கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்நெக்கர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் படுக்கையில் பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்கு 911 எண்ணில் அர்னால்டு வீட்டில் இருந்து அழைப்பு வந்ததாகவும், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் அந்த இணையதளம் தெரிவித்திருந்தது.
இதை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் அர்னால்டின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த செய்தி வெளியான மறுநாளே அர்னால்டு உணவகம் ஒன்றுக்கு வந்திருந்ததை பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.
அர்னால்டு இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment