8/23/2011 12:13:24 PM
சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. இதனால் அதிக தெலுங்கு திரையரங்குகளில் தமிழ் படங்கள் ஓடி வருகின்றன. சமீபத்தில் தமிழில் ஹிட்டான ‘நான் மகான் அல்ல’, ‘தெய்வத்திருமகள்’ என பல தமிழ் திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி இந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் தமிழ் இயக்குனர்களின் மதிப்பும் தெலுங்கில் உயர்ந்துள்ளது. அந்தவகையில் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல படம் ஜுனியர் என்டிஆரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சுசீந்திரனை தொடர்பு கொண்ட அவர் தனக்கு ஒரு படம் இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். தற்போது விக்ரமை வைத்து ராஜபாட்டை படத்தை இயக்கி வருகிறவர் அப்படம் முடிந்ததும் ஜுனியர் என்டிஆருக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்வதாக உறுதியளித்துள்ளார். ஜுனியர் என்டிஆர் மட்டுமின்றி, தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் தமிழ் இயக்குனர்களையும், தமிழ்ப் படங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
Post a Comment