இரட்டை வேடங்களில் நடிப்பது உண்மைதான் - ட்விட்டரில் அறிவித்த தனுஷ்

|

சென்னை: தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு, நாம் தட்ஸ் தமிழில் உறுதி இல்லாத ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

தற்போது அந்த செய்தி உண்மைதான் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் " நான் துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் முதன்முறையாக நடிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படத்தைப் பற்றி தனுஷ் கூறும்போது "தற்போது நான் நடித்து வரும் பிரபுசாலமனின் படம் முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவோம்.

இந்தப்படத்தில் இரண்டுநாயகிகளில் ஒருவராக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் நிறுவனமும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லட்சுமி மேனன் நடிக்கிறார் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் தனுஷ் அதுகுறித்து எந்த ஒரு தகவலையும் இந்த அறிவிப்பில் பகிர்ந்து கொள்ளவில்லை.

கடைசி வரைக்கும் லட்சுமி மேனனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே....

 

Post a Comment