சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார், நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று நடிகர் விஷால் அறிவித்து இருக்கிறார்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஷால் தலைமையிலான குழுவினர் மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக நடிகர்-நடிகைகள், மற்றும் திரைப்படத்துறையின் முக்கிய பிரமுகர்ள் அனைவரையும் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
மேலும் ‘நாங்கள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்' என்ற கோரிக்கையை முன்வைத்து தங்கள் அணிக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர்.
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கும் சென்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள, நாடக நடிகர்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர்.
2 தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷால் ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை தனது பிறந்தநாளை நலத்திட்ட பணிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.
மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளின் படிப்புக்கு முழு உதவியும் தான் செய்வதாக தனது பிறந்தநாளில் அறிவித்து இருக்கிறார்.
ஒருவழியாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்பு தற்போது மீண்டும் நடிகர் சங்க தேர்தல் குறித்து விஷால் நடிகர் விஷால் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார், நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்' என்று தெரிவித்து இருக்கிறார்.
சங்கத் தேர்தல் களை கட்டுகிறது போல...
Post a Comment