8/22/2011 11:22:58 AM
'புலிவேஷம்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. ஆர்.கே வேர்ல்ட்ஸ் தயாரித்துள்ள படம், 'புலிவேஷம்'. இதில் ஆர்.கே ஹீரோ. சதா ஹீரோயின். முக்கிய வேடங்களில் கார்த்திக், திவ்யா பத்மினி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். 26ம் தேதி ரிலீசாகும் படம் பற்றி ஆர்.கே கூறியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் பசு குணமும், புலி குணமும் மறைந்திருக்கிறது. சூழ்நிலைகளைப் பொறுத்தே அந்த குணங்கள் வெளிப்படும். அப்பாவியைச் சீண்டினால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதே படத்தின் மையக்கரு. பி.வாசு, ஜனரஞ்சகமான விஷயங்களை கமர்சியலாக தரும் இயக்குனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 'எல்லாம் அவன் செயல்', 'அழகர் மலை', 'அவன் இவன்' படங்களில் பார்த்த ஆர்.கேவா இது என்று, ரசிகர்கள் வியப்பார்கள். அந்தளவு விசுவாசம் மிகுந்த வேலைக்காரனாக என்னை மாற்றியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளேன். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. 200 பிரிண்டுகளுக்கு மேல் போட்டுள்ளோம். இதை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.
Post a Comment