பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையை இயக்குனர் அனில் ஷர்மாவின் தம்பி கபில் ஷர்மா படமாக எடுக்கவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கையில் உள்ள இரகசியங்கள் எல்லாம் தற்போது வெளிவரப்போகிறது. இந்த படத்தில் ரேகா கதாபாத்திரத்தில் பிபாஷா பாசு, ஸ்ரீதேவி அல்லது ராணி முகர்ஜியை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து இயக்குனருக்கு பழக்கமான ஒருவர் கூறியதாவது,
ரேகாவின் வாழ்க்கை ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம். இதற்கான திரைக்கதையை கபில் எழுதியுள்ளார். அவர் சினிமாத் துறை சார்ந்த படம் ஒன்றை எடுக்க விரும்புகிறார் என்றார்.
ரேகா வாழ்க்கையில் அமிதாப் பச்சன், கிரண் குமார், வினோத் மெஹ்ரா மற்றும் ஜெயா பச்சனுக்கும் பங்கு உள்ளது. இவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.
இது குறித்து கபில் ஷர்மா கூறியதாவது,
ஒரு காலத்தில் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த ரேகாவின் வாழக்கையை திரைப்படமாக எடுக்கிறேன். பாலிவுட் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தின் பெயர் சிதாரே. இதில் 7 முதல் 8 முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும். அதற்கான நடிகர்களை நான் இன்னும் தேர்வு செய்யவில்லை.
ரேகாவின் சினிமா வாழ்க்கை, உறவுகள், வாழ்வின் ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Post a Comment