிக்கல. அப்புறம்தான் தெரியுது... ஒருத்தன் ரெண்டு பேருல்லண்ணே... ஒரு கூட்டமே போய் அந்த புள்ள மனசை கலைச்சிருக்காய்ங்கன்னு... 'வடிவேலுவுக்கெல்லாம் ஜோடியா நடிக்கிறீங்களே... உங்க எதிர்காலம் அவ்ளோதான்னெல்லாம்' பயமுறுத்தி இருக்காணுங்க... இருக்கட்டும்ணே... இதையெல்லாம் ஏற்கெனவே பாத்ததுதானே...", என்றார்.

 

திரும்பவும் ‘முக்கோணக் காதல்’ கதைப் படங்கள் வரப்போவுதாம்...

திரும்பவும் ‘முக்கோணக் காதல்’ கதைப் படங்கள் வரப்போவுதாம்...

சென்னை: கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த முக்கோணக் காதல் கதைப் படங்களை திரும்பவும் தூசி தட்டும் முயற்சியில் இறங்கிவிட்டார்களாம் இயக்குநர்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை முக்கோணக் காதல் கதைப்படங்கள் நிறைய வந்து, வசூலை வாரிக் குவித்தன. இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் அல்லது ஒரு ஹீரோ, இரண்டு ஹீரோயின் என படமே கலர் புல்லாக இருந்த காலம் திரும்புகிறதாம்.

வழக்கம் போல, இதற்கும் வடக்கே முதலில் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். கூடிய சீக்கிரம் இந்த போபியா தமிழுக்கும் வந்துவிடும் வாய்ப்புள்ளது.

ஆனால், அந்தக் காலத்தில் ஈகோ இல்லாமல் பெரும் ஹீரோ, ஹீரோயின்கள் இணைந்து நடித்தனர். அது இப்போது சாத்தியமா என்பது கொஞ்சம் சந்தேகமே.

 

எது பர்ஸ்ட்...சாப்பாடா? அழகனா?: சிக்கலில் சின்னவரின் படம்

சென்னை: ரம்ஜான் ஸ்பெஷல் சாப்பாடு படமும் பரிமாற ரெடி, கல்லையும் கண்ணாடியையும் திரும்பத் திரும்ப உடையாமல் மோதவிடும் டைரக்டரின் படமும் ரெடி.

ஆனால், படத்தின் நாயகன் சாப்பாடு படத்திற்கு முன்னதாக, அழகன் படம் வந்தால் நன்றாக இருக்கும் எனக் ஆசைப்படுகிறாராம். தனது ஆவலை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் போட, விஷயம் இப்போ காட்டுத் தீயாக கொளுந்து விட்டு எரிகிறதாம்.

காரணம், சங்கத்தில் முறையிட போவதாக மிரட்டுகிறாராம் சென்னை கிரிக்கெட் டைரக்டர். திரைக்குப் பின்னால், சமாதான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

 

சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கம்பி கட்டும் வேலை செய்த காமெடி நடிகர்

சென்னை: இன்றைய தேதியில் அனைத்து படங்களிலும் காமெடி பண்ணும் நடிகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம்.

கோலிவுட்டின் பிசியான காமெடி நடிகர் என்றால் அனைவரும் சொல்வது அந்த சந்தன நடிகரின் பெயரைத் தான். காமெடியில் புகுந்து விளையாடும் அவர் நடிக்க வரும் முன்பு கம்பி கட்டும் வேலை செய்தாராம்.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தற்போது கை நிறைய சம்பாதிக்கிறார். எந்த பகுதியில் கம்பி கட்டும் வேலை செய்தாரோ தற்போது அதே பகுதியில் பெரிய பங்களா வாங்கிப் போட்டிருக்கிறாராம். இது தவிர நகரின் மைய பகுதியிலும் ஒரு பங்களா வாங்கியுள்ளாராம்.

காமெடியில் சம்பாதிக்கும் பணத்தை அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறாராம். ரியல் எஸ்டேட் விலை தான் நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறதால் அதில் முதலீடு செய்கிறாரோ. பிழைக்கத் தெரிந்த மனிதர் தான்.

 

'மிஸ்டர் விஜயகாந்த் பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!' - பாரதிராஜாவின் அடுத்த அட்டாக்

'மிஸ்டர் விஜயகாந்த் பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!' - பாரதிராஜாவின் அடுத்த அட்டாக்

சென்னை: தொடர்ந்து பரபரப்பு கிளப்பி வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. இளையராஜா, சமீபத்தில் மறைந்த மணிவண்ணன் ஆகியோருக்கு அடுத்து, இப்போது அவரது அட்டாக் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது.

தமிழரல்லாத விஜயகாந்த், தமிழரை ஆளக் கூடாது என்னும் பொருள்பட, மிஸ்டர் விஜயகாந்த், பாவம் தமிழர்கள், எங்களை விட்டுவிடுங்கள் என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

இந்த வாரம் விகடன் மேடையில் வாசகர் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பதில்:

கேள்வி: விஜயகாந்த்-எங்கே... உங்க மனசுல என்ன தோணுதோ... பளிச்னு சொல்லுங்க?

பதில்: இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க.

ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!''

இதே பாரதிராஜா விஜயகாந்தை வைத்தும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா... 'தமிழ்ச் செல்வன்'!!

 

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

பொதுவாக இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர்கள் டைரக்டராக ஆவது தான் வழக்கம். ஆனால் இங்கே ஒருவர் தயாரிப்பாளராகியிருக்கிறார்.. அதுவும் பிரபல இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் பணியாற்றியவர்.. பெயர் ஏஎம் சம்பத்குமார்.

இந்தப் படத்தை இயக்குபவர் அதே ஏஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த இன்னொருவரான அன்பு ஜி. படத்தின் தலைப்பு இருவர் ஒன்றானால்!

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

தான் டைரக்ட் செய்யும் படத்தைக் கூட தள்ளி வைத்து விட்டு, அன்பு.ஜி-யின் கதையை கேட்ட மாத்திரத்தில் உடனே இந்த கதையை தானே தயாரிப்பது என முடிவு செய்தாராம் சம்பத்குமார். அந்த வேகத்திலேயே படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.

காதலை மையப்படுத்திய கதை என்பதால் புது முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். பல முகங்களை தேடி இறுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளையே தேர்வு செய்துள்ளார்கள். ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவரான பி ஆர் பிரபு நாயகனாக தேர்வானார். விஸ்காம் மாணவர் மாலினி, மாடல் தீக்ஷிதா இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.

மேலும் ஷைலேந்திரி, கார்த்திகா, ஜனனி, பிரவின், அமர் மற்றும் பல மாணவ மாணவிகள் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸின் சிஷ்யர்கள் 'இருவர் ஒன்றானால்'...

"வேட்டைக்காரன்"-ல் 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது...' என்ற பாடலை பாடிய குரு கிருஷ்ணா இப்படத்தில் இசைஅமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

'பெரிய...’ஹீரோயின் லிஸ்டைக்காட்டி டைரக்டர்களை மிரட்டும் தம்பி நடிகர்

சென்னை: மாமா சௌக்கியமா போபியாவால் பாதிக்கப்பட்டுள்ள தம்பி நடிகர், தனக்குப் பிடித்தமான நடிகைகளை ஹீரோயின்களாகப் போட்டால் தான் கால்சீட் தருவேன் என அடம் பிடிக்கிறாராம்.

இதற்காக கஷ்டப்பட்டு முன்னணி நடிகைகளின் பெயர்களை வரிசைப்படுத்தி ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்துள்ளாராம். கால்சீட் கேட்டு வரும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம் அதைக் காட்டி, பயமுறுத்துகிறாராம்.

தொடர்ச்சியாக வந்த படங்கள் பிளாப் ஆனதை மறந்து தம்பி இப்படி அலம்பல் பண்ணுதே என்று கலாய்க்கிறார்களாம் கால்சீட் கேட்டு வருபவர்கள். அதிலும் தம்பி கொடுக்கும் லிஸ்ட்ல் உள்ள நடிகைகள் எல்லாம் ஒரு கோடி சம்பளத்தை வாங்குபவர்கள் என்பது தான் பெரிய காமெடி.

இதனால், உன் சங்காத்தமே வேணாம்பா என அலறி அடித்து ஓடுகிறார்களாம் படத் தயாரிப்பாளர்கள்.

 

'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்' - வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்!

சென்னை: வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு முதலில் கஜபுஜ புஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்று நீண்ட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இப்போது படத்தின் தலைப்பு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்து. வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்' - வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்!

இந்தப் படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு வசனங்களை ஆரூர்தாஸ் எழுதுகிறார். டி இமான் இசையமைக்கிறார். வாலி, புலமைப்பித்தன், நா முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார்கள். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். எம் பிரபாகர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

 

இந்திராகாந்தியின் வாழ்கையை படமாக்கும் நட்டிகுமார்!

முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குகிறார் இயக்குநர் நட்டி குமார்.

கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த நட்டிகுமார். இவர் தனது நீண்ட நாள் கனவாக நினைத்திருந்தது இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க வேண்டும் என்பதுதான்.

இந்திராகாந்தியின் வாழ்கையை படமாக்கும் நட்டிகுமார்!

அரசியலுக்குப்பால் இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாற்றை படமாக்கும் கனவு இப்போது நினைவாகப் போவது தனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என்கிறார் நட்டி குமார்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது.

இந்தப் படத்துக்கு IRON LADY INDHIRA GANDHI என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் நட்டிகுமார்.

படத்தில் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளாராம் நட்டிகுமார். ஆனால் இது சாத்தியமாகுமா என்றால், "காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும்," என்கிறார் நட்டி.

 

சூர்யாவின் சிங்கம் 2-க்கு க்ளீன் 'யு' சான்று... 2,400 அரங்குகளில் ரிலீஸ்!

சென்னை: சூர்யாவின் சிங்கம் 2-க்கு க்ளீன் 'யு' சான்று... 2,400 அரங்குகளில் ரிலீஸ்!  

ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா - ஹன்சிகா நடித்துள்ளனர். விவேக்கும், சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகியுள்ள பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை சென்சார் குழுவினர் சமீபத்தில் பார்த்தனர். படத்தில் எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.

ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் வெளியாகாத அளவுக்கு 2400 தியேட்டர்களில் சிங்கம் 2 வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகளுக்குமேல் படம் வெளியாகவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

நடிகை லீனா மரியா பால் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: பல கோடி மோசடி வழக்கில் நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கனரா வங்கியில் ரூ.19 கோடி மற்றும் இன்னொரு வங்கியில் ரூ 75 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிகளை அரங்கேற்றிய அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகை லீனா மரியா பால் ஜாமீன் மனு தள்ளுபடி

லீனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அனைத்து மோசடிகளையும் சுகாஷ்தான் செய்தார் என்றும், தனக்கு நடிகை ஆசை காட்டி ஆசை நாயகியாக வைத்திருந்தார் என்றும் கூறிவிட்டார்.

இப்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீனா மரியா தனக்கு ஜாமீன் கேட்டு திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

புதன்கிழமை இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராயினார். லீனா மரியா தரப்பில் வழக்குரைஞர் ஜான் சத்யா ஆஜராயினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லாகான், நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

சென்னை: பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தை தென்மாவட்டங்களில் திரையிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேவர் பாசறை இயக்கம் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஏ.கே. ரகுபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

அன்னக்கொடி திரைப்படத்தின் கதையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், கதாநாயகி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உள்ளது. இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள், தென் மாவட்ட மக்களிடையே சமூக அமைதியைக் குலைப்பதாக இருக்கிறது.

பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

இதேபோன்ற கதையம்சம் கொண்ட பாரதி கண்ணம்மா திரைப்படம் வெளியானபோது, தென்தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே, அன்னக்கொடி திரைப்படத்தை தென்மாவட்டங்களில் திரையிட அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து தலைமைச் செயலர், திரைப்படத் தணிக்கை வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்க மனு நீதிபதி என். கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கூறுகையில், திரைப்படம் திரைக்கு வராத நிலையில், மனுதாரர் படத்தின் கதையம்சத்தை முழுமையாக அறியாத நிலையில் சமூக அமைதியை சீர்குலைக்கும் என்று எப்படி கூற முடியும் என்றார். மேலும் வழக்கின் விசாரணை வரும் 28ம் தேதி அதாவது நாளைக்கு ஒத்தி வைத்தார்.

அன்னக்கொடி படம் நாளை தான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

6 லட்சம் பாலோயர்களைக் கடந்தது கமல்ஹாஸன் பேஸ்புக் பக்கம்!

சென்னை: நடிகர் கமல்ஹாஸனின் பேஸ்புக் பக்கத்தில் அவரைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தைத் தாண்டியது. இதுவே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என கமல் ஒப்புதலளித்துள்ளார்.

இணைய வெளியை அதிகம் பயன்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாஸன். தன்னைப் பற்றிய செய்திகள், படங்களை இந்தப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

கமல் சார்பில் இந்த வேலைகளைச் செய்வது அவரது மய்யம் குழுதான்.

6 லட்சம் பாலோயர்களைக் கடந்தது கமல்ஹாஸன் பேஸ்புக் பக்கம்!

கடந்த மாதம், கமல்ஹாஸன் ட்விட்டரிலும் தனி பக்கம் தொடங்கியதாக செய்திகள் வெளியாக, அதை உடனே மறுத்திருந்தார் கமல். தனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்று தனது பிஆர்ஓ மூலம் அறிவித்தார்.

இந்த நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது கமலின் அதிகாரப்பூர்வ ஒரிஜினல் பேஸ்புக் பக்கம்தான் என்பதைக் குறிக்கும் வகையில், அந்தப் பக்கத்துக்கு நீல நிற டிக் மார்க் குறி போடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் கமல் ஹாஸன் என்ற பெயரில் பல பக்கங்கள் உள்ளன. அவற்றில் இதுதான் தனது ஒரிஜினல் பக்கம் என கமல் சான்றளித்துள்ளதால், அந்தப் பக்கத்துக்கு இந்த நீலக்குறியீடு தரப்பட்டுள்ளது.

 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் இன்று நடந்தது: திரையுலகம் வாழ்த்து!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர்.

அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம் இன்று நடந்தது: திரையுலகம் வாழ்த்து!  

இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவருமே திருமணத்துக்கு வந்திருந்தனர்.

இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கே பாக்யராஜ், பாலா, மணிரத்னம், ராஜீவ் மேனன், விஜய், புஷ்கர் - காயத்ரி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

நடிகர் சூர்யா திருமணத்துக்கு வந்து, தாலி கட்டி முடிக்கும் வரை அமர்ந்திருந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். மேலும் பூர்ணிமா பாக்யராஜ், கிரேஸி மோகன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஷோபா சந்திரசேகர், தனஞ்செயன், கமலா செல்வராஜ், எல் ஆர் ஈஸ்வரி, நித்யஸ்ரீ மகாதேவன், இசையமைப்பாளர் தேவா, சாந்தனு உள்பட பலரும் வந்திருந்தனர்.

இன்று மாலை இதே அரங்கில் மணமக்களுக்கு திருமண வரவேற்பு விமரிசையாக நடக்கிறது.

 

தனுஷை பார்த்து திருந்துவார்களா பாலிவுட் பாடிபில்டிங் நடிகர்கள்?

தனுஷை பார்த்து திருந்துவார்களா பாலிவுட் பாடிபில்டிங் நடிகர்கள்?

சென்னை: ராஞ்ஹனா ஹீரோ தனுஷை பார்த்து பாலிவுட் ஹீரோக்கள் திருந்துவார்களா?

பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும் பாலிவுட்டில் ராஞ்ஹனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற பாலிவுட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது படம் ரிலீஸான பிறகு வட இந்திய மீடியாக்களும், திரை விமர்சகர்களும் தனுஷை கொண்டாடுகிறார்கள்.

ஜிம் பாடியை காட்டுவதிலேயே குறியாக இருந்து முகபாவனைகள் பற்றி மறந்துவிட்ட பாலிவுட் நடிகர்கள் மத்தியில் தனுஷ் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் அருமை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் பெயர் வாங்க 6 பேக்கும், லுக்கும் தேவையில்லை நடிப்பு இருந்தால் புகழ் பெறலாம் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். இதைப் பார்த்து பிற நடிகர்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

 

சுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார் - கோச்சடையான் ரகசியங்கள்

சுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார்- கோச்சடையான் ரகசியங்கள்
சென்னை: கோச்சைடையான் படத்தில் ராட்சத சுறாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான். 3 டியில் வெளியாகும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறார்கள்.

அதே போல, படத்தின் ஸ்டில்கள், ட்ரைலர்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சி ரசிகர்களை மிரளவைக்கும் என கோச்சடையான் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோச்சடையானில் ரஜினி இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அப்பா கேரக்டர் பெயர் கோச்சடையான். மகன் பெயர் ராணா.

ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

சர்ச்சையை கிளப்ப ராம் கோபால் வர்மா கெளம்பிட்டாருய்யா, கெளம்பிட்டாருய்யா

ஹைதராபாத்: உத்தரகண்ட் வெள்ளம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வழக்கம் போல் வில்லங்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா என்றால் சர்ச்சைக்கு அவ்வளவு பிரியம். அவரும், சர்ச்சையும் இணை பிரியா இரட்டைப் பிறவிகள் போன்று. அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் எதையாவது அவர் கூற அது பெரும் சர்ச்சையாகிவிடும்.

இந்நிலையில் அவர் உத்தரகண்ட் வெள்ளம் பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் இருந்து கடவுள்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியவில்லை என்றால் பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.