இளையராஜா இசையில் பிரகாஷ்ராஜ் படம்
8/23/2011 12:16:10 PM
பிரகாஷ்ராஜ் பல படங்கள் தயாரித்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. மராத்தி படம் ஒன்றை தமிழில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கவிருப்பது தெரிந்திருக்கும். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இயக்குனராக பிரகாஷ்ராஜுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் கன்னடத்தில். ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் படத்தை கன்னடத்தில் பிரகாஷ்ராஜ் இயக்கினார். இப்போது மராத்திப் படமொன்றை தமிழில் ரீமேக் செய்கிறார். பிரகாஷ்ராஜின் மொழி, பயணம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.குகன் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
Post a Comment