நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக சொந்த தாடியுடன் நடிப்பதாக தயாரிப்பாளர் தாணுவிடம் சொல்லி சந்தோஷப்பட்டாராம் ரஜினி.
பொதுவாக விக் வைத்துக் கொள்வதை விரும்பாதவர் ரஜினி. கொடி பறக்குது படத்துக்காக விக் வைத்து நடித்தபோது இதை பத்திரிகை பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அவர் விக் வைத்தே தீர வேண்டிய கட்டாயம்.
இப்போது கபாலி படத்துக்காக சொந்தத் தாடியுடன் நடிக்கிறார். "இத்தனை ஆண்டுகளில் சொந்தத் தாடியுடன் வள்ளியில் நடித்தேன். ஆனால் இந்த அளவு தாடி வைத்து நடிப்பது இதுதான் முதல் முறை," என்று தயாரிப்பாளர் தாணுவிடம் கூறினாராம் ரஜினி.
கபாலி படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்குகிறது. பிறகு மலேசியா பயணமாகிறார்கள் படக்குழுவினர்.
கபாலி ஷூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியாவில் தொடங்கும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் விசா உள்ளிட்ட சில காரணங்களுக்காக ஒரு மாதம் தள்ளிப் போட்டனர்.
இப்போது முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பை சென்னையிலும், அதன் பிறகு மீதிப் படப்பிடிப்பை மலேசியாவிலும் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Post a Comment