தேசிய விருதை சூப்பர் ஸ்டாருக்கு சமர்ப்பிக்கிறேன் ! - நடிகர் தனுஷ்

|

Tags:


சென்னை: ஆடுகளம் படத்துக்காக கிடைத்த தேசிய விருதினை தனது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சமர்ப்பிப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரு வாரங்களாக ரஜினி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 2 தேசிய விருதுகளும், ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது ட்விட்டரில் தனுஷ் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"இந்த தேசிய விருதை ரசிகர்கள் சார்பாக என் மாமனார் ரஜினிக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவர் விரைந்து நலம் பெற்று வரவே இந்த சமர்ப்பணம். அவர் குணமாகி வந்த பிறகுதான் தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவேன். இந்த விருதுக்காக என்னை வாழ்த்திய கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்!"
 

Post a Comment