பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி.

தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார்.

பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான் அவர் பெங்களூரில் இருக்கும் தகவல் பரவியது, உடனே அதிகாலையிலேயே அவரைச் சந்திக்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் வீட்டுக்கு முன் திரண்டனர்.

பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!

உடனே வெளியில் வந்த ரஜினி, பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவர், தலைவா தலைவா என்று வந்த கோஷத்தைப் பார்த்து ஒரு பறக்கம் முத்தம் அனுப்ப, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

பின்னர் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக, பத்திரமாகச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

கீழே இறங்கி வாசலுக்கு வந்த ரஜினியிடம் மீடியாக்காரர்கள் பேட்டி கேட்க, 'அதெல்லாம் வேண்டாமே. ச்சும்மா மக்களப் பார்க்க வந்தேன். பேட்டி வேண்டாம்,' என்றார். ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் உடனிருந்தனர்.

 

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷாதான் வேணும்னு அடம் பிடிச்சாங்க!- பிரஸ் மீட்டில் விஷால்

எத்தனையோ கவர்ச்சி நடிகை பீல்டில் இருந்தாலும், த்ரிஷாவின் அழகும் சிக்கென்ற தோற்றமும்தான் வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் இன்னும் ஒரு பெருங்கூட்டம் அடம் பிடிப்பதைப் பார்க்க முடிகிறது.

அதில் பெருசுங்க மட்டுமல்ல.. இளசுங்களும் சேர்த்திதான் (இதுவே த்ரிஷாவின் பெரிய சாதனைதான்)!

நட்சத்திர கிரிக்கெட் தூதராக நியமிக்க ஏராளமான நடிகைகள் பெயர்களை பரிசீலித்து கடைசியில் எல்லோரும் ஒரு மனதாக த்ரிஷாதான் வேண்டும் என்று முடிவு செய்து நியமித்துவிட்டார்கள்.

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷாதான் வேணும்னு அடம் பிடிச்சாங்க!- பிரஸ் மீட்டில் விஷால்

அதை தனது சென்னை ரைனோஸ் அணி வீரர்களுடன் வந்து பிரஸ் மீட்டில் அறிவித்தார் அந்த அணி கேப்டனான நடிகர் விஷால் (நோட் யுவர் ஆனர்... வரலட்சுமி வரல!)

அது ஏன் த்ரிஷா? என்று கேட்டதற்கு, "நானும் என் அணியும் மட்டுமல்ல.. ஸ்பான்சர்களும் த்ரிஷாவைத்தான் கேட்கிறாங்க... அதான்," என்று வெளிப்படையாகப் பேசினார் விஷால்.

சரி, எல்லாருமே புரஃபஷனலா விளையாட ஆரம்பிச்சிட்டீங்க.. உங்க டீம்லருந்து நம்ம இந்திய கிரிக்கெட் டீமுக்கு யாரை அனுப்பலாம் என்றதற்கு, "விக்ராந்த்" என்றார் கொஞ்சமும் யோசிக்காமல்.

 

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

பொதுவாக பத்திரிகையில் எழுதுகிறவர்கள் அல்லது பெரிய விமர்சகர்கள் ஒரு சினிமா இயக்குநராக ஜெயிப்பது இங்கு ரொம்ப கஷ்டம். ஓரிரு விதிவிலக்குகள் தவிர.

இணைய உலகில் வலைப்பூ ஆரம்பித்து சினிமா விமர்சனம் எழுதி வந்த கேபிள் சங்கர் என்பவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்துக்கு தொட்டால் தொடரும் என தலைப்பிட்டுள்ளார்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

இந்தப் படத்தை எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரித்துள்ளார். வீரசேகரன் படம் மூலம் அமலா பாலை தமிழ் திரையுலகுக்கு தந்த பெருமை இவருக்குத்தான் உண்டு.

தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

"ஐடி.யில் எச்ஆராக இருக்கும் ஒருவனுக்கும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் காதல், அதிலுள்ள பிரச்சினைகள்தான் கதை.

விமர்சகர்கள் படம் எடுத்து வெற்றி பெற முடியுமா ? என்ற கேள்வி உள்ளது.

"எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டு விட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்து இருக்கிறார்கள்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

நான் வெறும் விமர்சகன் என்று மட்டும் என்று சொல்லி விடவேண்டாம். நான் சினிமாவில் 15 ஆண்டுகள் இருக்கிறேன். நான் இதற்குத்தான் ஆசைப்பட்டேன். அனுபவமில்லாமல் இறங்கலாமா என்று என்னிடம் கேள்வி கேட்க முடியாது. எனக்கு எல்லா அனுபவங்களும் உண்டு.

எல்லாப் படங்களையும் விமர்சனம் செய்த என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும்.அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பல விஷயங்கள் விமர்சிக்க முடியாதபடி என் படம் இருக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் பேசுகையில், "ஐந்து படங்கள் தயாரிக்கிறேன். தகுதியான திறமையுள்ள பத்திரிகையாளர்களுக்குப் படவாய்ப்பு தருவேன்," என்றார்.

 

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

மலையாளத் திரையுலகையே கலக்கியிருக்கிறது ஒரு படத்தின் வெற்றி. அது மோகன் லால் நடித்த த்ரிஷ்யம்.

தொடர்ந்து சுமாரான படங்களை மட்டுமே கொடுத்த மோகன் லாலுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

இந்தப் படத்தின் வசூல் மூலம் மோகன் லாலின் கேரியரே அடுத்த கட்டத்துக்கு தாவிவிட்டதாக பாகத்ஸ் ஆபீஸ் புள்ளிகள் பேசிக் கொள்கிறார்கள்.

த்ரிஷ்யம் ஒரு குடும்ப த்ரில்லர். கேபிள் ஆபரேட்டராக வேலைசெய்யும் மோகன்லாலி மனைவி மீனா. இரண்டு மகள்கள்.

மிக நேர்மையான மனிதராக திகழும் மோகன்லால், யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் தீர்வு சொல்லிவிடுவார்.

ஆனால் தீவிர சினிமா மோகம் கொண்டவர். ஆனால் இந்த சினிமா மோகமே அவரது குடும்ப சிக்கலை எப்படித் தீர்க்கிறது என்பதுதான் சுவாரஸ்ய முடிச்சுகள் கொண்ட பின்பாதி.

மலையாளத் திரையுலகின் மெகா வெற்றிப் படம் த்ரிஷ்யம்!

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஜீத்து ஜோசப்.

சமீபத்தில் சென்னையில் இந்தப் படத்தைத் திரையிட்டபோது, தமிழ் சினிமாவின் பெரும்பாலான முக்கிய கலைஞர்கள் வந்து பார்த்து பிரமித்து வாழ்த்தினர்.

 

சேட்டையைத் தொடர்ந்து மீகாமன்னிலும் ஆர்யா ஜோடியாகும் ஹன்சிகா

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ‘மீகாமன்'. இப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, ஆர்யா-ஹன்சிகா ஜோடி சேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் பெரிதும் ரசித்ததால் மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

ஹன்சிகா தற்போது மான் கராத்தே, வாலு, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு தெலுங்குப் படங்களும் கைவசம் உள்ளது. இந்நிலையில், மீகாமன் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், கதாநாயகி முடிவாகி விட்டதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

சேட்டையைத் தொடர்ந்து மீகாமன்னிலும் ஆர்யா ஜோடியாகும் ஹன்சிகா

மீகாமன் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மகிழ்திருமேனி இரண்டொரு நா‌ட்களில் படத்தின் நாயகியை அறிவிப்பதாக தெ‌ரிவித்தார். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தும் நாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், ஆர்யாவின் அடுத்த நாயகி ஸ்ருதிஹாசன், ப்‌ரியா ஆனந்த் என பல பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், மீகாமன் படத்தின் கதை ஹன்சிகாவிடம் சொல்லப் பட்டதாகவும், த்ரில்லரான அக்கதையில் நாயகியின் கதாபாத்திரம் அவருக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லி விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

'பவர்' நடிகருக்கு இப்படி ஃபியூஸ் போயிடுச்சே!

சென்னை: பவர் நடிகர் சிறை சென்று திரும்பியதை அடுத்து பட வாய்ப்புகள் இன்றி தவிக்கிறாராம்.

பவர் நடிகர் சந்தன நடிகரின் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு முன்பு அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத திரையுலகம் அவரைத் தேடிச் சென்றது.

பவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் தான் அவர் பண மோசடி வழக்கில் கைதாகி டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளியே வந்தபோதிலும் அவருக்கு வாய்ப்புகள் அளிக்க ஆள் இல்லையாம். இதனால் அவர் மீண்டும் சந்தன நடிகரிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார்.

இந்த ஆளை நடிக்க வைத்தால் நம்ம மார்க்கெட்டை காலி பண்ணிடுவார் என்று நினைத்த சந்தன நடிகர் பவரை கை கழுவிவிட்டாராம். இதையடுத்து பவர் திரைப்பட கம்பெனிகளை நாடி வருகிறாராம். அவரை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு அவர் பாட்டுக்கு சிறைக்கு சென்றுவிட்டால் என்ன செய்வது என்று யாரும் வாய்ப்பளிக்க மாட்டேன் என்கிறார்களாம்.

ஒரே படத்தில் ஓஹோ என்று பேசப்பட்டு அந்த படத்தோடு மார்க்கெட் போன நடிகர் நானாகத் தான் இருப்பேன் என்று கூறி பவர் வருத்தப்படுகிறாராம்.

 

டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'

நடிகர் டேனியல் பாலாஜி முதல் முறையாக படம் இயக்குகிறார். குறோணி என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார்.

தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி.

டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி'

இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது டேனியல் பாலாஜி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதன் முறையாக இவர் இயக்கும் படத்திற்கு 'குறோணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் எம்ஆர் கணேஷ் தயாரிக்கிறார். இயக்குவதோடு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் டேனியல் பாலாஜி. நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் தற்போது ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தை எடுத்து முடித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 7ல் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை அடுத்து இந்நிறுவனம் 'குறோணி' படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்குகிறது.

 

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

ஷங்கர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சிறு தயக்கத்தால் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஏற்கெனவே நடித்தவர் ஜீவா.

அவர் அடுத்து விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்க ஆரம்பித்தபோது ஜீவாவையும் அழைத்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க சற்று தயங்கியுள்ளார் ஜீவா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நண்பன்' படம் முடிவந்தவுடன் சங்கர் சார் ‘ஐ' படம் எடுப்பதில் பிசியாக இருந்தார். அவர் ஏற்கனவே ஹீரோ கதாபாத்திரத்திரத்திற்கு விக்ரம் என்பதை தீர்மானித்துவிட்டார். பின்னர் விக்ரமுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொண்டார்.

ஷங்கர் பட வாய்ப்பை இப்படித்தான் இழந்தேங்க! - ஜீவா

இது வழக்கமான வில்லன் வேடம் அல்ல. எனவே அந்த கதாபாத்திரத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் உடனே பதில் சொல்லவில்லை.

‘சிங்கம் புலி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் இமேஜ் நினைத்து நான் கொஞ்சம் பயந்தேன். படம் வெளியானபோது எனது நடிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. அதுதான் இப்போது தயங்கினேன்.

ஷங்கர் சார் எனக்கு கொடுத்த வாய்ப்பை நிராகரித்த பின் அந்த வில்லன் வாய்ப்பு பாலிவுட் நடிகர் உபேன் படேல்-க்கு சென்றது," என்றார்.

 

ஏ ஆர் முருகதாசை கலங்க வைத்த கம்பன் கழகம்!

ஏ ஆர் முருகதாசை கலங்க வைத்த கம்பன் கழகம்!

கம்பன் கழகம் படம் பார்த்து கண் கலங்கினார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

இயக்குநர் ஏஆர் முருகதாசின் உதவியாளர் அஷோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் கம்பன் கழகம்.

க்யூ சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அஷோகன் தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புதுக்கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சிங்கமுத்து என பழகிய முகங்களும் உண்டு.

‘கம்பன் கழகம்' படத்தின் முதல் பிரதி தயாரான உடன், இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான அஷோகன், தன் குரு ஏ.ஆர்.முருகதாஸுக்கு படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார்.

ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘கம்பன் கழகம்' படத்தைப் பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இடைவேளையின் போதே கண்கள் கலங்க வெளியே வந்தார். ஒவ்வொரு காட்சிகளும் உருக்கமாகவும், மனசைத் தொடுமளவுக்கும் இருக்கின்றன என்று பாராட்டியவர், முழுப் படத்தையும் பார்த்த பிறகு ரொம்பவே உணர்ச்சி வயப்பட்டுவிட்டார்.

படம் குறித்து தன் சிஷ்யனிடம் முருகதாஸ் பேசுகையில், "கம்பன் கழகம் பார்த்த பிறகு 'எங்கேயும் எப்போதும்' சின்ன படம் போல் தோன்றுகிறது. புதுமுகங்களை வைத்துக் கொண்டு அந்தளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறீர்கள்," என்று பாராட்டினார்.

 

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

மாயாண்டி குடும்பத்தார் படத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அசலான தமிழ் குடும்பம் மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்திய படம் இது.

நல்ல வெற்றிப் படமும்கூட. இந்தப் படத்தை இயக்கிய ராசு மதுரவன், மேலும் சில படங்கள் தந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திடீரென புற்றுநோய்க்கு பலியானார்.

ஆனால் மரணத்துக்கு முன் அவர் தன்னையே பணயம் வைத்து தன் பாண்டிநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம் சொகுசுப் பேருந்து.

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

ஜானி - யுவன் - மனிஷா யாதவ் - சுவாதி நடித்துள்ள இந்தப் படம் நிறைவுறும் தருவாயில்தான் அவர் மரணத்தைத் தழுவினார்.

கஞ்சாகருப்பு, இளவரசு, சிங்கம்புலி, குருபரன், வெங்கல்ராவ், கிங்காங், தீப்பெட்டிகணேசன், அசத்தப் போவது யாரு ராஜ்குமார், போண்டாமணி, ஜெரால்டு, யோகி தேவராஜ்,ஜானகி, அவன் இவன் ராமராஜன், நந்தலாலா இவர்களுடன் ஒரு பாடல் காட்சியில் நிகோல் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, நந்தலால, முத்துவிஜயன், தமிழமுதன், கவிபாஸ்கர், அருண்பாரதி, பாடல்களுக்கு ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார்.

ராசுமதுரவன் இயக்கிய சொகுசுப்பேருந்து- அவர் மரணத்துக்குப் பிறகு வெளியாகிறது!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் அமரர் ராசு.மதுரவன் பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், பாண்டி ஒலி பெருக்கி நிலையம் போன்ற படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் அருமையான குடும்பப் பட இயக்குனர் என்று பெயரெடுத்த ராசு மதுரவன் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து சொகுசுப் பேருந்தை உருவாக்கி முடித்து விட்டு படம் வெளியாவதற்கு முன்பே இறந்து விட்டார்.

இந்தப் படத்தை அவரது நண்பர் ஸ்டில்ஸ் குமார் முன்னின்று வெளியிடும் வேலைகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!

உடலால் மறைந்தாலும் தனது வள்ளல்தன்மையால், கருணை மனதால் இன்றும் பல கோடி மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருப்பவர் அமரர் எம்ஜிஆர்.

அவரது வழியை இன்றும் பின்பற்றி பலருக்கும் உதவிகள் செய்யும் நல்ல உள்ளங்களைப் பார்க்க முடியும்.

நடிகர் மயில்சாமி ஒரு தீவிர எம்ஜிஆர் அபிமானி.. அதை விட பக்தர் என்று சொல்வதே சாலப் பொருந்தும். தன் நிலைமைக்கேற்ப உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.

'புரட்சித் தலைவர்' சொன்னதைச் செய்த மயில்சாமி!

நேற்று நடந்த, மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் சொகுசுப் பேருந்து பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி, பேச்சை விட செயல்தான் முக்கியம் என்பதை செயலால் காட்டினார்.

அவரை பேச அழைத்தபோது, "பேச்சைக் குறை.., முடிஞ்ச உதவியை முதலில் செய்.. நான் தெய்வமாக வணங்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கற்றுத் தந்தது இது. அந்த வகையில் ராசு மதுரவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வது, அறிவுரை சொல்வதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில் அவர் குடும்பத்துக்கு அவரவரால் என்ன உதவி செய்ய முடியுமோ.. அதை இப்போதே செய்யுங்கள். அதுதான் இப்போது அனைவரும் செய்ய வேண்டிய விஷயம்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரால்.. இதோ என்னால் ஆன தொகை ரூ 20000 ஆயிரத்தை அளிக்கிறேன்," என்று கூறிய மயில்சாமி, மேடையிலேயே அந்தப் பணத்தை ரொக்கமாக ஆர்கே செல்வமணியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

ஒருவர் மறைந்தாலும் அவரது குணங்கள் அவரைச் சார்ந்து இயங்குபவர்களிடம் இருந்தால், அவர் இன்னும் உயிரோடு இருப்பதாகவே அர்த்தம் என்பார்கள். எம்ஜிஆர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்!

 

ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா?- இயக்குநர் சேரன் வேதனை

சென்னை: எடுத்த படத்தை முதல் நாளே திருட்டுத்தனமாகப் போட்டுவிடுவதால் 90 சதவீதம் நஷ்டம் வருகிறது. விஞ்ஞானத்தை தடுக்க முடியாது. ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா? என வேதனை தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று அவர் எழுதியிருப்பது:

திடீர் மரணம் ஒரு குடும்பத்தை எவ்வளவு நிலை குலைய வைக்கும் என்பதை இன்று என் கண்முன்னே பார்த்தேன். எதிர்கால சிந்தனை இல்லாத வாழ்க்கை அபாயகரமானது...

ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா?- இயக்குநர் சேரன் வேதனை

இயக்குனர் ராசுமதுரவன் திடீரென இறந்துவிட்டார். இப்போது அவருடைய குடும்பத்தின் மீது அவர் திரைப்படம் எடுக்க வாங்கிய கடன் அசுரனை போல நின்று பயமுறுத்துகிறது.

எந்த விதமான கேரண்டியும் இல்லாத வாழ்க்கையே சினிமா வாழ்க்கை. எந்த தொழில் செய்தாலும் இவ்வளவு முதலீடு செய்தால் இவ்வளவு மிஞ்சும் என்ற கணக்கு உண்டு. சினிமாவில் மட்டும் அது கனிக்கமுடிவதே இல்லை.

ஒரு சில நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் தவிர பெரும்பாலோனோர் என்ன கிடைக்கும் எப்படி வாங்கிய கடன் அடையும் என்று தெரியாமலேயே திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை... (நான் உள்பட). ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் நிறைய பேருக்கு சினிமா கொட்டிக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலேதான் சினிமாக்காரர்கள் என்றால் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

படம் எடுத்தவன் நிலை தெரிந்தால் எந்த மனிதனும் படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைன், விசிடி, டிவிடி இவைகளில் வெளியிடவோ பார்க்கவோ மாட்டார்கள்.

வெளியாகி ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் மட்டுமே போட்ட காசு திரும்ப வரும், தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு போகும் என்ற நிலையில்தான் எல்லா படமும் வெளியாகிறது.

இதில் 90% நஷ்டமே வருகிறது. காரணம் முதல் நாளே எதோ ஒரு வழியில் திருட்டுத்தனமாக படம் போடும் கூட்டம் அதிகமாக இருப்பதே காரணம்.. அதே நேரம் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்கவும் முடியாது.

என்ன செய்யலாம்...ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா???

-இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் சேரன். நேற்று நடந்த ராசு மதுரவன் பட நிகழ்ச்சியிலும் தனது குமுறலை வெளிப்படுத்தினார் அவர்.

 

'ஆன்ட்டி' என்ற ஹீரோ: அதிர்ந்து போய் ஓடிய சீனியர் ஹீரோயின்

சென்னை: மூனுஷா நடிகையை இளம் ஹீரோ ஒருவர் ஆன்ட்டி என்று அழைத்து அதிர வைத்துள்ளாராம்.

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் மூனுஷா. அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்தாலும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால் அவர் இளம் ஹீரோக்கள் மற்றும் புதுவரவுகளுடன் ஜோடி சேர அடிபோடுகிறாராம். பெரிய நடிகர்கள் யாரும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லையாம்.

இந்நிலையில் 2 வாரிசு நடிகர்களிடம் நட்பாக பேசிய நடிகை திடீர் என்று அவர்களுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஒரு வாரிசு நடிகர் ஆன்ட்டி நீங்கள் என் அப்பாவுக்கேத்த ஜோடி எனக்கில்லை. நான் சின்ன பையன் ஆன்ட்டி என்று கூறியுள்ளார். தன்னை ஒரு ஹீரோ ஆன்ட்டி என்று அழைத்ததை கேட்ட நடிகை அதிர்ந்து ஓடிவிட்டாராம்.

இந்த ஆன்ட்டி சம்பவத்தை அடுத்து நடிகை இளவட்ட நடிகர்களை பார்த்தாலே தள்ளி இருக்கிறாராம்.

 

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

இளையராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி பற்றிய சுவாரஸ்ய செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை தினசரி பல விவிஐபிகள் வந்து பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளி ஓவியர்களான பாலு மகேந்திராவையும் பிசி ஸ்ரீராமையுமே பிரமிக்க வைத்திருக்கின்றன ராஜா எடுத்த பல புகைப்படங்களின் ஒளி அமைப்பும், கோணங்களும்.

இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!

இத்தனைக்கும் இவற்றையெல்லாம் ராஜா தன் காரில் அமர்ந்தபடிதான் எடுத்திருக்கிறார், பழைய பிலிம் கேமராவில். டிஜிட்டல் கேமராவை அவர் தொடுவதே இல்லையாம்.

நேற்று முன்தினம் கண்காட்சிக்கு வந்திருந்த இயக்குநர் பாலா, ராஜாவின் போட்டோக்களைப் பார்த்து வியந்து போய், கண்காட்சி பொறுப்பாளரிடம் அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டுக் கொண்டே வந்தாராம்.

ஒரு போட்டோவைப் பார்த்ததும், 'இது கிடைக்குமா' என்றாராம். 'கண்காட்சிக்காக வைத்திக்கிறார்கள்' என பொறுப்பாளர் சொல்ல, "இல்லை நீங்க அந்தப் பக்கம் போனதும் திருடிட்டுப் போகலாம்னு தோணுது" என்றாராம் பாலா, சீரியஸாக!

 

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் 2014ம் ஆண்டுக்கான ‘சாரல் விருது - 2014' கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

சாரல் விருது என்பது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் விருதாகும்.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இந்த விருதுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையாகவும், நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை எனும் இலக்கிய வகைகளைத் தாங்கி நிற்கும் தமிழன்னையை உருவகப்படுத்தும் இலக்கியா எனும் அழகிய வெண்கலச் சிற்பமும் பரிசாக வழங்கப்படும்.

இந்த அறக்கட்டளை சார்பில் திரைப்பட இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இவ்விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை சென்ற ஆண்டு எழத்தாளர் பிரபஞ்சன் பெற்றார். இந்த ஆண்டு கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இந்த விருது விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட்டில், 25.1.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இந்த விருது விழாவில், 'நக்கீரன்' வாரமிருமுறை ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், ஜெடி -ஜெர்ரி, நடிகை ரோகிணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது

இதுவரை விருது பெற்றவர்கள்...

திலீப்குமார்(2009), கவிஞர் ஞானக் கூத்தன் (2010), அசோகமித்திரன் (2011), வண்ணநிலவன், வண்ணதாசன்(2012), பிரபஞ்சன்(2013), கவிஞர் விக்கிரமாதித்யன் (2014)

 

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்- இஸ்லாமிய மத குருக்கள் கூட்டறிக்கை!

மும்பை: நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் சல்மான்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு இஸ்லாமிய மதகுருக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக மாறியுள்ளார் நடிகர் சல்மான்கான். குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. தனது செயலுக்கு சல்மான் அளித்த விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்- இஸ்லாமிய மத குருக்கள் கூட்டறிக்கை!

இந்நிலையில் இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பை வெளயிட்டார்கள்.

அதில், "குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான்கான் கூறி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்களின் உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார். எனவே சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்.

நரேந்திர மோடி தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக எதையும் செய்வார். இது சல்மான்கானுக்கு தெரியுமா? குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா?," என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 

அவருக்கு 30; எனக்கு 25.. வேறென்ன, கோடிகள்தான்!

இந்த ஒரு ஜான் வயித்துக்கு மிஞ்சிப் போனா நாலு இட்லி தேவை. அவ்ளோதாங்க வாழ்க்கை. அதுக்கு மேல நான் ஆசைப்படறதில்லே, என்று பொது மேடையில் பேசி வியக்க வைத்த தாஸ் இயக்குநர் இப்போது கேட்கும் சம்பளத்தைக் கேட்டு வாயடைத்து நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஜில்லா நடிகரை வைத்து அவர் அடுத்து இயக்கும் புதுப் படத்துக்கு கேட்ட சம்பளத்தில் நான்கு மீடியம் பட்ஜெட் படங்களே எடுத்துவிடலாம்.

ஹீரோவுக்கு எப்படியும் ரூ 30 கோடி வரை கொடுக்கப் போறீங்க. ஆனா படத்துக்கு மெயின் இயக்குநரான நான்தான். அதனால எனக்கு ஒரு 25 கோடி கொடுத்துடுங்க. பிரமாதமா எடுத்துடலாம் படத்தை என்றாராம் தயாரிப்பாளர்களிடம்.

'ஏங்க, நாங்களே நொந்து நஞ்சி போய்... இப்போதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கிறோம்.. பாத்து கேளுங்க... ஒரு 18 கோடி வச்சிக்குங்க என்று பேரம் பேச, மூணு வருஷத்துக்கு முந்தி நான் வாங்கின சம்பளமாச்சே அது என முகவாயைத் தடவுகிறாராம் இயக்குநர்!

 

குஷ்புவின் புது ஆடி கார் பின்பக்கத்தை நொறுக்கிய மாநகரப் பேருந்து!

சென்னை: நடிகை குஷ்புவின் புதிய ஆடி க்யூ5 காரின் பின்பக்கம் மீது மோதியது மாநகரப் பேருந்து. இதில் அந்தக் காரின் பின்பக்கம் அப்பளமாக நொறுங்கியது.

குஷ்புவுக்கு அவர் கணவர் இயக்குநர் சுந்தர் சி பரிசாகக் கொடுத்த கார் இந்த ஆடி க்யூ 5.

இந்தக் காரில் நேற்று பயணம் செய்த குஷ்பு, ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்தி, பச்சை விளக்குக்காகக் காத்திருந்தார்.

குஷ்புவின் புது ஆடி கார் பின்பக்கத்தை நொறுக்கிய மாநகரப் பேருந்து!

அப்போது சற்று வேகமாக வந்த மாநகரப் போருந்து டமால் என குஷ்பு காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அந்தக் காரின் பின்பக்கம் நொறுங்கியது. பின் பக்க விளக்குகள் அனைத்தும் நொறுங்கின. காரின் பம்பர் போன்றவையும் நசுங்கின.

இந்த விபத்து குறித்து தனது ட்விட்டரில் குஷ்பு கூறுகையில், "வாவ்.. என்னா ஒரு இடி.. சிக்னலில் ரெட் லைட்டுக்காகக் காத்திருந்த போது மாநகரப் பேருந்து என் கார் மீது ஒரு சிக்ஸ் அடித்தது போல மோதி, பின்பக்க விளக்குகள், பம்பரைப் பதம் பார்த்துவிட்டது. அடுத்து என்ன... அந்த ட்ரைவர் எனக்கு அட்வைசும் எச்சரிக்கையும் கொடுத்துவிட்டுப் போகப் போகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "காரை இடித்ததும் முதல் வேலையாக பஸ் நம்பர் பிளேட் மற்றும் ரூட் பிளேட்டை நீக்கிவிட்டார்கள். ட்ரைவரிடம் லைசென்ஸ் கூட இல்லை. யாரும் இதெல்லாம் கேட்பதில்லை என்கிறார்கள். ஏன்? நாம் இப்படி வந்தால் அனுமதிப்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"எனக்கு ஒன்றுமில்லை, நலமாக உள்ளேன். ஆனால் இந்தக் கார் என் கணவர் சுந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தது. அதை இப்படி நொறுக்கிவிட்டதை நினைத்து என் இதயம் ரத்தம் வடிக்கிறது. விபத்து குறித்து அறிந்ததும் என்னை நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி", என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த புதுமுக ஹீரோயின் இருக்குல..: போட்டுக் கொடுக்கும் நடிகை

சென்னை: மீன் பெயரில் வரும் படத்தில் அறிமுகமாகும் நடிகை புதுசு எல்லாம் கிடையாது அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்தவர் என்று போட்டுக் கொடுத்து வருகிறாராம் ஊதா கலரு ரிப்பன்.

இளைய திலகத்தின் மகனை வைத்து யானை பெயரில் படம் எடுத்த அந்த இயக்குனர் தற்போது மீனை குறிக்கும் 3 எழுத்தில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சந்தோஷம் என்பதை குறிக்கும் பெயர் கொண்ட 4 எழுத்து நடிகையை அவர் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். இந்த நடிகையை நானே தேடிப் பிடித்து நடிக்க அழைத்து வந்தேன். அவர் சினிமாவுக்கு புதுசு என்றார் இயக்குனர்.

இந்நிலையில் ஊதா கலரு ரிப்பனோ பார்ப்பவர்களிடம் எல்லாம் அந்த நடிகையைப் பற்றி வேறு விதமாக கூறி வருகிறார். அந்த நடிகை ஒன்றும் இயக்குனர் கூறுவது போன்று புதுசு எல்லாம் கிடையாது. அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் தான் என்று கூறுகிறார் ஊதா கலரு ரிப்பன்.

தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான போட்டியும், பொறாமையும் தான் ஊதா கலரு ரிப்பன் இப்படி கூறி வருவதற்கு காரணமாம். எங்கே தமிழில் தன்னை விட அவர் பெரிய நடிகையாகிவிடுவாரோ என்ற பயமும் ஒரு காரணமாம்.

 

விஷால், நாசர், சந்தானத்துக்கு அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதங்கள்

சென்னை: நடிகர்கள் விஷால், நாசர், சந்தானம் மற்றும் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்து நாசர் கூறுகையில், "எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம்.

விஷால், நாசர், சந்தானத்துக்கு அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதங்கள்

இன்னும் சிலருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன். இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்," என்றார்.

சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இதுபோல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய சம்பந்தப்பட்ட நடிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

 

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

சென்னை: எனக்கு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி என்று பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வென்றவர்களில் பலர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், குறிப்பாக தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல், வைரமுத்து, விநாயக்ராம் போன்றோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள சந்தோஷ் சிவன், "பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு எனது நன்றி. என்னை இந்த விருதிற்காக பரிந்துரை செய்த பூனேவிலிருக்கும் திரைப்படக் கல்லூரிக்கு என் நன்றிகள்," என்று கூறியுள்ளார்.

 

மார்ச் 2 முதல் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே 2!

மார்ச் 2 முதல் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே 2!

சத்யமேவ ஜெயதே.. ஏராளமான பாராட்டுகளையும் அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்த தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி இது. 2012-ல் ஆமீர் கான் இதனை நடத்தினார்.

ஒரு ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொடர்கிறார் ஆமீர். இந்த முறை முற்றிலும் புதிய வடிவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, ஸ்டார் ப்ளஸ்ஸில்.

முந்தைய நிகழ்ச்சியில் பெண் சிசுக் கொலை, சாதிக் கொடுமைகள், குழந்தை வதை, குடும்ப வன்முறை போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அதிரவைக்கும் பல உண்மைகளை மக்களிடம் கொண்டு போனார் ஆமீர் கான்.

இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்புக்கு நிகராக விமர்சனங்களும் கிளம்பின. குறிப்பாக சாதிய கொடுமைகள் குறித்த நிகழ்ச்சியில், அந்த கொடுமைகள் ஒழிக்கப்பட்டதில் அண்ணல் அம்பேத்கர் பங்கு குறித்து எதையுமே ஆமீர் சொல்லவில்லை என்று கூறப்பட்டது.

மேலும் தலித் மக்களின் மீதான் கொடுமைகளை, ஒரு பிராமணரின் பார்வையிலிருந்து அவர் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இப்போது இரண்டாவது சீஸனை வரும் மார்ச் 2ம் தேதி ஆரம்பிக்கிறார் ஆமீர் கான்.

ஒவ்வொரு சமூகப் பிரச்சினை தொடர்பான விவாதத்தையும் நான்கு எபிசோடுகளாக பிரித்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ யுட்யூபில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

சென்னை: இயக்குநரும் திமுக பிரமுகருமான டி ராஜேந்தரின் மகள் இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடக்கிறது.

மணமகன் பெயர் அபிலாஷ் ‘பி.டெக்.' பட்டதாரி. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

இலக்கியா-அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10-ந்தேதி காலை 9 மணிக்கு, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு அதே ஓட்டலில் நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

 

கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!

இசைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி விருது' வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது.

கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!

'ஸ்லம்டாக் மில்லினியர்' படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்த கிராமி விருதினை ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இவ்விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்' மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார்.

 

சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா!

சென்னை: விஜய் இயக்கும் சைவம் படத்தில் அறிமுகமாகிறார் நாசர் - கமீலா தம்பதியின் மகன் பாஷா என்கிற குட்டு.

தலைவா படத்துக்குப் பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் ஏஎல் விஜய்.

படத்தின் தலைப்புக்கு மெனகெட்டதைப் போலவே, தனது படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்டவும் மெனக்கெட்டார்.

சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா!

பல்வேறு பெயர்களைப் பரிசீலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் சூட்டியுள்ளார்.

குட்டு (Guddu) என்று செல்லமாக அழைக்கப்படும் 'பாஷா' அறிமுக படத்திலேயே இயக்குநரை பாராட்டு பத்திரம் வாசிக்க வைக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு பாத்திரம் இருக்கும். நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமல்ல, அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர்.

என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம். அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாகத் தெரிந்தார். நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன்.

அவரை காமிராவில் பார்த்த போது 'நாயகன்' நாசரை நினைவுப்படுத்தினார். அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க அவரது திறமையும், கண்ணியமும், என்னை மிகவும் கவர்ந்துவிட்டது," என்றார்.

 

நயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு!

நயன்தாராவுக்கு சீக்கிரமே தாலி கட்டப் போகிறார் சிம்பு. இது நிஜத்தில் நடக்குமா இல்லையா என்பது தெரியாது... ஆனால் சினிமாவில் நடக்கவிருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு இந்து முறைப்படி சிம்பு தாலி கட்டுவது போன்ற காட்சியை எடுக்கிறார்களாம்.

நயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு!

ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் சர்ச்சில் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டு, அதையே நயன்தாரா - ஆர்யா திருமணம், முதலிரவு என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்து பரபரக்க வைத்தார்கள்.

இந்த முறை, சர்ச்சுக்கு பதில் இந்து கோவில் ஒன்றில் சிம்பு - நயன் திருமண காட்சியை எடுக்கப் போகிறார்களாம். அனுமதி கிடைக்காவிட்டால் செட் போட்டு படமாக்கத் திட்டமாம்.

சிம்புவும் நயன்தாராவும் முன்னாள் காதலர்களாக இருந்து, ஒரு பெரிய சண்டை - பிரிவுக்குப் பிறகு இப்போது திரையில் மட்டும் இணைந்துள்ளனர்.

 

விக்ரம் என்னதான் பண்றார்?

விக்ரம்... கமலுக்கு நிகராக வருவார் எனப் பேசப்பட்ட நடிகர். இப்போதும் கமலைப் போன்ற திறமைசாலியாக இருந்தும், அடிக்கடி அவர் எடுத்துக் கொள்ளும் நீண்ட இடைவெளி காரணமாக ரசிகர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து வேகமாக படம் பண்ண வேண்டும்... ரிலீஸ் பண்ண வேண்டும் அவர் நினைத்தாலும் அதெல்லாம் நடப்பதில்லை.

விக்ரம் என்னதான் பண்றார்?

இந்த நிலை அவருக்கு அந்நியனில்தான் ஏற்பட்டது. அந்தப் படம் வெளியாக இரண்டு முழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அடுத்தடுத்து படங்கள் பண்ண அவர் முடிவு செய்த நேரத்தில் பீமாவில் மாட்டிக் கொண்டார்.

இல்லை.. இனி இப்படி நடக்காது என அறிவித்துவிட்டு, மீண்டும் அவர் சிக்கியது கந்தசாமியில். கன்னித்தீவு கதை மாதிரி இழுத்துக் கொண்டே போன அந்தப் படம் ஒருவழியாக ரிலீசானபோது, விக்ரமுக்கு வயது ஏறியதுதான் மிச்சம். படம் கெட்டபெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தது.

தெய்வத் திருமகள், தாண்டவம் என அடுத்தடுத்து படம் பண்ணவர், மீண்டும் ஷங்கரின் பிரமாண்டத்தில் சிக்கியுள்ளார். 2012-லிருந்து விக்ரமுக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஐ படம் ஏப்ரலில் வருமா... மேயில் வருமா என்று தெரியவில்லை. பிப்ரவரி இறுதியில்தான் படப்பிடிப்பே முடியும் என்கிறார்கள்.

அடுத்து என்ன செய்யப்போகிறார்?

மீண்டும் தரணியுடன் கைகோர்க்கிறார் விக்ரம். ஷங்கர் படத்துக்காக உடம்பைக் குறைத்து நோஞ்சானாக மாறியவர், இப்போது தரணி படத்துக்காக இயல்பான நிலைக்குத் திரும்பப் போகிறார்.

 

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

பெங்களூர்: தமிழில் வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கன்னட மொழியில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் கன்னட திரையுலகினர்.

ஒரிஜினல் கன்னட படங்களைவிட டப்பிங் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூல் குவித்து வருவது, கன்னட திரையுலகினரால் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ் குமார், பாரதி, ரவிச்சந்திரன், ஸ்ரீநாத், சசிகபூர், ஜெகேஷ், ஷரண், கவுரவ்கிரன், நடிகைகள் பூஜாகாந்தி, ராதிகா பண்டிட் மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

இன்று ஸ்ட்ரைக்

அதன்படி இன்று கன்னட திரையுலகினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் இன்று காலை திரண்டனர். அங்கிருந்து மத்திய கல்லூரி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றார்கள்.

அப்போது வேற்று மொழி படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு கன்னட சாகித்ய பரிஷத், கன்னட டெவலப்மென்ட் அத்தாரிட்டி, கன்னட கலாசார அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்து உள்ளன. கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 

கோலி சோடா பட - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கிஷோர், முருகேஷ், சாந்தினி, சீதா, பாண்டி, ஸ்ரீராம், மதுசூதன், விஜயமுருகன், சுஜாதா, இமான் அண்ணாச்சி

இசை: எஸ் என் அருண்கிரி

பின்னணி இசை: சீலின்

மக்கள் தொடர்பு: ஜான்சன்

வசனம்: பாண்டிராஜ்

தயாரிப்பு: லிங்குசாமி

ஒளிப்பதிவு - இயக்கம்: விஜய் மில்டன்

பெரிய நடிகர்கள், பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல் ஒரு கச்சிதமான படம் தந்திருக்கிறார்கள். கதையின் அடிப்படை சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தை உருவாக்கிய விதம், சீட்டோடு இறுக கட்டிப் போடுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவர்கள் புள்ளி (கிஷோர்) சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ் ), சேட்டு (ஸ்ரீராம்) ஆகிய நான்கு பெரிய சிறுவர்கள்.

கூடுதலாக சுஜாதாவின் உதவியுடன் ஆச்சி மெஸ் என்ற சிறு உணவகத்தை நடத்துகிறார்கள். கடைக்கு சொந்தக்காரரான நாயுடு மார்க்கெட்டிலேயே பெரிய தாதா. ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடகைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

தங்களுக்கான அடையாளமாக இந்த உணவகத்தை நினைக்கும் நால்வரும், அதை மிகவும் ஈடுபாட்டுடன் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் இரவு நாயுடுவின் மச்சான் மயிலு உணவகத்துக்கு வந்து, இரவு முழுக்க குடித்து, நண்பர்களுடன் கூத்தடித்து, பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கற்பழித்து அராஜகத்தின் உச்சத்துக்கே போகிறான்.

இதையெல்லாம் பார்த்து கொந்தளிக்கும் நான்கு பையன்களும் மயிலுவை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். நாயுடுவுக்கு இது கவுரவப் பிரச்சினையாகிவிட, நான்கு பையன்களையும் மீண்டும் மெஸ் எதிரில் வைத்து தாக்கினால்தான் தன் மரியாதை காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் என்று கூறி, தாக்க ஆளனுப்புகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

இந்த சண்டையில் மயிலு மற்றும் அவன் கூட்டாளிகளை கடுமையாகத் தாக்கிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆத்திரமடைந்த நாயுடு, பையன்களை கடுமையாகத் தாக்கி, நால்வரையும் பிரித்து நான்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிடுகிறார்.

இந்தப் பையன்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. தங்கள் அடையாளத்தை மீட்டார்களா என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

படம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டு பெரிய மைனஸ்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒன்று என்னதான் இந்தப் பையன்கள் தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று போராடினாலும், கடைக்கு உரிமையாளர் நாயுடுதானே. அவருக்கு சொந்தமான கடையில் போய் தங்கள் உரிமையை, அடையாளத்தைக் கேட்பது நியாயமில்லையே.

கோலி சோடா பட - விமர்சனம்

இரண்டாவது, பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை கரெக்ட் பண்ணுவது, காதலிப்பது என வரும் காட்சிகள்.

இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், கோலி சோடா நன்றாகத்தான் வந்திருக்கிறது.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் கோயம்பேட்டிலேயே புரண்டு எழுந்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் அத்தனை நிஜம் தெரிகிறது.

சுஜாதாவின் மகளாக வரும் சாந்தினி, ஏடிஎம் பாத்திரத்தில் வரும் சீதா, ஆச்சியாக வரும் சுஜாதா ஆகியோர் கொஞ்சமும் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளனர்.

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குபவர் இமான் அண்ணாச்சி. குறிப்பாக அந்த காவல் நிலைய காட்சி.

கோலி சோடா பட - விமர்சனம்

படத்தில் இரு பாத்திரங்கள் மிரள வைக்கின்றன. அத்தனை இயல்பான நடிப்பு. ஒருவர் நாயுடுவாக வரும் மதுசூதன். இன்னொருவர் மயிலாக வரும் ஆர்கே விஜய் முருகன். இருவருக்குமே இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும்.

அருண கிரியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் சீலினின் பின்னணி இசை படத்தின் வேகத்தை காப்பாற்ற உதவுகிறது. பாண்டிராஜின் வசனத்துக்கு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்குண்டு!

கோயம்பேட்டை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. அவரது திரைக்கதையும் காட்சிகளை சமரசமில்லாமல் எடுத்த விதமும் படத்தை வெற்றிக் கோட்டைத் தொட வைத்துள்ளன.

 

கோலி சோடா பட - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கிஷோர், முருகேஷ், சாந்தினி, சீதா, பாண்டி, ஸ்ரீராம், மதுசூதன், விஜயமுருகன், சுஜாதா, இமான் அண்ணாச்சி

இசை: எஸ் என் அருண்கிரி

பின்னணி இசை: சீலின்

மக்கள் தொடர்பு: ஜான்சன்

வசனம்: பாண்டிராஜ்

தயாரிப்பு: லிங்குசாமி

ஒளிப்பதிவு - இயக்கம்: விஜய் மில்டன்

பெரிய நடிகர்கள், பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல் ஒரு கச்சிதமான படம் தந்திருக்கிறார்கள். கதையின் அடிப்படை சற்று பலவீனமாக இருந்தாலும், படத்தை உருவாக்கிய விதம், சீட்டோடு இறுக கட்டிப் போடுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவர்கள் புள்ளி (கிஷோர்) சித்தப்பா (பாண்டி), குட்டிமணி (முருகேஷ் ), சேட்டு (ஸ்ரீராம்) ஆகிய நான்கு பெரிய சிறுவர்கள்.

கூடுதலாக சுஜாதாவின் உதவியுடன் ஆச்சி மெஸ் என்ற சிறு உணவகத்தை நடத்துகிறார்கள். கடைக்கு சொந்தக்காரரான நாயுடு மார்க்கெட்டிலேயே பெரிய தாதா. ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடகைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

தங்களுக்கான அடையாளமாக இந்த உணவகத்தை நினைக்கும் நால்வரும், அதை மிகவும் ஈடுபாட்டுடன் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் இரவு நாயுடுவின் மச்சான் மயிலு உணவகத்துக்கு வந்து, இரவு முழுக்க குடித்து, நண்பர்களுடன் கூத்தடித்து, பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கற்பழித்து அராஜகத்தின் உச்சத்துக்கே போகிறான்.

இதையெல்லாம் பார்த்து கொந்தளிக்கும் நான்கு பையன்களும் மயிலுவை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். நாயுடுவுக்கு இது கவுரவப் பிரச்சினையாகிவிட, நான்கு பையன்களையும் மீண்டும் மெஸ் எதிரில் வைத்து தாக்கினால்தான் தன் மரியாதை காப்பாற்றப்பட்டதாக அர்த்தம் என்று கூறி, தாக்க ஆளனுப்புகிறார்.

கோலி சோடா பட - விமர்சனம்

இந்த சண்டையில் மயிலு மற்றும் அவன் கூட்டாளிகளை கடுமையாகத் தாக்கிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆத்திரமடைந்த நாயுடு, பையன்களை கடுமையாகத் தாக்கி, நால்வரையும் பிரித்து நான்கு வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவிடுகிறார்.

இந்தப் பையன்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா.. தங்கள் அடையாளத்தை மீட்டார்களா என்பது சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.

படம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டு பெரிய மைனஸ்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒன்று என்னதான் இந்தப் பையன்கள் தங்களுக்கு அடையாளம் வேண்டும் என்று போராடினாலும், கடைக்கு உரிமையாளர் நாயுடுதானே. அவருக்கு சொந்தமான கடையில் போய் தங்கள் உரிமையை, அடையாளத்தைக் கேட்பது நியாயமில்லையே.

கோலி சோடா பட - விமர்சனம்

இரண்டாவது, பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை கரெக்ட் பண்ணுவது, காதலிப்பது என வரும் காட்சிகள்.

இந்த இரண்டையும் தவிர்த்துப் பார்த்தால், கோலி சோடா நன்றாகத்தான் வந்திருக்கிறது.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகிய நான்கு சிறுவர்களும் கோயம்பேட்டிலேயே புரண்டு எழுந்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் அத்தனை நிஜம் தெரிகிறது.

சுஜாதாவின் மகளாக வரும் சாந்தினி, ஏடிஎம் பாத்திரத்தில் வரும் சீதா, ஆச்சியாக வரும் சுஜாதா ஆகியோர் கொஞ்சமும் மிகையில்லாத நடிப்பைத் தந்துள்ளனர்.

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குபவர் இமான் அண்ணாச்சி. குறிப்பாக அந்த காவல் நிலைய காட்சி.

கோலி சோடா பட - விமர்சனம்

படத்தில் இரு பாத்திரங்கள் மிரள வைக்கின்றன. அத்தனை இயல்பான நடிப்பு. ஒருவர் நாயுடுவாக வரும் மதுசூதன். இன்னொருவர் மயிலாக வரும் ஆர்கே விஜய் முருகன். இருவருக்குமே இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும்.

அருண கிரியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் சீலினின் பின்னணி இசை படத்தின் வேகத்தை காப்பாற்ற உதவுகிறது. பாண்டிராஜின் வசனத்துக்கு படத்தின் வெற்றியில் முக்கியப் பங்குண்டு!

கோயம்பேட்டை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறது விஜய் மில்டனின் கேமரா. அவரது திரைக்கதையும் காட்சிகளை சமரசமில்லாமல் எடுத்த விதமும் படத்தை வெற்றிக் கோட்டைத் தொட வைத்துள்ளன.

 

"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சம

சென்னை: ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்.. எங்களுக்குள் அந்த புரிதல் உள்ளது, என்றார் கமல்ஹாஸன்.

சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கவுரவம் கிடைத்தாலும் உடனடியாக அதில் பங்கேற்கும் உன்னதமான நண்பர்களாகத் திகழ்கின்றனர்.

கடந்த முறை விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, ரூ 100 கோடியைக் கொட்டி படமெடுத்துவிட்டு, அதை வெளியிட முடியாத சூழலில் உள்ள கமலின் தவிப்பை நினைத்து மனம் கலங்குகிறேன், என அறிக்கை வெளியிட்டவர் ரஜினி.

கமல் பிறந்த நாள் அல்லது அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான் வரும்.

இப்போது கமல் பத்மபூஷண் விருது பெற்றிருப்பதால், அதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்று நிருபர்கள் கமலிடம் கேட்டனர்.

அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தினாலும் எனக்கு ஒன்றே. அவருக்கும் நான் அப்படியே. எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது! அவர் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்," என்றார்.

 

தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் - வைரமுத்து

தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் -  வைரமுத்து

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்டுள்ளது.

கலை, இலக்கிய பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமைமிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும், உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.

இது இட்டுகொள்வதற்கான பட்டம் அல்ல, பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல, பயணப்பாதையில் இளைப்பாறி கொள்ளும் ஒரு பாலைவன சோலை, சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன்.

கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளை தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்து சென்ற தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

 

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

பத்மபூஷண் விருது பெறவிருக்கும் நடிகர் கமல் ஹாஸனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ராஜராஜ சோழனின் போர்வாள் படக் குழுவினர்.

தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுபவர் கமல் ஹாஸன். விருதுகள் அவருக்குப் புதிதல்ல.

இந்த ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதுமே, கோடம்பாக்கமே கமலுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படக் குழு கமலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தது.

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

படத்தின் நாயகன் பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஆர் எஸ் அமுதேஸ்வர் ஆகியோர் கமலுக்கு மாலை அணிவித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா!

சென்னை: எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா!

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்.

 

ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கோ கிரீன் என்ற நிகழ்ச்சியை ஸ்ரீ சங்கரா டிவி ஒளிபரப்புகிறது.

கோ கிரீன்'' என்ற தலைப்பு நமக்கு இரண்டு விஷயங்களைப்பற்றி கூறுகின்றது. அதாவது, ‘‘கோ'' என்றால் பசு மற்றும் ‘‘கிரீன்'' என்றால் ‘‘பச்சை'', அதாவது ‘‘சைவ உணவு முறை.''

ஸ்ரீ சங்கரா டிவியில் பசுவை பாதுகாக்கும் ‘கோ கிரீன்’

சைவ உணவு முறையை ஆங்கிலத்தில் ‘‘வெஜிடேரியனிசம்'' என்பர். லத்தின் மொழியின் ‘‘வெஜிடஸ்'' என்ற வார்த்தையிலிருந்து நிறுவப்பட்ட ‘‘வெஜிடேரியனிசம்'' என்பதன் பொருள். நாம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். சைவ உணவு முறையை பின்பற்றி வாழ்வதே மனித குலத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதுவே நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.

பண்டைய காலத்து இந்தியர்களின் உணவு முறை அகிம்சையை பின்பற்றி உருவாக்கப்பட்டது. அவர்கள் மற்ற விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது மட்டுமல்லாமல், பசுவை காப்பதிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். மனித நேயம், மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், ஆன்மிகம் என பல துறைகளுடன் ‘‘கோ சம்ரஷணம்'' சம்பந்தப்பட்டுள்ளது.

பண்டைய காலத்து சைவ உணவு முறை மற்றும் கோ சம்ரஷணம் அதாவது பசுவை பாதுகாத்தல் என்கின்ற இவ்விரண்டு விஷயங்களையும் நேயர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அழிந்து வரும் இயற்கை வளங்களைப்பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும்.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, ‘‘கோ கிரீன்.''

 

ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்

ஜீ தமிழ் டிவியில் கேம் ஷோ ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக வந்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சின்னத்திரை நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி கேம் ஷோ ‘ஒய் திஸ் கொலவெறி'.

ஜீ தமிழ் டிவியில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் குத்தாட்டம்

சின்னத்திரை நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்பாளர்கள் தங்களது இசைத்திறமையை பல இடையூறுகளுக்கிடையே வெளிப்படுத்த வேண்டும் என்ற வித்தியாசமான கான்செப்ட்டுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி இது.

இன்றைய எபிசோடில் தமிழ்த்திரையுலக குத்தாட்ட நடிகைகளுடன் நடிகர் பவர் ஸ்டார் பங்கு பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

இதில் பவர் ஸ்டார் பாடலுக்கு ஆடுவது மட்டுமின்றி நடன மங்கைகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது சிறப்பம்சம் ஆகும்.

 

'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!'

வயதானாலும் கவுண்டமணியின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை, என்று 49ஓ படப்பிடிப்பைப் பார்த்த பொதுமக்கள் கமெண்ட் அடித்தனர்.

ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் 49ஓ.

திரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்தவராகத் திகழும் கவுண்டமணி நடிக்கும் 49 ஒ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்...

'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியும் நக்கலும் குறையவே இல்லை!'

ஒரத்த நாட்டில் இருந்து தஞ்சை நோக்கி போய் கொண்டு இருந்த ஒரு பேருந்துப் பயணிகள், வயல் வெளியில் படப்பிடிப்பு நடப்பதையும், அதில் கவுண்டமணி நடித்து கொண்டு இருப்பதையும் பார்த்து பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டார்களாம்.

ஆவலோடு கவுண்டமணி இருக்கும் இடத்துக்குப் போய் பார்த்தால், 'நிஜமாகவே கவுண்டர் விவசாயியாக மாறி விட்டாரோ' எனும் அளவுக்கு இயல்பாக, ஒரு விவசாயியாகக் காட்சி தந்தாராம் கவுண்டர்.

பார்க்கப் போனவர்களுக்கு ஒரு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில், அவர்கள் அருகில் வந்த கவுண்டர், ஒவ்வொருவரையும் நலம் விசாரித்ததோடு அவருக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார்.

அங்கிருந்தவர்கள் அப்போது அடித்த கமெண்ட், 'வயசானாலும் கவுண்டரின் நையாண்டியோ நகைச்சுவை உணர்வோ, சற்றும் குறையவில்லை' என்பது தான் .