விஜயகாந்த் பிறந்த நாளில் 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

|


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வருகிற 25-ந் தேதி 159 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் அவரது கட்சியினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினம் ஆகஸ்ட் 25-ம் தேதி வருகிறது. அன்று பிறக்கும் 159 குழந்தைகளுக்கு மத்திய சென்னை தேமுதிக சார்பில் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. வட பழனி கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடக்கிறது. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

புரசைவாக்கம் மாநகராட்சி பள்ளிக் கூடத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கப்படுகிறது. வில்லிவாக்கம் பஸ் நிலைய பகுதியில் 1059 மரக்கன்றுகள் நடும் முகாம் நடக்கிறது. மத்திய சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 7 பகுதிகளில் 70 ஆயிரம் பேருக்கு வேட்டி-சேலைகளும் வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்தும், இனிப்பும் வழங்கப்படுகிறது.

59 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்களும், 59 ஊனமுற்றோருக்கு 3 சக்கர வண்டிகளும் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க. தலைவர் க.செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
 

Post a Comment